234 தொகுதிகளிலும் நிற்பவர் கலைஞர் - உதயசூரியன் என்பது மட்டும்தான் உங்களுடைய பார்வையில் இருக்கவேண்டும்!

தி.மு.கவின் வெற்றியின்மூலம்- அடமானம் வைக்கப்பட்ட .தி.மு..வையும் மீட்க முடியும்!

‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்!'' காணொலி சிறப்புக் கூட்டத்தில் தமிழர் தலைவர்

சென்னை, ஜன. 11-   234 தொகுதிகளிலும் நிற்பவர் கலை ஞர் - உதயசூரியன் என்பது மட்டும்தான் உங்களுடைய பார்வையில் இருக்கவேண்டும்; தி.மு..வின் வெற்றியின்மூலம்தான் - அடமானம் வைக்கப்பட்ட .தி.மு.. வையும் மீட்க முடியும் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்''

சிறப்புக் கூட்டம்!

2.1.2021   அன்று மாலை  காணொலிமூலம்  நடைபெற்ற ‘‘தமிழ்நாடும் - தேர்தல் அரசியலும்!'' சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள்  உரையாற்றினார்.

அவரது உரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:

 மோடிமீது இருந்த நம்பிக்கை

நாளுக்கு நாள் நீர்த்துப் போகிறது

ஆகா, மோடிமீது மிகப்பெரிய அளவிற்கு மக்கள் எல்லோரும் ஈர்த்துப் போயிருக்கிறார்கள் என்கிறார்கள்; ஈர்த்துப் போகவில்லை - மோடிமீது இருந்த நம்பிக்கை நாளுக்கு நாள் மக்களுக்கு நீர்த்துப் போய் வருகிறது.

தொடக்கத்தில் எத்தனை கட்சிகள் என்.டி.. என்று சொல்லக்கூடிய தேசிய ஜனநாயக முன்னணியில் இருந் தன. இப்பொழுது எத்தனைக் கட்சிகள் இருக்கின்றன?

தமிழகத்தில், தி.மு.. தலைமையில் உள்ள கூட்டணி, கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 40 இடங்களில் புதுச்சேரி உள்பட 39 இடங்களில் வெற்றி பெற்று நிலை நாட்டி இருக்கிறது.

தி.மு.. தலைவரின்மிஷன் 200'

மிஷன் 200' என்று தளபதி மு..ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். 200 இடங்களுக்கு மேல் தி.மு.. கூட்டணி பெறும்.             இது ஆசையல்ல - மக்கள் தயாராகிவிட்டார்கள். இந்த ஆட்சியில் மக்கள் அவ்வளவு அவதியைப் பெற் றிருக்கிறார்கள்.

2019 இல் பா... தலைமையில், தேசிய ஜனநாயக முன்னணி கூட்டணியில் 20 கட்சிகள் இருந்தன. கூட்டணி யில் அங்கம் வகித்த சிவசேனா, மகாராட்டிர மாநில சட்டமன்றத் தேர்தலில், பா...வின் மோசடி அரசியலை எதிர்த்து வெளியேறியது  மிக முக்கியமான மாநிலம் மகா ராட்டிரம். இன்னும் கேட்டால், ஆர்.எஸ்.எஸ்.சினுடைய தலைமையிடம். அங்கேயே அவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வி அடைந்தார்கள்!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, இன்னொரு பெரிய கட்சியான, சிரோன்மணி அகாலி தளத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர் கவுர் பதவி விலகுவதாக அறிவித்தார். பின்னர், அந்தக் கட்சியும் பா... கூட்டணியிலிருந்து வெளியேறியுள்ளது!

தற்போது 16 கட்சிகள், அய்க்கிய ஜனதா தளம், .தி.மு.. தவிர்த்து ஏனைய சிறிய கட்சிகள் மட்டுமே கூட்டணியில் இருக்கின்றன.

இப்பொழுதும் சில மாநிலங்களில் பா... ஆட்சியை எப்படி அமைத்திருக்கிறார்கள்? எம்.எல்.,க்களை விலைக்கு வாங்கித்தான். 61 பேருக்குமேல் வழக்கு இருக்கிறது.

விடுதலை'யின் தலையங்கம்!

இன்றைய (ஜனவரி 2) ‘விடுதலை'யின் தலையங்கத் தைப் படித்துப் பார்த்தால் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

கருநாடகத்தில் அந்த சூழ்நிலை - மற்ற இடங்களிலும், ஒரு கட்சியிலிருந்து  இன்னொரு கட்சிக்கு மாறுவது - ஒரு கட்சியிலிருந்து ஆட்களைப் பிடிப்பது;  குஜராத்தில் ஒருவர் சொல்கிறார், எங்களுக்குப் பத்து கோடி ரூபாய்  கொடுக்கப்பட்டது என்ற சொன்ன செய்திகள் வெளி வருகின்றன.

எனவேதான், பண பலம், சினிமா பலம், கார்ப்பரேட் ஊடகங்களை வைத்துக்கொண்டு தாங்கள் எல்லாவற் றையும் செய்யலாம் என்ற நிலை.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்று போராடுகின்ற விவசாயிகள் என்ன கேட்கிறார்கள்?  இந்த சட்டங்களை எதிர்த்து எந்த நீதிமன் றத்திலும் வழக்குப் போட முடியாது என்று அரசியல் சட்டத்திற்கு விரோதமாக ஒரு பிரிவு இருக்கிறது என்று சட்ட நிபுணர்கள் சொல்கிறார்களே, அதற்கு இதுவரையில் ஒரு பதில் உண்டா?

என் பிணத்தின்மீதுதான் ஜி.எஸ்.டி. வரவேண்டும் என்றார் முன்பு மோடி!

பண மதிப்பிழப்பு இழப்பினால் மிகப்பெரிய அளவிற்கு மக்கள் பாதிக்கப்பட்டார்கள். ஜி.எஸ்.டி.யைப்பற்றி குஜராத் முதலமைச்சராக இந்த மோடி, என்ன பேசினார்? என் பிணத்தின்மீதுதான் ஜி.எஸ்.டி. வரவேண்டும் என்று பேசினார். அதை மறுக்க முடியாது, ஆதாரங்கள் உண்டு.

வேளாண் சட்டங்கள், குடியுரிமைத் திருத்த சட்டம், நெசவாளர் சட்டத் திருத்தம்  இவையெல்லாம் இன்றைக்கு நாடு முழுவதும் பிரச்சினையாகத்தான் இருக்கின்றன.

அண்டை நாடுகளுடன் எந்த அளவிற்கு உறவு இருக் கிறது? அதோடு வெறுப்பு  அரசியல். லவ் ஜிகாத் என்று அரசியல் சட்டத்திற்கு, நீதிமன்றத்திற்கு விரோதமாக இருக்கிறது.

ஒரு மனிதன் உண்ண உரிமை, எண்ண உரிமை, திருமண உரிமை என்பதெல்லாம் அவனுடைய அடிப் படை உரிமைகளா£கும். அந்த அடிப்படை உரிமைகளை யெல்லாம் பறிக்கக் கூடிய அளவிற்கு மத்திய அரசு நடந்துகொண்டு வருகிறது.

கார்ப்பரேட்டுகளுக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள்

வேலைவாய்ப்பின்மைதானே இன்று நாடு முழுவதும் அதிகமாக இருக்கிறது. ஏழை, எளியவர்களுக்கு, விவசாயிகளுக்கு இடமில்லை - அதேநேரத்தில், கார்ப்பரேட்டு களுக்கு ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு சலுகைகள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. ஜி.டி.பி. என்று சொல்லக்கூடிய மொத்த வருமானம் 4.5 சதவிகிதமாகத்தான் இருக்கிறது.

மத்திய அரசை எதிர்த்து யாராவது கேள்வி கேட்டால், உடனே சி.பி.அய்., வருமான வரித்துறையினரை வைத்து மிரட்டுகிறார்கள்.

ஒரே ஜாதி என்று சொல்வதற்கு

அவர்கள் தயாராக இல்லை? ஏன்?

ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே மதம், ஒரே மொழி என்று சொல்கிறார்கள்; ஆனால், ஒரே ஜாதி என்று சொல்வதற்கு அவர்கள் தயாராக இல்லை.

இது பெரியார் மண்; திராவிட மண்; ஆகவேதான், உங்களுடைய வித்தைகள் இங்கே பலிக்காது; நீங்கள் எத்தனை பேரை அழைத்து வந்தாலும், எத்தனைப் பட்டாளங்களை அழைத்து வந்தாலும்,  அதைப்பற்றி நாங்கள் கவலைப்படமாட்டோம்.

‘‘நீங்கள் டயர் நக்கிகள்''

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் கொடுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அவர்கள் உள்பட அனைவரும் தமிழக அரசை வலியுறுத்தினார்கள்.  ஆனால், அப்பொ ழுது கொடுக்காத தமிழக அரசு, இப்பொழுது 2,500 ரூபாய் கொடுக்கிறார்கள்; இதைப்பற்றி தளபதி ஸ்டாலினோ மற்றவர்களோ சொல்வதற்கு முன்பாக, பா...வில் புதிதாக சேர்ந்த ஓய்வு பெற்ற ஒரு அய்.பி.எஸ். அதிகாரி (அப்பொழுது ரஜினி கட்சி தொடங்கவில்லை என்று அறிவிக்கவில்லை) ‘‘இப்படி,  பணத்தை வாங்கிக்கொண்டு ஓட்டுப் போட்டீர்கள் என்றால், டயரைக் கும்பிடுகின்ற வர்களின் ஆட்சியில்தான் நீங்கள் இருப்பீர்கள்'' என்றார். இதற்குக் காரணம் என்ன? ஒரு கட்சியின் தலைவருடைய மகன், ‘‘நீங்கள் டயர் நக்கிகள்'' என்று அசிங்கமான வார்த்தையில் சொன்னார். அந்தக் கட்சியின் தலைவர், ‘‘அய்யோ என்னுடைய மகனுக்கு முதல்வர் பதவி கிடைக்கவில்லையே - இத்தனை தேர்தலில் நாம் நின்றோம் அது முடியவில்லையே - இது என்னுடைய குறையா? உங்களுடைய குறையா?'' என்று தொண்டர் களைப் பார்த்து அவர் அலசி ஆராய்ந்து கொண்டிருக் கிறார்.

அந்த ஓய்வு பெற்ற அய்.பி.எஸ். அதிகாரி, ‘‘2,500 ரூபாய் கொடுக்கிறீர்களே, அது எங்கே இருந்து வந்த பணம் என்று தெரியும்'' என்று சொல்கிறார்.

அவர்  அப்படி சொன்னவுடன், தமிழக அமைச்சர் ஒருவர், ‘‘நாங்கள் 2,500 ரூபாய் கொடுக்கின்ற பணம் இப்படி வந்தது என்று சொல்கிறீர்களே, நீங்கள் 6 ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோம் என்று  சொல்கிறீர்களே, அதுவும் அப்படி வந்த பணம்தானே?'' என்று கேட்கிறார்.

நம்முடைய வேலை மிக எளிதாக ஆகிவிடும்

ஆக, இரண்டு பேருமே எப்படிப்பட்டவர்கள் என் பதை, அவர்களுடைய வாக்குமூலத்தை பொதுமக்கள் மத்தியில் சொன்னாலே போதுமானது, நம்முடைய வேலை மிக எளிதாக ஆகிவிடும்.

ஒரு செய்தியை உங்களுக்குச் சொல்கிறேன்.

நாங்கள் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவிற்கு வளர்ந் திருக்கிறோம், வளர்ந்து கொண்டிருக்கிறோம் என்று ஆர். எஸ்.எஸ்., பா...வினர் சொல்கிறார்களே, அதனுடைய ரகசியம் அல்லது எப்படிப்பட்ட சூழ்நிலை அங்கே இருக் கிறது என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். இளைஞர்களே, மற்றவர்களே  நீங்கள் ஏமாந்துவிடக் கூடாது; இதை நான் சொல்வது என்பது உங்களுக்காக மட்டுமல்ல - நீங்கள் ஒவ்வொருவரும் 10 பேரிடம் பிரச் சாரம் செய்யவேண்டும். இப்போது வீட்டுக்கு வீடு திண்ணைப் பிரச்சாரம் செய்யவேண்டும். இதற்குமுன் தெருமுனைப் பிரச்சாரம்தான் செய்திருப்பீர்கள்.

ஆர்.எஸ்.எஸ். தென்னிந்திய செயலாளரின்

ஒப்புதல் வாக்குமூலம்!

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தென்னிந்திய செயலாளர் எஸ்.இராஜேந்திரன் என்பவர் சொல்கிறார்,

‘‘மற்ற மாநிலங்களில் எங்களால் காலூன்ற முடிந்தது; ஆனால், தமிழ்நாட்டில் அப்படி செய்ய முடியவில்லை. தமிழ்நாட்டில் பா...வை வளர்ப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்றால், இது வடநாட்டார் கட்சி என்ற பெயரை மாற்றுவதற்காக, எங்களுடைய தமிழ் அடையா ளத்தை நாங்கள் காட்டவிருக்கிறோம். நாங்கள் ஆர்.எஸ்.எஸ். என்று நேரிடையாக வந்தால், அது சரிப்படாது;  ஆகவேதான் நாங்கள் வேறு பெயரில், தமிழ்நாட்டில் மட்டும் ‘‘தெய்வீகத் தமிழ்ச் சங்கம்'' என்ற பெயரில் வருகிறோம். ஏனென்றால், தெய்வம் என்றால் ஏமாந்துவிடு வார்கள். இதனை உருவாக்கியதன் நோக்கம் எங்களுக்குக் கிடைக்கவில்லை'' என்று அவர்களே சொல்கிறார்கள் - சில பேட்டிகளில்!

‘‘ஆர்.எஸ்.எஸ். அடையாளத்துடன் நாங்கள் வீட்டிற்கு வீடு செல்லும்பொழுது, எங்களுக்கு வரவேற்பு இல்லை; ஆகவேதான், நாங்கள் பெயரை இப்படி மாற்றினோம்'' என்று சொல்லக் கூடிய அளவிற்கு இருக்கிறார்கள்.

கடவுள் நம்பிக்கை வேறு;

ஓட்டு போடுவது வேறு

கடவுள் நம்பிக்கை வேறு; ஓட்டு போடுவது வேறு என்பதைத் தெளிவாகத் தெரிந்தவர்கள்தான் திராவிட மண்ணில் இருப்பவர்கள், பெரியார் மண்ணில் இருக்கும் வாக்காளர்கள்!

1971 இல் ராமனைக் காட்டினீர்கள்,2019 இல் கிருஷ்ண னைக் காட்டினீர்கள், ஆனால், ஏமாந்துதான் போனீர்கள்.

வெற்றியின் முகத்தில் தி.மு.. கூட்டணி இருக்கிறது - திராவிடம் வெல்லும் என்பதற்கு என்ன அடையாளம் என்றால், அதை வெறும் ஆசையின் அடிப்படையில் சொல்லவில்லை; வெறும் ஆர்வத்தினால் சொல்லவில்லை. எதிரிகளுடைய வாக்குமூலத்தை எடுத்துத்தான் சொல்லுகி றோம்.

பா... சினிமா நடிகரை நம்பியது; அவர் கைவிட்டு விட்டவுடன், இப்பொழுது அடுத்தபடியாக என்ன செய்யலாம் என்று யோசிப்பார்கள். கட்சியை பிளப்பதற்கு என்ன வழி என்ற திட்டத்தை வகுத்து வைத்திருக்கிறார்கள்.

எதிரே இருப்பது பிணி - மக்களுக்கு ஏற்பட்ட பிணி!

எது நடந்தாலும் நண்பர்களே, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையில் அமைந்திருக்கின்றது "அணி" என்பது, இது அணிக்கு - எதிரே இருப்பது பெறும் பிணி!

மக்களுக்கு ஏற்பட்ட பிணி! இந்தப் "பிணி" அவர்களுக்குள்ளேயே இருக்கிறது. அதை சரிப்படுத்திக் கொள்வது என்பது முடியாது. நான் ஏதோ, ஆத்திரத்திலோ, கோபப்பட்டோ சொல்லவில்லை. நாங்கள் யாருக்கும் விரோதிகள் அல்ல.

அடமானம் வைக்கப்பட்ட .தி.மு..வையும், தி.மு.கவின் வெற்றியின்மூலம் மீட்க முடியும்!

கடைசியாக ஒன்றைச் சொல்லுகிறேன், ‘‘தமிழகத்தை மீட்போம்'' என்று குரல் கொடுத்திருக்கிறார் தளபதி அவர்கள்.

திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய மகத்தான வெற்றியை நீங்கள் கொடுப்பதின்மூலம், திராவிடம் வெல்லும் என்பது முக்கியல்ல - அதைவிட மிக முக்கியம் - தமிழகத்தை மீட்போம் என்று சொல்லுவதைவிட, இன்னொரு லாபமும் அதில் இருக்கிறது - தமிழகத்தை மீட்பதோடு, .தி.மு.. தோழர்கள், தொண்டர்கள் இருக் கிறார்களே, எதையும் எதிர்பாராமல் உழைக்கின்ற தோழர் கள், சகோதரர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், .தி.மு.., அடகு வைக்கப்பட்ட, அடமானம் வைக்கப் பட்ட .தி.மு..வையும், இந்த வெற்றியின்மூலம் மீட்டு உங்களுக்குத் தரக்கூடிய வாய்ப்பு ஏற்படும்.

ஆகவே, திராவிடம் வெல்லும் என்பது உறுதி. எனவேதான், இடையில் வந்தவர்கள் வியூகங்களை வகுத் தவர்கள் - சக்கரங்களையும் காணவில்லை - வியூகத்தை யும் காணவில்லை- இப்பொழுது அவரை கேலி செய்து, அரைக்கால் சட்டையிலும், பனியனையும் போட்டு விமர் சனம் செய்கிறார்கள். அதுபோன்று நாங்கள் விமர்சனம் செய்யமாட்டோம்.

கடைசியில் வெற்றி பெற போவது திராவிடம்தான். திராவிடம் வெல்லும்!

ரஜினியைப் பொறுத்தவரையில், அவருடைய உடல் நலம் மிகவும் முக்கியம். இன்னொருவர் அரசியல் துற வறமே போய்விட்டார். இன்னொருவர் வாய்ஸ் கொடுப் பேன், வாய்ஸ் கொடுப்பேன் என்கிறார். அதையும் 'இந்து' பத்திரிகையில் தெளிவாக எழுதியிருக்கிறது. ஏற்கெனவே அவர் வாய்ஸ் கொடுத்து ஒரு பயனும் இல்லை. எனவே, அவர் வாய்ஸ் கொடுத்தாலும், அவர் பாய்ஸ் ஒருபக்கத்தில் சங்கடத்தில் இருந்தாலும், அவர் வாய்ஸ் கொடுப்பார் என்று இவர்கள் நாய்ஸ் கொடுத்தாலும், எது கொடுத்தாலும், கடைசியில் வெற்றி பெற போவது திராவிடம்தான். திராவிடம் வெல்லும்!

இப்போது இல்லாவிட்டால், எப்போதுமே இல்லை என்று அவர் சொன்னார் அல்லவா! இப்போது தமிழ்நாடு ஏமாந்தால், எப்போதுமே நம்மினம் எழுச்சி பெற முடியாது என்பதை நினைவில் வைத்துக் கொண்டு,

இதைக் கேட்கின்றவர்கள் வாக்களிப்பது முக்கியமல்ல - இதைக் கேட்டுவிட்டு நீங்கள் ஒவ்வொருவரிடமும், ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று தெளிவாக விளக்குங்கள். நாமே தேர்தலில் நிற்பது போன்று, நாமே வெல்வது போன்று உழைக்கவேண்டும்.

கூட்டணி கட்சியினருக்கும் -

தி.மு..வினருக்கும் வேண்டுகோள்!

கடைசியாக கூட்டணிக் கட்சி நண்பர்களுக்கும் சொல் கிறேன், திராவிட முன்னேற்றக் கழக சகோதரர்களுக்கும், உங்களுக்காக உழைக்கக் கூடியவன், திராவிடர் இயக்கத் தின் மூத்தவன் என்கிற முறையில் உரிமையோடும், உற வோடும் உங்களுக்குச் சொல்லக் கடமைப்பட்டு இருக்கிறேன்.

234 தொகுதிகளிலும் நிற்பவர் கலைஞர் - உதயசூரியன் என்பது மட்டும்தான்

உங்களுடைய பார்வையில் இருக்கவேண்டும்

தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளிலும் நிற்பவர் கலைஞர் - உதயசூரியன் என்பது மட்டும்தான் உங்களு டைய பார்வையில் இருக்கவேண்டும். சிலருக்கு தேர்தலில் நிற்பதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கும்; சிலருக்கு வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும். அதைப்பற்றியெல்லாம் கிஞ்சிற்றும் கவலைப்படாமல், அனைவரும் வெற்றி ஒன்றே குறிக்கோள் என்று நினைத்து உழைக்கவேண்டும்.

அதேபோன்று கூட்டணி கட்சியில் இருப்பவர்களும், யாருக்கு எந்த இடங்களை ஒதுக்கினாலும், வெற்றி ஒன்றே இலக்கு என்று கருதி மட்டுமே உழைக்கவேண்டும்.  மனம் திறந்து பேசி, ஒருவருக்கொருவர் கைகோத்து நிற்கவேண் டும். இந்த  சங்கிலி, பலம் வாய்ந்த சங்கிலிகளாக இருக்க வேண்டும். வெற்றி நிச்சயம் - தாராளமாக நாம் வாகை சூடக்கூடிய வாய்ப்புகள் ஏற்படும், இன்னும் சில மாதங் களில் நல்ல மாற்றம் ஏற்படவேண்டும்.

இதற்கு முன்பு ‘‘மாற்றம் மாற்றம்'' என்று சொன்னார்கள். ஆனால் மக்கள் சந்தித்தது ஏமாற்றம். ஆனால், நாம் வலியுறுத்தும் அரசியல் மாற்றம் என்பது சமூகரீதியான ஒரு மாற்றம்; கொள்கை ரீதியான  ஒரு தெளிவு -  பலமான மக்களுடைய உழைப்பு - ஏழை, எளிய மக்கள், ஒடுக்கப்பட்ட மக்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, பழங்குடி மக்கள் - காலங்காலமாகக் காத்திருந்து பெற்று - கடந்த 5 ஆண்டுகளாக பறிக்கப்பட்ட உரிமைகள் மீட்டெடுக்கப்பட இந்த வாய்ப்பை விட்டால், வேறு வாய்ப்பில்லை என்பதற்காக, தமிழ்நாட்டு தேர்தலை நாம் வெறும் ஆட்சி மாற்றம் என்று மட்டும் பார்க்காமல், ஒரு இனத்தின் போர் - இனத்தின் மீட்சியாகப் பார்க்கவேண்டும் என்று கேட்டு,

வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி கூறி, என்னுரையை முடிக்கின்றேன்.

திராவிடம் வெல்லும்! திராவிடம் வெல்லும்!! திராவிடம் வெல்லும்!!!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!!

நன்றி வணக்கம்! 

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்

Comments