பெரியார் கேட்கும் கேள்வி! (215)

இல்லம் தீப்பற்றி எரியும்போது பிடில் மீட்டி இன்பம் காண்பதுதான் பார்ப்பனியத்தின் பரம்பரைக் குணம். காந்தியார் கொல்லப்பட்டபோது இன்பவாரிதியில் மூழ்கியவர்களாய்ப் பார்ப்பனர்கள் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர்.

சுட்டுப் பொசுக்குகின்ற கொடும் பாலையில் தூர வழி தொடர்ந்து வருகின்ற பிரயாணியை, கூட்டத்தில் ஒரு மரவுச்சியில் மறைவாக இருந்து கொண்டு, எறிந்த எறியீட்டி - அம்பு முதலியவற்றால் அவன் தாக்குண்டு, துடிதுடித்துக் கதறி, தண்ணீர், தண்ணீர் என்று பரிதவித்து, மேனி கொப்பளிக்கும் செந்நீர்த் துளியை மிகுந்த ஆவலுடன் பருகித் தடுமாறித் தத்தளித்துச் சாகும் நிலை யைக் கண்டுததிங்கிணத்தோம்" போட்டு ஆடுவார்களாம் காட்டுமிராண்டிகள். காட்டுமிராண்டிகளின் இந்தச் செய லுக்கும், கடை கெட்ட கபோதித்தனம் வாய்ந்த இந்த உழுத்த போக்குக்கும் ஏதாவது வித்தியாசமிருக்கிறதா?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 25.12.1948

மணியோசை

Comments