பார்ப்பன
அடிமையான அரசாங்கத்தினரின் பேடிச் செயலுக்குப் பார்ப்பனியம் திரை போட்டு மறைக்கும் பசப்பு வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருக்கிறது. பரம்பரை பழக்கம்! திரையை மறைத்து, மறைத்து அதற்குத் திவ்யத்தைக் கற்பித்துப் பின் திரையைத் தூக்கித் தூக்கிக் காசு பறிக்கும் புத்தி பார்ப்பனியத்துக்கு கோவில் அளவோடு நிற்கவில்லை. அரசியலிலும் அந்த வேலையை சர்வ சாதாரணமாக நடத்துகிறார்களா - இல்லையா?
- தந்தை
பெரியார், “குடிஅரசு”, 25.12.1948
‘மணியோசை’