பெரியார் கேட்கும் கேள்வி! (213)

 ஏன் மதுவிலக்குத் திட்டம்? மதுவிலக்கால் ஏற்பட்ட நன்மைகள் என்ன? ஏற்படப் போகும் நன்மைகள் என்ன? அதற்கான அறிகுறிகள் என்ன? இதற்குப் பதில் என்ன?

மதுவிலக்கினால் எத்தனைப் பேர் அதை ஒதுக்கி விட்டார்கள்? மது அருந்தக் கூடாது என்கின்ற வைராக்கியம் நூற்றில் ஒருவருக்காவது ஏற்பட்டுள்ளதா? எப்படியோ ஒன்றுக்கு இரண்டாகச் செலவு செய்து கிடைத்ததைக் குடித்து வருகிறார்கள் - இல்லையா?

இப்படி நாம் கேட்பது மதுவிலக்கினால் நமக்கேற்பட்ட வெறுப்பினாலா?

மது விலக்கினால் வேஷதாரிகளான சிலர் பிழைப்பதைத் தடுப்பதற்கும், மது குடிப்பதால் திராவிட ஏழைப் பாட்டாளிகள் தெருவில் நின்று திண்டாடிச் சாகும் கொடுமையைத் தடுப்பதற்கும்,  உண்மையாகவே மதுவிலக்கு வெற்றி பெற ஏதுவான, முறையான நிர்வாக நடைமுறை செயற்பாட்டில் இல்லாதது - ஏன்?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 13.11.1948

மணியோசை

Comments