பெரியார் கேட்கும் கேள்வி! (211)

 

எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும், அதைச் செய்யும் மனிதன், செய்வதற்கு முன் சிந்தனைக்கு வேலை தர வேண்டும் என்பது பொது நியதியாகும். சிந்தனையில் தவறு ஏற்படாதவாறு சிந்திக்க வேண்டும், சிந்தித்ததைச் செய்யும் போது திறம்படச் செய்ய வேண்டும் என்பதும் அதை வற்புறுத்தும் அறிஞர்களின் அனுபவக் கருத்துக்களே!

ஒரு மனிதனின் சொந்தக் காரியங்களுக்குத் தன் சம்பந்தப் பட்ட வரையிலுமே இப்படிப்பட்ட சிந்தனைத் திறமும், செயல் திறமும் வேண்டுமென்றால், பெரிதும் மற்றவர்களையே பாதிக் கின்ற பொதுக் காரியங்களைச் செய்பவர்களுக்கு, செய்ய வேண்டிய கடமையிலுள்ளவர்களுக்கு எப்பேர்ப்பட்ட திறமை வேண்டும்?

- தந்தை பெரியார், “குடிஅரசு”, 13.11.1948

மணியோசை

Comments