21ஆம் நூற்றாண்டிலும் அரசின் அவலம்!

இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல வழியில்லாத தாழ்த்தப்பட்ட மக்கள்!

தருமபுரி, ஜன. 6- தருமபுரி மாவட்டம் அரூர் வட்டம் மந்தி பட்டி கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட ஆதிதிராவிடர் குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசித்து வருகிறார்கள்.

இந்த கிராமத்தில் இறந்தவர்களை எடுத்துச் செல்ல மயான பாதை  வழியில்லாமல் கால காலமாக தனியார் வயல்வெளிகளில் எடுத்துச் செல்லும் அவலநிலை உள்ளது. இறந்தவரின் உடலை எடுத்துச் செல்ல ஒவ்வொரு முறையும் தனியார் நிலங்களுக்குச் சொந் தக்காரர் களுக்கும் ஊர் பொது மக் களுக்கும் பிரச்சினைகள் ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. இது தொடர்பாக பலமுறை மாவட்ட ஆட்சியர் வட்டாட் சியர் அரசுத் துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்த வகையான நடவடிக்கையும் இல்லாமல் உள்ளது.

அதிகாரிகள் கோரிக்கைகளை வாங் கிக் கொண்டு பார்க்கலாம் என்கின்ற ஒற்றை வார்த்தையோடு அனுப்பி வைத்து விடுகிறார்கள். நாட்டில் பல பகுதிகளில் பல மக்களுக்கு மின்சார சுடுகாடு முதல் நிழல் கூட்டங்கள் வரை உடலை எடுத்துச் செல்லும் வாகனங்கள்  வரை வைத்திருக்கின்ற நிலையில் 21ஆம் நூற்றாண்டிலும் இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்ல சாலை வழியில்லாமல் சேற்றிலும் சகதியிலும் எடுத்துச்சென்று அடக்கம் செய்யும் நிலையில்  இருக்கின் றோம். 

இந்த நிலை தொடர்ந்தால் அரசி யல்வாதிகளும் அதிகாரிகளும் எங்கள் கிராமத்திற்கு வரவிடாமல் தடுப்போம் என்று மனமுருக கூறினார் அந்த ஊர் முதியவர்.

Comments