2020ஆம் ஆண்டின் முக்கிய நிகழ்வுகள்

ஜனவரி

ஜன. 1: கேரள சட்டசபையில் குடியுரிமை சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தும் தீர்மானம் எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் நிறை வேற்றப்பட்டது. இந்த சட்டத்துக்கு எதிராக கேரள அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

ஏற்கனவே பல்வேறு கட்சிகள், தனிநபர்கள் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்த நிலையில் முதன் முறையாக குடியுரிமை சட்டத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்த மாநிலம் கேரளா என்பது குறிப்பிடத்தக்கது.

ஜன. 2: மாவட்ட ஊராட்சி, ஒன்றியங்களுக்கு நடந்த உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பில் தி.மு.. முன்னிலை பெற்றது. மாவட்ட ஊராட்சிகளில் தி.மு.. 14 இடங்களையும், .தி.மு. 13 இடத்தையும் கைப்பற்றின. ஊராட்சி ஒன்றியங்களில் தி.மு.. கூட்டணி 2,356 - இடங்களையும், .தி.மு.. கூட்டணி 2,136 இடங்களையும் பிடித்தது.

ஜன. 9: இங்கிலாந்து அரச குடும்பத்தில் இருந்து வெளியே றுவதாக இளவரசர் ஹாரி, இளவரசி மேகன் தம்பதி அறிவித்தனர். மார்ச் 28-இல் இவர்கள் அமெரிக்காவில் குடியேறினர்.

கீழடி அகழாய்வு அறிக்கை 24 மொழிகளில் புத்தகமாக வெளியிடப்பட்டு உள்ளதாக தொல்லியல் துறை ஆணையாளர் .உதயச்சந்திரன் கூறினார்.

ஜன. 27:குடியுரிமை திருத்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி கேரளா, பஞ்சாப், ராஜஸ்தானை தொடர்ந்து மேற்கு வங்காள மாநில சட்டமன்றத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜன. 30: சீனாவில் இருந்து வந்த கேரள - மாணவிக்குகரோனாபாதிப்பு உறுதியானது. இதுவே இந்தியாவில் உருவான முதல் கரோனா பாதிப்பு ஆகும்

ஜன. 31: பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 78,500 பேர் விருப்ப ஓய்வு பெற்றனர்.

பிப்ரவரி

பிப். 7: 70 தொகுதிகளை கொண்ட டில்லி சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. 62.59 சதவீதம் வாக்குகள் பதிவானதாக அதிகாரப்பூர்வமாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த வாக்குகள் பிப். 11-இல் எண்ணப்பட்டது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 62 இடங்களை கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெற்றது. எதிர்க்கட்சி அமைச்சராக பிப். 16-ஆம் தேதி 3-ஆவது முறையாக டில்லி முதல் அமைச்சராக அரவிந்த் கெஜ்ரிவால் பதவி ஏற்றார். -

பிப். 9: காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பிப். 20-இல் வேளாண் மண்டல மசோதா தமிழக சட்டசபையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது.

பிப்.26: சீனாவில் கரோனா பாதிப்பு குறையத் தொடங்கிய நிலையில் அய்ரோப்பிய நாடுகளில் காரோனா தொற்று வேகமாக பரவியது. தென்கொரியா, இத்தாலியில் பலி எண்ணிக்கை உயர்ந்தது. ஸ்பெயின் நாட்டில் ஒரு நட்சத்திர ஓட் டலில் 2 பேருக்கு கரோனா இருந்த தால் அங்கு தங்கியிருந்த 1000 பேர் அடைத்து வைத்து பாதுகாக்கப்பட்டனர்.

மார்ச்

மார்ச் 3: வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகளுக்கு கரோனா அறிகுறி இருந்ததால், இத்தாலி, ஈரான், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய 4 நாட்டு பயணிகள் இந்தியாவில் நுழைய தடை விதிக்கப்பட்டது.

மார்ச் 6: தி.மு.. பொதுச் செயலாளர் பேராசிரியர் .அன்பழகன் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 98.

மார்ச் 12: கர்நாடகத்தில் மரணம் அடைந்த 76 வயது முதியவர் கரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தது ரத்த பரிசோதனை யில் உறுதியானது. இது கரோனா வுக்கு இந்தியாவில் ஏற்பட்ட முதல் பலியாகும்.

மார்ச் 14: கரோனா வைரஸ் தாக்குதலை பேரிடராக மத்திய அரசு அறிவித்தது.

 மார்ச் 16: தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசு வேலையில் முன்னுரிமை அடிப்படையில் பணி நியமனம் செய்யும் வகையிலான சட்ட திருத்த மசோதா தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. டிச. 8-இல் இந்த சட்ட திருத்தத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

கரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டது.

மார்ச் 22: கரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி வேண்டுகோளை ஏற்று மக்கள் ஊரடங்கு கடைப்பிடிக்கப் பட் டது. இதன்படி நாடு முழுவதும் மக்கள் அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருந்தனர். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை முதலில் அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கை மறுநாள் (மார்ச்.23) காலை வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

மார்ச் 24: தமிழ்நாட்டின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை உதயமாகும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் அறிவித்தார்.

ஏப்ரல்

ஏப். 3: வீட்டைவிட்டு வெளியே வந்தால் முகக்கவசம் கட்டாயம் என மத்திய அரசு அவசர உத்தரவு பிறப்பித்தது.

ஏப். 8: இந்தியாவில் தயாரிக்கப்படும் ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரையால் கரோனா வராமல் தடுக்க முடியும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் கூறியது.

ஏப். 14: இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.

ஏப். 15: மார்ச்.25 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக ஊரடங்கில் தளர்வுகள் உருவாக்கி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. ஏப். 20-ஆம் தேதி முதல் கட்டுமான பணிகள், தொழிற்சாலைகள் செயல்படலாம் என்று அறிவிக்கப் பட்டது.

ஏப். 22: இந்தியாவில் கரோனா வைரசால் பாதிக்கப் பட்டவர்கள் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது.

ஏப். .23: கரோனாவால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப் படி உயர்வு ரத்து செய்யப்பட்டது.

ஏப். 27: மத்திய அரசை தொடர்ந்து தமிழக அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப் படி உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

ஏப். 29: காவிரி மேலாண்மை ஆணையத்தை ஜல்சக்தி துறை அமைச்சகத்தின் கீழ் மத்திய அரசு கொண்டு வந்தது.

மே

மே. 12 ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ரத்து செய்யப்பட்டு இருந்த ரயில் சேவை 50 நாட்களுக்குப் பிறகு தொடங்கியது. முதற்கட்டமாக டில்லியில் இருந்து 15 நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

மே. 17: 3-ஆவது ஊரடங்கு முடிவடைந்ததை தொடர்ந்து, மே. 31-ஆம் தேதி வரை 4-ஆம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

மே. 19: இந்தியாவில் கரோனா பாதிப்பு 1 லட்சத்தை தாண்டியது.

மே. 23: துப்புரவு பணியாளரை தூய்மைப் பணியாளர் என்று அழைக்க வேண்டும் என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

மே. 30: நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் ஜூன் 30 வரை ஊரடங்கு நீடிக்கப்படும் என்று 5-ஆம் கட்ட ஊரடங்கு அறிவிப்பு வெளியானது.

மே. 31: சென்னை, செங்கல்பட்டு, காஞ்சீபுரம், திருவள்ளூர் தவிர தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் போக்குவரத்து தொடங்கும் என்றும், அனைத்து கடைகளும் இரவு 8 மணிவரை திறக்கவும் அனுமதிக்கப்பட்டது. தனியார் தொழில் நிறுவனங்கள், 50 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும், குறிப்பிட்ட சில துறை நிறுவனங்கள் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கவும் தமிழக அரசு அனுமதி வழங்கியது. நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய் (46) என்ற கருப்பர் இனத்தவர் காவல் துறையினரின் கட்டுப்பாட்டில் இருந்த போது இறந்தார். இதையடுத்து போராட்டம் தீவிரமடைந்து 25 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

ஜூன்

ஜூன் 6: 3 நீதிபதிகளுக்கு காரோனா தொற்று உறுதியானதால் சென்னை உயர்நீதிமன்றம் மூடப்பட்டது.

உலக அளவில் கரோனாவால் ஏற்பட்டுள்ள உயிர்பலி 4 லட்சத்தை தாண்டியது. இந்தியாவில் பாதிப்பு 2.5 லட்சத்தை நெருங்கியது.

ஜூன் 9: கரோனா தொற்றில் இருந்து மாணவர்களை காக்கும் வகையில் எஸ்.எஸ்.எல்.சி. பொது தேர்வு ரத்து செய்யப்பட்டது. அனைவரும் தேர்ச்சி பெற்றதாக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

ஜூன் 14: நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ படிப்பில் சேரும் அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு.

ஜூன் 18: அய்.நா. பாதுகாப்பு சபையில் இந்தியா தற்காலிக உறுப்பினர் ஆனது. இந்த பதவியில் இந்தியா 2 ஆண்டுகள் இருக்கும்.

ஜூன் 19: கரோனா - பரிசோதனைக்கு நாடு முழுவதும் ஒரே கட் டணம் வசூலிக்க வேண்டுமென மத்திய,மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

ஜூன் 23: தமிழகத்தில் கரோனா பரவுவதை தடுக்க மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல -பாஸ் கட்டாயம் என முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு.

நாடு முழுவதும் 1,540 கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அமைச்சரவை ஒப்புதல்.

ஜூன் 27: தமிழகத்தில் கரோனா சாவு 1,025 ஆக உயர்வு. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 78 ஆயிரத்தை கடந்தது.

ஜூன் 30: இந்தியாவில் அய்தராபாத்தை சார்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கரோனாவுக்கு ஒரு தடுப்பூசியை கண்டு பிடித்துள்ளது. இதற்கு கோவேக்சின் என்று பெயரிடப்பட்டது. இதை ஜூலை மாதத்தில் மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதனை செய்ய அனுமதிக்கப்பட்டது.

ஜூலை

ஜூலை 6: கரோனா காரணமாக தமிழகத்தில் புதிதாக அறிமுகப்படுத்த இருந்த பிளஸ்-1, பிளஸ்-2 பாடத்திட்டம் ரத்து செய்யப்பட்டது. பழைய பாடத்திட்டமே தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.

ஜூலை 14: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

ஜூலை 16: பிளஸ்-2 தேர்வு முடிவுகள் முன்னறிவிப்பின்றி வெளியிடப்பட்டது. 8 லட்சம் பேர் எழுதியதில் 92.34 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

ஜூலை 17: இந்தியாவில் ஒரே நாளில் 34,956 பேருக்கு கரோனா தொற்று உறுதி, பாதிப்பு 10 லட்சத்தை தாண்டியது, சாவு 25 ஆயிரமானது.

ஜூலை 20: இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக விஞ்ஞானிகள் தயாரித்த கரோனா தடுப்பூசி முதல் கட்ட சோதனை வெற்றிபெற்றது

ஆகஸ்ட்

ஆக. 3: தமிழ்நாட்டில் இருமொழி கொள்கையே தொடர்ந்து நீடிக்கும். மும்மொழி கொள்கையை ஏற்கமாட் டோம் என்று எடப்பாடி பழனிசாமி திட்டவட்ட அறிவிப்பு.

ஆக. 4: அமெரிக்காவில் அரசு நிறுவனங்களில்எச்1பிவிசாதாரர்களை பணியமர்த்த தடை விதித்து டிரம்ப் அதிரடி உத்தரவு.

ஆக. 29: மத்திய அரசு 4-ஆவது கட்ட ஊரடங்கு தளர்வுகளை அறிவித்தது மாநிலங்களுக்கு இடையே போக்குவரத்துக்கு தடையில்லை என்று அறிவிக்கப்பட்டது.

செப்டம்பர்

செப். 2: பப்ஜி உள்ளிட்ட 118 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு.

செப். 4: கரோனா பரவலை தடுக்கும் வகையில் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க தவறினால் ரூ.500, முககவசம் அணியா விட்டால் ரூ.200 அபராதம் விதிக்கும் அவசர சட்டம் தமிழக அரசால் நிறை வேற்றப்பட்டது.

செப். 15: அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ கல்வியில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது.

செப். 16: ஜப்பானில் புதிய பிரதமராக யோஷிஹைட் சுகா தேர்வானார்.

தமிழ்நாட்டில் இரு மொழிகொள்கையே நீடிக்கும் என சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக அறிவித்தார்.

செப். 17: வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரோன் மணி அகாலிதள பெண் அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல் பதவி விலகினார்.

அக்டோபர்

அக். 4: பீகார் சட்டசபை தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி பா... கூட்டணியிலிருந்து விலகியது.

அக். 8: தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டியது.

அக். 30 அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.

நவம்பர்

நவ. 3: இங்கிலாந்தில் கொரோனா 2-ஆவது அலை பரவல் அதிகமானதைத் தொடர்ந்து 4 வாரம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

நவ. 6: அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டமாக அரசிதழில் அறிவிப்பாணை வெளியிடப்பட்டது.

நவ. 16: பீகாரில் அய்க்கிய ஜனதாதளம், பா... அடங்கிய கூட்டணி 125 இடங்களை கைப்பற்றி இருந்தது. இதையடுத்து பீகார் முதல் அமைச்சராக 7ஆவது முறையாகவும், தொடர்ச்சியாக 4ஆவது முறையாகவும் நிதிஷ்குமார் பதவியேற்றார்.

டிசம்பர்

டிச. 1: ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி புள்ளி விவரங்களை சேகரிக்க தனி ஆணையம் அமைத்து எடப்பாடி பழனி சாமி உத்தரவிட்டார். இதன்படி டிச. 7-இல் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி குலசேகரன் தலைமை யில் ஆணையம் அமைக் கப்பட்டது.

டிச. 8: டில்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் உள்பட நாடு முழுவதும் முழு அடைப்பு அமைதியாக நடந்தது.

சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

டிச. 20: இங்கிலாந்தில் புதிய கரோனா வைரஸ் பரவுவது கண்டுப்பிடிக்கப்பட்டது.

டிச. 28: தமிழகத்தில் 38ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உதயமானது.

Comments