2018ஆம் ஆண்டில் தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறப்பு தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க

மனித உரிமை ஆணையம் உத்தரவு

சென்னை, ஜன. 26- தடுப்பூசி போடப்பட்ட குழந்தை இறந்த விவகாரத்தில் தமிழக அரசு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கொடுங்கையூரை சேர்ந்த கோபியின் 5 வயது குழந்தை தனிஷ்க £வுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் குழந்தை மயக்க மடைந்த நிலையில், மறுநாள் பரிதாபமாக இறந்தது. மருத்துவர்களின் கவனக்குறைவால் தனது குழந்தை இறந்ததாகவும், எனவே ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோபி மாநில மனித உரிமை ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு நீதிபதி துரை.ஜெயச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி, மருத்துவக்கல்வி இயக்குனரின் அறிக்கை மற்றும் ஆவணங்களை வைத்து பார்க்கும்போது தடுப்பூசி எடுத்துக் கொண்ட பிறகுதான் குழந்தை இறந்துள்ளது. மேலும் குழந்தை இறந்தது மனுதாரருக்கு தாங்க முடியாத இழப்பையும், மன உளைச்சலையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த பரிதாபமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு மனி தாபிமான அடிப்படையில் தமிழக அரசு மனுதாரருக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை 4 வாரத்துக்குள் வழங்க வேண்டும்’ என்று உத்தர விட்டார்.

தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக 

பெயர் நீக்கம், சேர்த்தல் பணி முடிக்கப்படும்

உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் உத்தரவாதம்

சென்னை, ஜன. 26- சென்னை யில் கூவம் ஆற்றங்கரையோரம் வசித்த மக்கள் அப்புறப்படுத்தப் பட்டு, தற்போது சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதிக்கு உட் பட்ட பகுதியில், தமிழ்நாடு குடிசை மாற்று குடியிருப்புகளில் குடியேறி யுள்ளனர்.

அந்த வகையில், ஆயிரம் விளக்கு தொகுதியில் இருந்து 4,188 பேரும், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இருந்து 2,871 பேரும் சோழிங்கநல்லூர் தொகுதிக்கு குடிபெயர்ந்து உள்ளனர். ஆனாலும், அவர்களது பெயர்கள் இந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து அகற்றப்படாமல் உள்ளது. எனவே, இவர்களது பெயர்களை நீக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்” என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஏ.ஏ.நக்கீரன் ஆகியோர் விசாரித்தனர்

தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், “சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, வில்லிவாக்கம், துறைமுகம், அண்ணா நகர் உள்ளிட்ட தொகுதிகளில் இருந்து குடிபெயர்ந்த 12 ஆயிரத்து 32 வாக்காளர்களின் பெயர் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. பெயர் சேர்த்தல், நீக்கம் உள்ளிட்ட அனைத்து பணிகளும் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாக வெளியிடப்படும்” என்று கூறினார். தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

Comments