டிச. 2: தமிழர் தலைவர் பிறந்தநாள் விழா திராவிடர் இயக்க வரலாறு தொடர் சொற்பொழிவு தொடக்கவிழா

நாகர்கோயில், ஜன. 1-  கன்னியாகுமரி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் 88 வது பிறந்த நாள் விழா, திராவிடர் இயக்க வர லாறு தொடர் சொற்பொ ழிவுகள் தொடக்கவிழா நாகர்கோவில் ஒழுகின சேரி பெரியார் மய்யத்தில் 20.12.2020 அன்று நடை பெற்றது

பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் . சிவதாணு  தலைமை தாங்கி உரையாற்றினார். மாநகர துணைத் தலைவர் கவிஞர் செய்க் முகமது கடவுள் மறுப்பு கூறினார்.  மாணவர் கழக பொறுப் பாளர் பொன். பாண்டி யன் வரவேற்புரை ஆற்றி னார். கழக மாவட்ட தலைவர் எம்.எம்.சுப்பிர மணியம்  மாவட்ட அமைப் பாளர் ஞா. பிரான்சிஸ், இலக்கிய அணி செயலா ளர் பா.பொன்னுராசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திராவிடர் கழக மாவட்ட செயலாளர் கோ. வெற்றி வேந்தன் தொடக்கவுரை யாற்றி னார்.   திருக்குறள் பரப்பு ரையாளர் தார்சியுஸ் ராஜேந்திரன், கழக அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் குமாரதாஸ் முற்போக்கு எழுத்தாளர் சங்க பொறுப் பாளர் கு.சந்திரன் ஆகி யோர் கருத்துரையாற்றி னர்.  தொழிலாளர் அணி செயலாளர் . .கருணா நிதி,

குருந்தன்கோடு ஒன் றிய அமைப்பாளர் செல்லையன், தோழர்கள் எஸ்.பி. ஆறுமுகம், லாரன்ஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கழக மாவட்ட இளைஞரணி செயலாளர் அலெக்சாண் டர் நன்றி கூறினார்.

Comments