தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும்

தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,ஜன.12, தமிழகத்தில் வரும் 19ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்படும். அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டு வகுப்புகள் நடத்தப்படும். ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகா மல் இருக்க வேண்டும் எனவும் கூறியுள் ளார். கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர், பள்ளிகளைத் திறக்க இசைவு தெரிவித்திருப்பதாக தகவல்கள் வெளியான நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்து ஜனவரி 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை முதல் தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

 பள்ளிகள் திறக்கப்படும்போது, ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படவும், அரசு வெளியிடும் வழிகாட்டி நெறிமுறைகளுக்கு உட்பட் டும் செயல்பட அனுமதி அளிக்கப்படுகிறது. அவ்வாறு பள்ளிக்கு வரும் மாணவர் களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்கப்படுகின்றது. அனைத்து மாணவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஏதுவாக, வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. மாணாக்கர்களின் நலன் கருதி, அரசு எடுத்து வரும் கோவிட் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு பெற்றோர்களும், ஆசிரியர்களும் மற்றும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள் கிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments