தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்.18இல் திறப்பு

அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

சென்னை,ஜன.22- தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகள் பிப்ரவரி 18ஆம் தேதி திறக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

2,3 ஆம் ஆண்டு மாணவர்களுக்கு பிப்ரவரி 18 முதல் மே 21 வரை வகுப்புகள் நடைபெறும். பி.. 2,3ஆம் ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு மே 24-இல் செய்முறை தேர்வு; ஜூன் 2இல் செமஸ்டர் தேர்வு தொடங்கும் எனவும் அறிவித்துள்ளது. கரோனா தொற்று காரணமாக 10 மாதங்களுக்கு மேலாக பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படாமல் இருந்து வருகிறது. 3ம் ஆண்டு மற்றும் ஆராய்ச்சி மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் திறக்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து, 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகளும் திறக்கப்பட்டு, வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் மாணவர்களுக்கான வகுப்புகள் குறித்த அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 2ஆம் ஆண்டு மற்றும் 3ஆம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் பிப்.18ஆம் தேதி தொடங்கி, மே 21ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, மே 24ஆம் தேதி செய்முறை தேர்வுகளும், ஜுன் 2ஆம் தேதி எழுத்துத் தேர்வும் நடைபெறுகிறது. இதேபோல, இறுதி செமஸ்டர் மாணவர்களுக்கு வரும் பிப்ரவரி 14ஆம் தேதி முதல் ஏப்.12ஆம் தேதி வரை வகுப்பு நடத்தப்படுகிறது. ஏப்.15ஆம் தேதி முதல் செய்முறைத் தேர்வும், ஏப்.26ஆம் தேதி முதல் எழுத்துத் தேர்வும் நடத்தப்பட இருக்கிறது.

-----------------------

வேளாண் சட்டம் குறித்து ஆன்லைனில் கருத்துக் கேட்பு

இந்தியில் கடிதம் வந்ததால் சர்ச்சை

தஞ்சாவூர்,ஜன.22- வேளாண் சட்டம் குறித்து டெல்டா விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம், ஆன்லைனில் கருத்துக் கேட்பு கூட்டத்திற்காக அனுப்பிய கடிதம் இந்தியில் வந்ததால் சர்ச்சை எழுந்துள்ளது.

உச்சநீதிமன்றம் அமைத்த குழு முன்னிலையில், வியாழன் அன்று பல்வேறு மாநில விவசாயிகள் சங்க பிரதிநிதிகளிடம் ஆன்லைனில் கருத்துக் கேட்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டு, சம்பந்தப்பட்டவர்கள் கூட்டம் தொடர்பாக கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் டெல்டா மாவட் டங்களை சேர்ந்த விவசாயிகளும் கலந்துகொள்ளும் நிலை யில், அவர் களுக்கு அனுப்பிய கடிதம் இந்தியில்இருந்ததால் விவசாயிகள் சங்க  பிரதிநிதிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.இது குறித்து விவசாய சங்க பிரதிநிதியான வெ.ஜீவக்குமார் கூறியதாவது;

உச்சநீதிமன்றம் சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர், வேளாண் சட்டத்தின்நன்மை, தீமை குறித்து விவசாயி களிடம் கருத்து கேட்பு கூட்டத்தில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப் பட்டிருந்தது. இதற்காக பெயர் பட்டியல் தயார் செய்து அனுப்பிய நிலையில், இது தொடர்பாக அவர்கள்மெயில் அனுப்பியுள்ளனர். அது இந்தியில் வந்துள் ளதால், அதை முழுமையாக படித்து தெரிந்து கொள்ள, இந்தி தெரிந்த நபரிடம் படித்து தெரிந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இது வன்மையாக கண்டிக்கத் தக்கதுஎன்றார்.

Comments