‘‘திராவிட லெனின்'' டாக்டர் டி.எம்.நாயரின் 153 ஆம் ஆண்டு பிறந்த நாள் - வாழ்க!

நீதிக்கட்சி' என்று மக்களால் அழைக்கப்பட்ட திராவிடர் இயக்கத் (தென்னிந்தியர் நல உரிமைச் சங்கம் - S.I.L.F.) த்தின் நிறுவனத் தலைவர்களில் வரலாற்றில் இடம்பெற்ற மிக முக்கிய தலைவர்திராவிட லெனின்' என்று தந்தை பெரியாரால் அழைக்கப்பட்ட டாக்டர் டி.எம்.நாயர் அவர்களாவார்.

இன எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாகவும், ஒடுக்கப்பட்ட (குறிப்பாக தாழ்த்தப்பட்ட) மக்களுக்கு மிகப்பெரிய பாதுகாவலராகவும் இருந்த சமூகநீதிப் போராளி!

சிறந்த ஆங்கிலப் பேச்சாளர் - உயர்ந்த பண்பு நலன் - தொண்டற உணர்வு கொண்ட காது, மூக்கு தொண்டை (E.N.T.) மருத்துவர்.

இங்கிலாந்து நாட்டில் நாடாளுமன்றக் குழுவின்முன், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளை எடுத்துரைக்க அனுப்பி வைக்கப்பட்டு, பார்ப்பனர்கள் போட்ட முட்டுக்கட்டையை உடைத்து வெற்றி பெற்றிட தேவையான தரவுகளுடன் ஆயத்தமான நிலையில், நோய்வாய்ப்பட்டு அங்கேயே மரணமுற்ற மகத்தான சமூகநீதிப் போராளி!

இந்த ஆண்டு முடிவுக்குள் அவருடைய சிலையை திராவிடர் கழகம் அவர் முழங்கிய பகுதியில் வைக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும்.

நேற்று (15.1.2021) அவரது 153 ஆம் ஆண்டு பிறந்த நாள் (நேற்றுவிடுதலை'க்கு விடுமுறை என்பதால் இன்று இந்த வாழ்த்துச் செய்தி வெளியிடுகிறோம்). இனி ஒவ்வொரு ஆண்டும் திராவிடர் இயக்க முன்னோடித் தலைவர்களின் பிறந்த நாளை சிறப்புடன் கொண்டாடுவோம்!

 

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

16.1.2021

Comments