டிரம்ப் முடிவுகளை மாற்றும் விதத்தில் ஒரே நாளில் 15 நிர்வாக உத்தரவுகளை பிறப்பித்தார் புதிய அதிபர் ஜோ பைடன்

வாசிங்டன், ஜன.22 அமெரிக்காவின் 46-வது அதிபர் 78 வயதான ஜோ பைடன் 20.01.2021 அன்று பதவி ஏற்றார்.

அமெரிக்க அதிபராக வாஷிங்டன் வெள்ளை மாளி கையின் ஓவல் அலுவலகத்தில் வந்து அமர்ந்த முதல் நாளி லேயே ஜோ பைடன் செயல் பட தொடங்கி விட்டார்.

ஒரே நாளில் அவர் அதி ரடியாக 15 நிர்வாக உத்தர வுகளை பிறப்பித்தார். அவற் றில் பல உத்தரவுகள் முன் னாள் அதிபர் டிரம்பின் உத் தரவுகளை மாற்றி அமைத்தது ஆகும்.

ஜோ பைடன் பிறப்பித்த முதல் உத்தரவு, 100 நாட் களுக்கு அமெரிக்கர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். அமெரிக்காவின் மத்திய அரசு இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பதாகும்.

* 2016-ம் ஆண்டு கையெழுத்திடப்பட்ட பாரீஸ் பருவநிலை ஒப்பந்தத் தில் இருந்து விலகும் முடிவை முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்திருந்தார். இப் போது மீண்டும் பாரீஸ் பருவ நிலை ஒப்பந்தத்தில் அமெரிக் காவை சேர்க்கும் நடை முறையை தொடங்க வேண்டும்.

* கரோனா வைரஸ் பெருந் தொற்று பரவல் விவகாரத்தில் சீனாவுக்கு ஆதரவாக நடந்து கொண்டதாக உலக சுகாதார நிறுவனத்தில் இருந்து அமெ ரிக்கா விலகுவதாக டிரம்ப் அறிவித்திருந்தார். அந்த முடிவு நிறுத்தம்.

* ஈரான், சிரியா, லிபியா, ஏமன் உள்ளிட்ட சில குறிப் பிட்ட முஸ்லிம் நாடுகள் மீது டிரம்ப் பிறப்பித்த பயண தடைகள் ரத்து.

* மெக்கிகோ எல்லைச்சுவர் கட்டுமானம் உடனடி நிறுத்தம்

இந்த நிர்வாக உத்தரவு களின் சிறப்பம்சம், இவற்றை செயல்படுத்த நாடாளுமன்றத் தின் ஒப்புதல் பெறத்தேவையில்லை. அதே நேரத்தில் நாடாளுமன்றம் விவாதித்து நிராகரிக்கலாம். அப்படி நாடாளுமன்றம் நிராகரித் தால் தனது மறுப்பு ஓட் டுரிமை (வீட்டோ) அதிகா ரத்தை பயன்படுத்தி, ஜோ பைடன் அதை நிராகரிக்க லாம்.

ஜோ பைடன் முதன்முத லாக அமெரிக்க அதிபராக பத்திரிகையாளர்களை சந்தித்தபோது கூறியதாவது:-

இன்றைய நிர்வாக நடவடிக்கைகளுக்காக நான் பெருமிதம் கொள்கிறேன். நான் அமெரிக்க மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதின் மூலம் எனது செயல்பாடுகளை தொடங்கப்போகிறேன். நீண்ட தூரம் செல்ல வேண் டியதிருக்கிறது. இவை நிர் வாக நடவடிக்கைகள் மட் டுமே. இவை முக்கியமானவை. ஆனால் நாம் செய்யப்போகும் பல விஷயங்களுக்கு சட்டம் தேவைப்படும்.

இனி வரும் நாட்களில் நிறைய நிர்வாக உத்தரவுகளில் கையெழுத்து போடுவேன்.

நாம் இன்று கரோனாவின் கூட்டு நெருக்கடி, அதைத் தொடர்ந்த பொருளாதார நெருக்கடி, பருவநிலை மாற் றம், இனப்பாகுபாடு விவ காரம் ஆகிய பிரச்சினைகளில் செயல்பட போகிறேன் என்று அவர் கூறினார்.

முதன் முறையாக செய் தியாளர்களை சந்தித்த வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஜென் சாகி, ஜோ பைடன் 15 நிர்வாக உத்தரவுகளிலும், 2 குறிப் பாணைகளிலும் கையெழுத்து போட்டதாக தெரிவித்தார். ஒரே நாளில் ஜோ பைடன் பிறப்பித்த 15 நிர்வாக உத்தர வுகள், அமெரிக்காவை அதிர வைத்துள்ளன.

Comments