சுகாதார பணியாளர்களுக்கு முதல் கட்டமாக ஜன.13 முதல் கரோனா தடுப்பூசி: மத்திய அரசு அறிவிப்பு

புதுடில்லி,ஜன.6- ‘நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணி வரும் 13ஆம் தேதி தொடங்கப்படும்என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதற்கட்டமாக, ஒரு கோடி சுகாதாரப் பணியாளர்களுக்கும், அடுத்த கட்டமாக 2 கோடி முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போட திட்டமிடப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் மிரட்டிய கரோனா வைரசில் இருந்து மக்களை பாதுகாக்க, புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப் பூசிகள் பல நாடுகளிலும் படிப் படியாக பொது பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது.

இந்தியாவிலும் கரோனா தடுப்பூசியை மக்களுக்கு வழங்க மத்திய அரசு தீவிர ஏற்பாடுகளை செய்து வருகிறது. இதற்காக, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட் ரஜெனகா நிறுவனம் தயாரித்தகோவிஷீல்டுதடுப்பூசிக்கும், பாரத் பயோடெக், இந்திய மருத் துவ ஆராய்ச்சி கவுன்சில் இணைந்து தயாரித்தகோவாக் சின்தடுப்பூசிக்கும் கடந்த 3ஆம் தேதி அவசரகால பயன்பாட்டிற் கான அனுமதி தரப்பட்டுள்ளது. அதோடு, நாடு முழுவதும் தடுப்பூசி போடுவதற்கான ஒத்திகைகள் நடத்தப்பட்டன. தடுப்பூசியை சேமித்து வைத்துள்ள இடத்திலிருந்து எடுத்து வருவது, பய னாளர்களின் அடையாள ஆவ ணங்களை சரிபார்த்து அவர் களுக்கு தடுப்பூசி போடுவது போன்றவை குறித்து ஒத்திகை பார்க்கப்பட்டன. தடுப்பூசியை போட 96 ஆயிரம் பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி ஏற்றுமதிக்கு தடையில்லை

இந்நிலையில், தடுப்பூசி ஒத்திகையின் மூலம் பெறப்பட்ட விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சக செயலாளர் ராஜேஷ் பூஷண் டில்லியில் நேற்று (5.1.2021) தெரிவித்ததாவது, ‘‘ஒத்தி கையின் மூலம் பெறப்பட்ட தக வல்களின் அடிப்படையில், அவ சரகால அனுமதி வழங்கப்பட்ட நாளில் இருந்து அடுத்த 10 நாளில் கரோனா தடுப்பூசியை பொது பயன்பாட்டுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன. ஆனாலும், இது குறித்து தேதியை மத்திய அரசு தான் முடிவு செய்ய வேண்டும். வெளிநாடுகளுக்கு தடுப்பூசியை ஏற்றுமதி செய்ய அரசு எந்த தடையும் விதிக்கவில்லை. இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்,’’ என்றார்.

Comments