“உங்கள் தொகுதியில் ஸ்டாலின்” - புதிய கோணத்தில் தேர்தல் பரப்புரை மக்கள் பிரச்சினைகளில் 100 நாளில் தீர்வு

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, ஜன. 26-  திமுக தலைவர் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தள பதி மு.க.ஸ்டாலின் நேற்று (25.1.2021) சென்னை கோபா லபுரத்திலுள்ள கலைஞரின் இல்லத்தில் செய்தியாளர் களை சந்தித்தார். அப்போது, சட்டமன்ற தேர்தல் பரப் புரை குறித்த அறிவிப்பை அவர் வெளியிட்டு கூறிய தாவது, “மக்கள் கிராம சபை கூட்டத்தை தொடர்ந்து திரு வண்ணாமலை மாவட்டத் தில் இருந்து ஜனவரி 29ஆம் தேதி முதல் ‘உங்கள் தொகு தியில் ஸ்டாலின்’ என்ற பெயரில் புதிய கோணத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளேன். கரோனா காலத் தில் மக்களை அதிமுக அரசு கைவிட்டுவிட்டது; குழந்தை கள் முதல் முதியவர் வரை அனைவரின் வாழ்க்கையை யும் நிர்கதியாக்கி விட்டது.

புதிய முதலீடுகளை ஈர்க்க முடியாத மாநிலமாக தமிழ கத்தை மாற்றியுள்ளனர். தமிழகத்தின் கடன் சுமையை ரூ.5 லட்சம் கோடியாக மாற் றியது தான் அதிமுகவின் சாதனை. தமிழகத்தில் விலை வாசி விஷம் போல் உயர்ந்துள் ளது. சட்டம் ஒழுங்கு, சீர் குலைவு, விவசாயிகள் வஞ்சிப்பு, வேலைவாய்ப்பு இல்லை. தேர்தலை மனதில் வைத்து ரூ.2,500 கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் எந்த தொகுதிகளிலும் வளர்ச்சித் திட்டங்கள் இல்லை. தமிழக மக்களை அதிமுக அரசு முழு மையாக கைவிட்டுவிட்டது. அதிமுக ஆட்சியில் எல்லாத் துறைகளிலும் பல கோடி ரூபாய் கொள்ளை நடை பெற்றுள்ளது.

மக்களின் பிரச்சினையை தீர்ப்பதே எனது முதல் பணி. மக்களின் தனிப்பட்ட பிரச்சி னைகளுக்கு 100 நாட்களில் தீர்வு காண்போம். திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாட் களில் போர்க்கால அடிப் படையில் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும்.

தேர்தல் அறிக்கை வேறு, விண்ணப்பத்தில் மக்கள் குறைகள் எழுதி கொடுத்தால் போதும், மக்கள் பிரச்சினை கள் தொடர்பான மனுக்களை நானே சேகரித்து, சீல் வைத்து மக்களுக்கு ரசீது வழங்குவேன். மக்கள் தங்கள் தொகுதி பிரச்சினைகளை <www.stalinani.com> என்ற இணையதளம் அல்லது 91710 91710 என்ற எண்ணில் பதிவு செய்யுங்கள். சொன்னதை செய்வோம்; செய்வதை தான் சொல்வோம் என்பதற்கு ஏற்பவே, கலைஞ ரின் இல்லத்தில் செய்தியா ளர்களை சந்தித்துள்ளேன். சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த பிறகு கூட் டணி பற்றி முடிவு அறிவிக்கப் படும்என்று தளபதி மு.. ஸ்டாலின் கூறினார்.

Comments