10 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறப்பு 85 சதவீத மாணவ, மாணவிகள் வருகை

சென்னை,ஜன.20- கரோனா பரவலால் மூடப்பட்டிருந்த பள் ளிகள் 10 மாதங்களுக்குப் பிறகு கடும் கட்டுப்பாடுகளுடன் நேற்று திறக்கப்பட்டன. மாணவ, மாண விகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக பள்ளிகள் கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. இதையடுத்து கல்வி தொலைக்காட்சி மற்றும் இணையவழியில் மாணவர் களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே கடந்த ஜனவரி 6, 7, 8-ஆம் தேதிகளில் நடைபெற்ற கருத் துக் கேட்பு கூட்டத்தில் பெரும் பாலான பெற்றோர் பள்ளிகளை திறக்க ஆதரவு தெரிவித்திருந்தனர்.

அதையேற்று 10, 12-ஆம் வகுப்பு களுக்கு மட்டும் ஜனவரி 19-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி தமிழகத்தில் 13 ஆயிரத் துக்கும் மேற்பட்ட அரசு, நிதியுதவி மற்றும் தனியார் உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகள் நேற்று திறக்கப் பட்டன. நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பள்ளிகளுக்கு வந்தனர்.

அதேநேரம் கரோனா பரவல் முன்னெச்சரிக்கையாக பல்வேறு வழிகாட்டுதல்களை அரசு வழங்கியிருந்தது. அதற்கேற்ப பள்ளி நுழைவு வாயிலில் வெப்பமானி கொண்டு மாணவர்கள், ஆசிரி யர்கள் உடல் வெப்பம் பரிசோ தனை செய்யப்பட்ட பின்பு வளா கத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட் டனர்.

அதேபோல், வகுப்பறையில் மேஜைக்கு இருவர் வீதம் 20 முதல் 25 மாணவர்கள் வரை அமர வைக் கப்பட்டனர். பள்ளி வளாகங்களில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி பயன் பாடு உட்பட கட்டுப்பாடுகளும் முறையாக பின்பற்றப்பட்டன.

Comments