திருவண்ணாமலை கூட்டத்தில் தளபதி மு.க.ஸ்டாலின் உறுதி
சென்னை,டிச.30, திருவண்ணா மலை மாவட்ட திமுக
சார்பில் நேற்று (29.12.2020) மாவட்ட
செய லாளர் முன்னாள் அமைச்சர்
ஏவ.வேலு அவர்கள் தலைமையில்
‘தமிழகம் மீட்போம்’ - 2021 சட்ட மன்றத் தேர்தல்
சிறப்புப் பொதுக் கூட்டம் காணொலி
காட்சி வாயிலாக நடைபெற்றது.
இதில்,
திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையேற்று
ஆற்றிய உரை: கரோனா காலத்தில்
‘ஒன்றிணைவோம் வா’ என்ற அடிப்
படையில் ஒரு திட்டத்தைத் தொடங்கி
பொதுமக்களுக்கு பல் வேறு நலத்திட்ட
உதவிகளைச் செய்தோம். அரசாங்கம் செய்ய வேண்டியதைப் பொதுமக்கள்
மனுக் களாக எங்களிடம் கொடுத்தார்கள்.
அந்த மனுக்களைத் தலைமைச் செய லாளரைச் சந்தித்துக்
கொடுத்தோம். உரிய மாவட்ட ஆட்சித்
தலை வர்களிடம் கொடுத்துவிட்டோம். இவை அனைத்தும் அரசாங்கம்
செய்ய வேண்டிய பணிகள். அதனை இந்த அரசு
செய்து கொடுத்ததா என்றால் இல்லை. செய்து கொடுக்க
முயற்சித்தார்களா என்றால் அதுவும் இல்லை. ‘உங்களிடம் ஒரு மனு கொடுக்கப்பட்டால்,
உங்களிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டால்,
அதை யார் கொடுத்தது என்று
பார்க்கா தீர்கள். என்ன கோரிக்கை என்று
மட்டும் பாருங்கள். செயல்படுத்திக் கொடுங்கள் என்று தலைவர் கலைஞர்
சொல்வார்.
தமிழ்நாட்டு
மக்களை பழனிசாமி மதித்தாரா? அந்த மக்களால் தான்
அவர் முதலமைச்சராக இருக்கிறார், அவர்கள் வாக்களித்ததால்தான் அ.தி.மு.க. ஆளும்கட்சியாக இருக்
கிறது. அவருக்கும் நன்றியுணர்ச் சிக்கும் கொஞ்சமும் சம்பந்தமில்லை என் பதன் அடையாளம்
தான் அவ ரது பேச்சு.
மக்கள் மனு கொடுத்தால் குப்பைத்
தொட்டியில் போடுவது பழனிசாமியின் பழக்கமாக இருக்க லாம். எங்களைப்
பொறுத்தவரை நாங்கள் அரசாங்கத்திடம் தான் கொடுத்துள்ளோம். அரசாங்கம்
எங்கள் கைக்கு வந்ததும் அந்த
மனுக்கள் தூசி தட்டி எடுக்கப்பட்டு
மக்களின் கோரிக்கைகள் நிறை வேற்றப்படும் என்பதை
எனது வாக்குறுதியாகச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
கூட்டுறவுச் சங்கத்தின் தேர்தலை முறையாக நடத்த முடியாதவர் பழனிசாமி.
இப்படிப்பட்ட பழனி சாமி தான்,
மூன்றாம் முறையாக அ.தி.மு.க.வை ஜெயிக்க
வைக்கப் போகிறாராம். அவர் முதலமைச்சர் வேட்பாளராகக்
கூட நீடிக்க முடி யாது என்பதைத்
தான் பா.ஜ.வினர்
தினமும் சொல்லிக் கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி
அரசு என்பது கொள்கை அரசு
அல்ல, கொள்ளை அரசு. இது
எம்.ஜி.ஆர். அரசு
அல்ல; ஜெயலலிதா அரசும் அல்ல. இவ்வாறு
தி.மு.க. தலைவர்
தளபதி மு.க. ஸ்டாலின்
பேசினார்.