அழகு எனும் பூட்டிட்டு,
அடிமை எனும் விலங்கிட்டு,
ஆர்ப்பரித்து ஆடியது மனுவின் கூட்டம்!
பகுத்தறிவு இடியால்
பெருங்கிழவனின் சம்மட்டி அடியால்
நொறுங்கியது-மனுவின் கோட்டம்!
பதுமை எனும் பெயரிட்டு - பாரினில்
பெண் கல்விக்குத் தடைபோட்டு விட்டு
பெண்ணின் பெருமை பேசியது
பிற்போக்கு ஆணாதிக்கக் கூட்டம்;
ஆயிரமாயிரம் கேள்விக்கணைகளை
தொடுத்தே அசைத்திட்டார் -
ஈராயிரமாண்டு ஆதிக்கத்தை!
அதிர்ந்தது - ஆணாதிக்கத்தின் அடிநாதம்!
தாய் பெரியார் தாங்கி நிற்க;
தடை பல உடைத்து
விடுதலைச் சிறகுகள்
விரித்துப் பறந்தன -
சிறைப்பறவைகள்!
பெரியார் எனும் உயிர்நாடி - அவர்தாம்
பெண்ணியத்தின் முன்னோடி!
- சே.மெ.மதிவதனி