வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: பாஜக கூட்டணியிலிருந்து மேலும் ஒரு கட்சி விலகல்

புதுடில்லி, டிச.29 வேளாண் சட்டங்களை ரத்து செய்ய மத்திய பாஜக அரசு பிடிவாதமான முறையில் மறுத்துவருவதால், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ராஷ்ட்ரிய லோக் தந்த்ரிக் கட்சியும் அக்கூட்டணியிலிருந்து விலகியது.

ராஜஸ்தானில் இக்கட்சிக்கு மக்களவையில் ஓர் உறுப்பினரும், மாநில சட்டமன்றத்தில் மூன்று உறுப்பினர்களும் உள்ளனர்.

ராஷ்ட்ரிய லோக்தந்த்ரிக் கட்சியின் தலைவரும், நாகர் தொகுதி மக்களவை உறுப்பினருமான ஹனுமான் பெனிவால், ராஜஸ்தான்- அரியானா எல்லையருகில் உள்ள ஷாஜஹான்பூரில் நடைபெற்ற விவசாயிகள் பேரணியில் கலந்துகொண்டபோது இந்த அறிவிப் பினை வெளியிட்டார். அங்கே அவர் உரையாற்றுகையில், வேளாண் சட்டங் களை ரத்து செய்யவேண்டும் என்று தாங்கள் பாஜகவிடம் கேட்டுக் கொண்டபோது அதற்கு அக்கட்சி செவிமடுக்கத் தயாராகயில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கம் விவசாயிகள் போராட்டத்தைத் தவறான முறையில் எதிர்கொள்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து சிரோன்மணி அகாலி தளம் வெளியேறியதை அடுத்து, இரண்டாவதாக, ராஷ்ட்ரிய லோக்தந்திரிக் கட்சி வெளியேறியுள்ளது.இதனைத் தொடர்ந்து ஹனுமான் பெனிவால், தான் அங்கம் வகித்துவந்த மூன்று நாடாளுமன்றக் குழுக்களிலிருந்தும் விலகினார். “விவசாயிகளின் சுயமரியாதையே, எங்கள் கட்சியின் வலு வாகும். விவசாயிகளின் சுயமரியாதைக்குப் பங்கம் வந்தபின்னர், தேசிய ஜனநாயகக் கூட்டணியுடன் ஃபெவிகால் போட்டு ஒட்டப்பட்டது போல் எங்களால் இருக்க முடியாது'' என்று ஹனுமான் பெனிவால் விவசாயிகளிடையே தெரிவித்தார். பின்னர் விவசாயிகள் நடத்தி வந்த கிளர்ச்சிப் போராட்டங்களில் தன்னையும் தன் கட்சி உறுப் பினர்களையும் முழுமையாக அவர் இணைத்துக் கொண்டார்.

ஜனநாயகம் பேசும் மோடிக்கு புதுவை முதல்வர் நாராயணசாமி பதிலடி

புதுச்சேரி, டிச.29 ஜனநாயகத்தைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது என்றும், மத்திய அரசாங்கமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை என்றும் புதுவை மாநில முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார்.

புதுவையில் 2011 ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த 10 ஆண்டு களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனை சுட்டிகாட்டி, கண்டிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருந்தார். புதுவை அரசு தொடர்ந்து உள்ளாட்சி தேர்தலை தவிர்த்து வருகிறது. ஜனநாயகம் குறித்து எனக்கு பாடம் நடத்துபவர்கள்தான் புதுவையில் ஆட்சியாளர்களாக இருக்கின்றனர் என்று கூறினார். இதற்கு பதில் அளித்துள்ள புதுவை முதலமைச்சர் நாராயணசாமி  மாநில அரசாங்கத்தை  குற்றம் கூறுவது அர்த்தமே கிடையாது. மாநில அரசிற்கு உண்டான அதிகாரத்தை முழுமையாக பறித்து கொண்டு ஆளுநர் இந்த தேர் தலை நடத்தவில்லை. இதை பிரதமர் முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.மாநில உரிமையை பறிப்பது தான் ஜனநாயகமா? மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசின் உரிமையை பறிப்பது ஜனநாயகம் இல்லை என்று பிரதமருக்கு தெரியவில்லையா?

பிரதமர் நரேந்திர மோடி ஜனநாயக முறைப்படி ஜம்மு-காஷ்மீரில் தேர்தல் நடத்தியதாக கூறுகிறார். ஆனால் வேட் பாளர்களை வீட்டை விட்டு வெளியே வர விடாமல் செய்வது தான் ஜனநாயக முறையா? வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வெளியே செல்ல முடியவில்லை.சிறைப் பிடித்து வீட்டுக் காவலில் வைத்து இருந்தனர். இதனால் எதிர்கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பிரச்சாரம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இது ஜனநாயக முறைப்படி நடந்த தேர்தலா?அப்படியிருந்தும் காஷ்மீர் வாழ் மக்கள் பா.ஜனதா கட்சிக்கு எதிராகத் தான் இந்த தேர்தலில் வாக்களித்து உள்ளனர். ராணுவத்தை வைத்து கொண்டு முழுவதுமாக அதிகார அத்துமீறல் செய்துள்ளனர். ஜனநாயகத் தைப் பற்றி பேசுவதற்கு பிரதமருக்கு எந்த விதமான தகுதியும் கிடையாது. மத்திய அரசாங்கமே ஜனநாயக முறைப்படி நடக்கவில்லை.

இவ்வாறு புதுவை முதல்வர் நாராயணசாமி கூறினார்.

பொருளாதார வளர்ச்சியில் பங்களாதேசை விடப் பின் தங்கிய இந்தியா

டாக்கா, டிச. 29 தற்போதைய நிலையில், தன்னால் உருவாக்கப்பட்ட வங்கதேசத்தைவிட, பொருளாதாரத்தில், இந்தியா பின்தங்கியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

கடந்த 1971 ஆம் ஆண்டு தனிநாடாக உருவான வங்கதேசம், உலகின் ஏழை நாடுகளின் பட்டியலில் மதிப்பிடக்கூடியதாகும். இந்த நிலையில் மோடியின் திறனற்ற ஆட்சியின் காரணமாக தொடர்ந்து பொருளாதாரச் சரிவை எதிர்கொண்டதால் பங்களாதேசை விட இந்தியா பிந்தங்கி விட்டது

கடந்த 2019 ஆம் ஆண்டு நிலவரப்படி, வங்கதேசத்தின் பொருளாதார வளர்ச்சி 8%. கரோனா முடக்கத்தால் அந்த வளர்ச்சியில் பின்னடைவு ஏற்பட்டபோதும், 2020-2021 ஆண்டில், இது 4% என்ற அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த 2020 ஆம் ஆண்டில் அதன் ஜிடிபி மதிப்பீட்டின்படி, ஆப்ரிக் காவின் பல ஏழை நாடுகளைவிட, வங்கதேசம் மிக உயரத்தில் மதிப்பிடக் கூடியதாக மாறியுள்ளது. அதுமட்டுமில்லாமல், அந்த வளர்ச்சியானது, அந்தக் குட்டி நாட்டை, இந்தியாவைவிட ஒரு படி மேலே நிறுத்தியுள்ளது.

இந்த 2020 ஆம் ஆண்டில், வங்கதேசம் ஒரு நபருக்கு 11.45 டாலர்களை அதிகளவில் உற்பத்தி செய்யும் என்று சர்வசேத நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது. இந்திய நாணயம் அளவிற்கு, வங்கதேச நாணயம் பிரபலமாக இல்லாத நிலையிலும் இந்த வளர்ச்சி எட்டப் பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக கவனத்தில் கொள்ள வேண்டும்:

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார்

புதுடில்லி, டிச.29 விவசாயிகளின் போராட்டத்தை மத்திய அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து வடமாநில விவசாயிகளின் போராட்டம் ஒரு மாதம் கடந்தும் நீடித்து வருகிறது. மத்திய அரசின் பேச்சுவார்த்தைகளில் எவ்வித தீர்வும் காணப்படவில்லை.

இந் நிலையில், விவசாயிகளின் ஒட்டுமொத்த போராட்டத்தையும் அரசு தீவிரமாக எடுத்து கொள்ள வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: விவசாயிகள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, தீர்வு காணப்பட வேண்டும். விவசாயி களின் தற்கொலை நாட்டுக்கு நல்லதல்ல என்று கூறி உள்ளார்.

Comments