தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் யசோதா மறைவு

திராவிடர் கழகத் தலைவர் இரங்கல்

தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வரும்,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான யசோதா (வயது 75)  இன்று (27.12.2020) காலை மறைவுற்றார். சில நாட்களாக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்துள்ளார். நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியில் இருந்தவர். சிறீபெரும்புதூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக நான்கு முறை தேர்வு செய்யப்பட்டவர். காங்கிரஸ் கட்சி சட்டமன்ற துணைத் தலைவராக ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சட்டமன்றத்தில் ஒலித்தவர்.  நம்மோடு அன்போடு இருந்தவர். எவரிடமும் சிறந்த பண்புடனும், கனிவுடனும் நடந்து கொண்டவர். அவர் மறைவால் துயருறும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்கும், அவர் குடும்பத்தாருக்கும், இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

கி.வீரமணி,

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை    

27.12.2020

Comments