புதுக்கோட்டை,டிச.30, புதுக்கோட்டையில் 7வயது சிறுமி பாலியல் வன்முறைக்கு உள்ளாக் கப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவ்வழக்கில் வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுகை மகளிர் நீதிமன்றம் நேற்று 29.12.2020 தீர்ப்பு அளித்தது.
புதுக்கோட்டை
மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த ஏம்பல் கிராமத்தை
சேர்ந்த 7 வயது சிறுமி அப்பகுதியில்
உள்ள பள்ளியில் 2ஆம் வகுப்பு படித்து
வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம்
29ஆம் தேதி இரவு வீட்டில்
இருந்து வெளியே சென்ற சிறுமி
வீடு திரும்பவில்லை. இதைத்தொடர்ந்து உறவினர்கள் மற்றும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் புகாரின் பேரில், ஏம்பல் காவல்துறையினர் வழக்குப்பதிவு
செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில்
மறுநாள் ஜூன் 30ஆம்தேதி மாலை
ஏம்பல் ஏரியில் காட்டாமணக்கு செடிகளுக் குள் சிறுமி சடலமாக
மீட்கப் பட்டாள். அப்போது, சிறுமியின் முகம், தலை மற்றும்
உடலில் பல்வேறு இடங்களில் காயங்கள் இருந்தன.
இதையடுத்து
காவல்துறையினர் உடலை மீட்டு புதுக்கோட்டை
அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனைக்கு அனுப்பி
வைத்தனர்.
இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணையில், சிறுமியை அப்பகுதி பூக்கடைக்காரர் சாமி வேல் என்ற
ராஜா (25) என்பவர் கடத்தி சென்று பாலியல்
வன்முறை செய்து படுகொலை செய்தது
தெரியவந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் ராஜாவை
கடந்த ஜூலை மாதம் 1ஆம்தேதி
கைது செய்தனர்.இது தொடர்பாக ராஜா
மீது போக்சோ சட்டம், பாலியல்
வன்முறை, கொலை செய்தல், தட
யங்களை மறைத்தல், வன்கொடுமை சட்டம் உள்ளிட்ட 10 பிரிவுகளின்
கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை புதுக்கோட்டை
மகளிர் நீதிமன் றத்தில் நடந்து வந்தது. அரசு
தரப்பு வழக்குரைஞராக அங்கவி ஆஜராகி வாதிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணை
நேற்று முடிந்து நீதிபதி சத்தியா இரட்டை மரண தண்டனை
விதித்து தீர்ப்பு அளித்தார்.