ஏட்டுத் திக்குகளிலிருந்து...

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

·     மோடி அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாய அமைப்புகளை மத்திய அரசு டிசம்பர் 30ஆம் தேதி பேச்சு வார்த்தைக்கு வருமாறு மீண்டும் அழைத்துள்ளது.

·     தெலுங்கானா மாநிலம் அய்தராபாத்தில் உள்ள கலோஜி நாராயண ராவ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு சேர்க் கையில் இட ஒதுக்கீடு முறையாக கடைப்பிடிக்கவில்லை என்றும், தெலுங்கானா  மாநில மாணவர்களுக்கு வாய்ப்பு அதிகம் இல்லை என்ற புகாரை பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு முதல்வர் சந்திரசேகர ராவுக்குக் கடிதம் எழுதியுள்ளது.

·     வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடும் விவசாயிகள் தங்களது கோரிக்கைகள் நியாயமானவை என்று தெரிந்தே போராடு கிறார்கள். பிரதமர் மோடியின் பேச்சை அவர்கள் நம்பத் தயாராக இல்லை. போராட்டம் எளிதில் முடிவடையாது என எழுத்தாளர் ஆகார் படேல் குறிப்பிட்டுள்ளார்.

·     திருவனந்தபுர நகர மேயராக சிபிஎம் கட்சியைச் சேர்ந்த 21 வயது பெண் ஆர்யா ராஜேந்திரன் பொறுப்பேற்றார்.

·     தமிழ் நாட்டின் கலாச்சார, சமூக, மொழி உணர்வை அடிபணிய முயலும் எதையும் வரலாற்று ரீதியாக தொடர்ந்து எதிர்த்து வரும்  பெரும்பான்மை எண்ணத்தை தற்போது அதிமுகவும் முன்மொழிந்து உள்ளது என தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

·     மேற்கு வங்கத்தில் காங்கிரஸ், இடதுசாரிகள் கூட்டணி மற்றும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. ஆளும் திரிணாமுல் காங்கிரசும் இணைந்து தேர்தலை எதிர்கொண்டால் மட்டுமே வெற்றி சாத்தியப் படும் என இன்னொரு தலையங்கச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

·     அய்க்கிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் பதவிக்கு ஆர்.சி.பி. சிங்கை  நியமித்த நிதிஷ் குமார், தற்போது தான் தொடர்ந்து முதல்வர் பதவியில் இருக்க விருப்பமில்லை என்று கூறியது அரசியல் தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பீகார் மாநிலத்தில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் கூட்டணிக் கட்சியில், அய்க்கிய ஜனதா தளத்திற்கும் பாஜகவிற்கும் ஏற்பட்டுள்ள விரிசல் காரணமாக, நிதிஷ்குமார் கூட்டணியை விட்டு வெளியேறி, ஆர்.ஜே.டி. கட்சியின் தலைவர் தேஜஸ்வியை முதல்வ ராக்க ஆதரவு தந்தால், தேசிய அளவில் நிதிஷ் குமாரை பிரதமர் வேட்பாளாராக அறிவிக்க தயார் என ஆர்.ஜே.டி. தெரிவித்துள்ளது.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

·     பார்க் என்ற ஊடக அமைப்பின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான தாஸ்குப்தா, ரிபப்ளிக் டிவியின் பார்வையாளர் எண்ணிக்கையை உயர்த்திக் காட்டுவதற்காக தனக்கு லட்சக்கணக்கில் பணம் லஞ்சமாக தந்துள்ளார் என காவல்துறையிடம் கூறியுள்ளாதாக மும்பை நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

·     தேசிய கல்விக் கொள்கையில் மாணவர்கள் படிப்பை பாதியில் விட்டுச் சென்று மீண்டும் வந்து படிக்கலாம் என்கிற திட்டம் மாணவர் களைப் பாதிக்கும் என கேரளாவில் உள்ள மத்திய பல்கலைக்கழக கல்வி அதிகார் அம்ருத் குமார் தெரிவித்துள்ளார்.

- குடந்தை கருணா

29.12.2020 

Comments