வ.சு.சம்பந்தம் நினைவுநாள்

புதுச்சேரி, டிச. 27- புதுச்சேரி திராவிடர் கழகத்தின் தலைவ ராகவும் புதுச்சேரி சமூகநீதி பேரவையின் அமைப்பாளரா கவும் சிறப்பாக பணியாற்றிய பெரியார் பெருந்தொண்டர் .சு.சம்பந்தம் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்ச்சி 16.12.2020 அன்று காலை 10 மணியளவில் புதுச்சேரி பெரி யார் படிப்பகத்தில் நடைபெற்றது.

முன்னதாக பெரியார் படிப்பகத்தில் உள்ள தத்துவ தலைவரின் சிலைக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை தலைவர் தோழர் கீத.நாதனும், பகுத்தறிவாளர் கழக மேனாள் செயலாளர் கோ.மு.தமிழ்ச்செல்வனும் மாலை அணிவித்தனர். புதுச் சேரி மாநில சமூகநீதி பேரவை சார்பில் நடைபெற்ற இந்நிகழ் வில் சம்பந்தம் அவர்களின் படத்திறப்பு கழக தோழர்கள் கொள்கை முழக்கத்துடன் திறந்து வைக்கப்பட்டு நினை வேந்தல் நிகழ்வு நடைபெற்றது. சமூகநீதி பேரவை தோழர் து.கீதநாதன் ஒருங்கிணைப்பா ளராக சிறப்பாக பணியாற்றி னர்.

நிகழ்வில் புதுச்சேரி மாநில திராவிடர் கழக தலை வர் சிவ.வீரமணி, புதுச்சேரி சட்ட பேரவை மேனாள் சட்ட மன்ற உறுப்பினரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் நாரா.கலை நாதன். மீனவர் விடுதலை வேங்கைகள் இயக்கத்தின் மாநில தலைவர் இரா.மங் கையர் செல்வம், சமூகநீதி பேரவை அமைப்பாளர் நவீன் தனராமன், சம்பந்தம் அவர்களின் மகன் தங்கமணி மாறன், புதுச்சேரி மண்டல கழக அமைப்பாளர் இர.இராசு, மாணவர் கூட்டமைப்பு தலைவர் சீ.சு.சுவாமிநாதன், புதுச்சேரி திராவிடர் கழக செயலாளர் கி.அறிவழகன், புதுச்சேரி மண்டல தலைவர் இரா.சடகோபன், குலாளர் பேரவை .சுப்ரமணி, பொதுக் குழு உறுப்பினர் லோ.பழனி, மருத்தவர் சங்கம் .காசி நாதன் ஆகியோர் நினைவேந் தல் உரையாற்றினர். தோழர் கள் கரு.சி.திராவிடச்செல்வன், .கண்ணன், .. துணைத் தலைவர் கோ.இரஞ்சித்குமார், மு.குப்புசாமி, இளங்கோ, தந்தைபிரியன் .சிவராசன், மாணவர் கூட்டமைப்பு புவியரசு, தமிழ்அரசன், கழக தோழர்கள் மு.ஆறுமுகம், கி.கோதண்டபாணி, ஜி. பழனி, .பாலமுருகன், .லாரன்ஸ், பாலகிருஷ்ணன், கோ.வெங்கடேசன், கி. அசோகராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கழக வெளியீடானமயக்க பிஸ் கெட்டுகள் துண்டறிக்கை அனைத்து பகுதியிலும் பரப்பு முகமாக அனைவருக்கும் வழங்கப்பட்டது. தோழர் கரு.சி.திராவிடச்செல்வன் ரூ. 500 தந்து துண்டறிக்கையை பெற்றுக் கொண்டார். முன்னதாக சம்பந்தம் அய்யா இல்லத்தில் அவரது படத் துக்கு துளசிராமன், முத்து வேல், அன்பரசன், தமிழ்ச் செல்வன், ஜெனோமாறன், பில்டர் தங்கமணிமாறன், தோழர் மீனா சம்பந்தம், கயல் விழி அண்ணாதுரை ஆகி யோர் மலர் தூவி மரியாதை செய்தனர். கோ.மு.தமிழ்செல் வன் நன்றி நவின்றார்.

Comments