பாஜக ஆளும் மத்தியப்பிரதேச மாநிலத்தில் ராமன் கோயில் கட்ட நிதி திரட்டுவதற்காக பாஜகவினர் ஊர்வலமாக சென்று வன்முறை வெறியாட்டத்தை நடத்தியுள்ளனர். பொதுமக்கள் மத்தியிலிருந்து கடும் எதிர்ப்பு வெடித்துள்ளது. அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், பதற்றமான சூழல் அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது.
மத்தியப்பிரதேச
மாநிலத்தில் பஜ்ரங்
தள், ஆர்.எஸ்.எஸ்.,
விஸ்வ ஹிந்து பரிஷத், பாஜக
உள்ளிட்ட பல்வேறு சங் பரிவாரங்களைச் சேர்ந்தவர்கள்
அயோத் தியாவில் ராமன் கோயில் கட்டுவதற்காக
நிதி திரட்டு வதன்பெயரால் ஊர்வலமாக சென்றுள்ளனர்.
அப் போது மதவெறியைத் தூண்டும்
முழக்கங்களை அவர்கள் எழுப்பி சென்றனர். உஜ்ஜயினி மாவட்டம் 'பேகம்பாக்' பகுதியில் கடந்த 25ஆம் தேதி வெள்ளிக்
கிழமை அன்று மாலை 6.30 மணிக்கு
பொதுமக்கள் மற்றும் சங் பரிவார் கும்பலைச்
சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்துத்துவா
அமைப்பினர் தங்கள் வீடுகளை நோக்கி
கல்வீச்சில் ஈடுபட்டதாக அப்பகுதி வாசிகள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே
மத்தியப்பிரதேச மாநில பாஜக அரசு
அப்பகுதிவாழ்மக்களிடம் அதிகார ஆணவத்துடன் ஒடுக்குமுறையை
கட்டவிழ்த்து விட்டுள்ளது. பஜ்ரங் தள் உள்ளிட்ட
இந்துத்துவ அமைப்பினரின் ஊர்வலம் மீது கல்வீச்சில் ஈடுபட்டதாகவும்,
ஊர்வலத்துக்கு எதிராக முழக்கமிட்டதாகவும் கூறி, இரண்டு
அடுக்கு வீட்டை இடித்துள்ளனர். எட்டுப் பேரைக்
கைது செய்துள்ள அம்மாநில பாஜக அரசு நால்வர்மீது
தேசப் பாதுகாப்புச்சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது.
சிறுபான்மையினர்
வசிக்கும் பகுதியான பேகம்பாக் பகுதியில் சங் பரிவார் அமைப்பினரால்
திட்டமிட்டு கலவரம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஊர்வலத்தில்
வன்முறை வெடித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்து
தடியடி நடத்தி அப்பகுதி யினரை
காவல்துறையினர் விரட்டியடித்துள்ளனர். பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த 8 பேரை கைது செய்துள்ளனர்.
கைதானவர்களில் ஒரு பெண்ணும் அடக்கம்.
அவர் குடியிருந்த வீடு உள்பட இரண்டு
வீடுகளை ஜேசிபி இயந்திரம் மூலம்
அம்மாநில அரசின் உள்ளாட்சி நிர்வாகத்தினர்
இடித்துள்ளனர்.
இடிக்கப்பட்ட
வீடுகள் வாடகைக் கட்டடங்களாகும். இதில் ஒரு வீட்டின்
உரிமையாளர் பெயர், திக்கா ராம்
என்பதும், மற்றொரு வீட்டு உரிமையாளரின் பெயர்
ஹமீது என்பதும் தெரியவந்துள்ளது. "மத்தியப்பிரதேச மாநிலத்தில் இருக்கும் கிரிமினல்கள் உடனடியாக வெளியேறி விடுங்கள், இல்லாவிட்டால், 10 அடிக்கு குழி தோண்டி புதைத்து
விடுவேன்" என மத்திய பிரதேச
பாஜக முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அண்மை
யில் பேசியதன் தொடர்ச்சியாக அம்மாநிலத்தில் பாஜகவினர் அதிகார ஆணவத்துடன் ராமன்கோயில்
நிதி திரட்டல், ஊர்வலம் என்கிற பெயரால் மதவெறி
யுடன் வன்முறை வெறியாட்டத்தைத் தொடங்கியுள்ள னர்.
ராமன்
கோயில் கட்டப்படும் தொடக்கத்திலேயே வன்முறைக் கலாச்சாரக் கட்டவிழ்த்து விடப்படுகிறது என்றால், நாளாக நாளாக இன்னும்
எத்தனை எத்தனை வெறியாட்டங்கள் ஆடுவார்கள்
என்று சொல்ல முடியாது.
ராமன்
கோயில் கட்டுவது என்ற அடிப்படையே அராஜகத்தில்
பிறந்ததுதான். 450 ஆண்டுக்கால சிறுபான்மையினர் வழிபாட்டுத்தலமான பாபர் மசூதியை இடித்துத்தானே
இப்பொழுது ராமன் கோயில் கட்டப்படுகிறது.
வன்முறையில்
பிறந்த ஒன்று வன்முறையிலே வளர்ந்து
வன்முறையின் உச்சத்தில்தான் போய் முடியும்.
இந்துத்துவா
மதவாதம் நாட்டை காட்டு மிராண்டிக்
காலத்துக்குத்தான் உந்தித் தள்ளப் போகிறது. நாட்டு
மக்களின் நியாயப்பூர்வமான விழிப்புணர்வுதான் இதற் கான முற்றுப்
புள்ளியை வைக்க முடியும்.