மனிதநேயமே பெரியாரின் கொள்கை

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியார் நினைவு நாள் கூட்டம்

வல்லம், டிச. 31- தந்தை பெரியாரின் 47-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (24.12.2020) பழைய பேருந்து நிலையத்திலுள்ள தந்தை பெரியார் சிலைக்கு இந்நிறுவனத்தின் சார்

பில் பொறியியல் துறை முதன்மையர் பேரா.எஸ்.செந்தமிழ்க்குமார், புதிய பேருந்து நிலையத் திலுள்ள பெரியார் சிலைக்கு, இணை துணை வேந்தர் பேராசிரியர் எஸ்.தேவதாஸ், வல்லத்தி லுள்ள பெரியார் சிலைக்கு துணைவேந்தர் செ.வேலுசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில், முதன் மையர்கள், இயக்குநர்கள், பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் தந்தை பெரியா ரின் 47-ஆம் ஆண்டு நினைவு நாள் கூட்டம் நடைபெற்றது.    தமிழவேள்  உமாமகேசுவரனார்  கரந்தை கலைக்கல்லூரி பேராசிரியர் எழிலரசன் சிறப்புரை ஆற்றினார்.

அவர்தம் உரையில்,  "கடை விரித்தேன் கொள்வாரில்லை கட்டிவிட்டேன் என்று தன் சீர்திருத்த கருத்துகள் மக்களிடம் செல்வாக்குப் பெறாத நிலையில் திருவருட்பிரகாச வள்ளலார் குறிப்பிட்டார். ஆனால் சமூகப் போராளியான தந்தை பெரியார் தன்னுடைய போராட்ட ஆயுதங்களில் முதன்மையானகுடிஅரசு' இத ழைத் தொடங்கும்போது "என்னுடைய கருத்து களை மக்களிடம் கொண்டு சேர்க்கவே பத்திரிக் கையைத் தொடங்குகிறேன். மக்கள் இதை வாங் குவார்களா என்பதைப்பற்றி எல்லாம் எனக்குக் கவலை இல்லை. யாரும் வாங்கவில்லை என்றா லும் பரவாயில்லை.  நானே எழுதி, நானே அச்சுக் கோர்த்து, நானே அச்சடித்து, நானே படிக்க வேண்டி இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் ஆரம்பித்துள்ளேன்" என்கிறார்.

இழப்பதற்கு எதுவுமில்லை

ஒரு லட்சிய போராட்டத்தை முன்னெடுக் கும் போராளி தன் கருத்துக்களை மக்கள் ஏற்க வில்லை என்றால் சோர்ந்துவிடாமல், தளர்ந்து விடாமல், அந்தப் போராட்டக் களத்திலிருந்து பின்வாங்கி விடாமல் தொடர்ந்து உழைக்கும் மனவலிமை இருக்க வேண்டும். அந்த வலிமை யும் துணிவும் தந்தை பெரியார் அவர்களுக்கு இருந்தது. அதேபோல் இழப்பதற்கு எதுவு மில்லை என்கிற எண்ணமே போராளிக்கு இன்றியமையாததாகிறது. பெரியாருக்கு அந்தக் குணம் இயல்பாகவே இருந்துள்ளது.

பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறிய பின் 'காந்தியையும் காங்கிரசையும் ஒழிப்பதே இனி என் வேலை என்று வந்துவிட்டேன். என்னை பார்த்து சிலர் ராமசாமி நீ செய்வது முடியைக் கட்டி இமயமலையை இழுக்கும் வேலையைப் போன்றது.  உன்னால் முடியுமா? என்று கேட்கிறார்கள்.

வந்தால் இமயமலை

இழுத்துப் பார்க்கிறேன் வந்தால் இமயமலை இல்லையென்றால் வெறும் முடி தானே அதில் ஒன்றும் எனக்கு இழப்பில்லை.' என்று ஒரு உரையாடல் வடிவிலான கட்டுரையில் பெரியார் குறிப்பிடுகிறார்.  மண் விடுதலை, மக்கள் விடுதலை என்று இரண்டாக இந்திய விடுதலைப் போராட்டத்தைப் பிரிக்கலாம். அதிலே ஆங்கிலேயரிடமிருந்து அரசியல் அதி காரத்தை இந்தியர்களுக்குப் பெற வேண்டும் இன்று நடந்த இந்திய தேசிய விடுதலைப் போராட்டத்தை மண் விடுதலை என்று குறிப்பிடலாம். அதே நேரத்தில் ஆரியர்கள் இடமிருந்து சமூக விடுதலையை பெற்று பிறப்பால் உள்ள ஏற்றத்தாழ்வுகளை களைந்து சமத்துவ மானுடம் படைக்கும் சமூக விடு தலையை முன்வைத்த ஆரிய-திராவிட போராட் டத்தை மக்கள் விடுதலைப் போராட்டம் என்று குறிப்பிடலாம்.

முன்னதின் தலைமகனாக காந்தி இருந்தார் என்றால் பின்னதின் தலைமகன்களாக வடக்கே அண்ணல் அம்பேத்கரும், தெற்கே தந்தை  பெரியாரையுமே குறிப்பிடமுடியும். அந்த சமூக விடுதலைக்காக தந்தை பெரியார் அனைத்து தளங்களிலும் வேலை செய்தார்.

ஜனநாயக வழியில் அதிகாரம்

ரஷ்யப் புரட்சியின் போதும் சீனப் புரட்சி யின் போதும் எப்படி மக்களை அரசியல் படுத்தி இலக்கியம், பண்பாடு, கலாச்சாரம் என அனைத்து துறைகளிலும் மக்களை மீட்டுருவாக் கம் செய்து அதிகாரத்தைக் கைப்பற்றினார்களோ,  அதேபோல தந்தை பெரியாரும் கல்வி, கலை, இலக்கியம், பண்பாடு, அரசியல் என்று அனைத்துத் தளங்களிலும் ஆரிய நீக்கம் செய்து ஜனநாயக வழியில் அதிகாரத்தைத் தமிழர்கள் பக்கம் மடை மாற்றம் செய்தார்.

ஆதிக்கத்திற்கு எதிரான எதிர் அடையாள அரசியலை தமிழர் நிலத்தில் வேரூன்ற செய்தவர் தந்தை பெரியார் அவர்களே ஆவார்.  அதனால் தான் தமிழகம் கல்வி பொருளாதாரம், சுகாதாரம், தொழில், வேலைவாய்ப்பு, ஆதிக்க எதிர்ப்பு என்று எல்லாவற்றிலும் இந்தியத் துணைக் கண்டத்திலேயே இன்று தனித்து நிற்கின்றது.   இந்த மாபெரும் சமூக மாற்றத்தின் பின்னால் தந்தை பெரியார் என்னும் பிறவி போராளியின் கடும் உழைப்பு இருப்பதை யாராலும் மறுக்க முடியாது" என்றுதமது உரை யில் குறிப்பிட்டார்.

எழுத்துச் சீர்திருத்தம்

கூட்டத்திற்குத் தலைமை வகித்த துணை வேந்தர் செ.வேலுசாமி உரையாற்றும் போது, "வீரமாமுனிவர் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் செய்தார். அவருக்குப்பின் எழுத்துச் சீர்திருத்தம் செய்து தமிழ் வரிவடிவத்தை எளிதாக்கியவர் தந்தை பெரியார். 1979 ஆம் ஆண்டு தமிழக அரசு பெரியாரின் எழுத்துச் சீர்திருத்தத்தை சட்டமாக்கியது மலேசியா, சிங்கப்பூர் நாடு களும்  எழுத்துச் சீர்திருத்தத்தை பின்பற்றுகிறது.

பெரியார் சுயமரியாதை கற்றுக் கொடுத்தவர், பகுத்தறிவு சிந்தனைகளை பரப்பியவர். ஜாதி ஒழிப்புப் போராளியாகத் திகழ்ந்தார்,  பெண்ணு ரிமைக்காக இடைவிடாது போராடினர். எல் லோரும் கல்வி அறிவு பெற காரணமாக இருந்தவர்

பெரியார் கரோனா நோயினை வழிபாடு காப் பாற்றாது. யாகம் செய்வதால் பயன் இல்லை, கரோணா நோயை விடக் கொடுமை யானது மூடநம்பிகை,  அதற்கு ஒரே மருந்து பகுத்தறிவு தான் என்று துணைவேந்தர் உரையாற்றினார்

மனிதநேயமே பெரியாரின் கொள்கை

தொடக்க உரை நிகழ்த்திய இணை துணைவேந்தர் பேராசிரியர் எஸ்.தேவதாஸ் தம் உரையில்: பூமிப் பந்தில் எங்கே கை வைத்தா லும் பெரியார் கொள்கை ஒலிக்கும், பெரியார் தலைவர், வழிகாட்டி, அவரை கவுதம புத்தரு டன் ஒப்பிடலாம். பெரியார் சுயசிந்தனையாளர். இயக்கம் நடத்தியவர், போராட்டங்கள் செய் தவர், அவர் ஒரு சித்தாந்தவாதி தமிழ் நாட்டில் மட்டும்தான் 69 சதவீத இடஒதுக்கீடு இருக் கிறது. தமிழ் நாட்டின் தனித்தன்மைக்குக் காரணம் பெரியார் தமிழ் நாட்டில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 13 மற்ற மாநில  உயர்நிதிமன்றங்களில் பெண் நீதிபதி இல்லை. போராட்டம் தான் வாழ்க்கை,  வாழ்க்கை தான் போராட்டம். தமிழ்நாட்டில் கல்வி பரவ -குலக்   கல்வி ஒழிய பெரியார் காரணம். பார்ப்பன ஆதிக்கம் ஒழிய நீதிகட்சி வித்திட்டது. 1919 இல் காங்கிரசில் சேர்ந்த பெரியார் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தைத் செய்தார். 1922 திருப்பூர் மாநாட்டில் மனுசாஸ்திரத்தைக் கொளுத்த வேண்டும் என்றார், பிறவியின் காரணமாக வேற்றுமை காட்டிய சேரன் மாதேவி குருகுலத்தை ஒழிப்பதற்கு பெரியார் காரணமாக இருந்தார். மனித நேயமே பெரியா ரின் கொள்கைக்கு அடிப்படை. அவருடைய நினைவு நாளில் இந்த வரலாற்றை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று உரையாற்றினார்.

நிகழ்ச்சி, கரோனா நோய்த் தொற்றுத் தடுப்பு  குறித்த அரசு வழிகாட்டுதலின்படி நடைபெற்றது. விழாவிற்கு வந்திருத்தோரை உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவர் முனைவர் அசோக்குமார் அண்ணாதுரை வரவேற்றார். பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய  இயக்குனர் நம். சீனிவாசன் நன்றியுரை நிகழ்த்தினார். உயிர் தொழில்நுட்பவியல் துறை உதவிப் பேராசிரியர்     பெ.மாலா நிகழ்ச்சியினைத் தொகுத்து வழங்கினார். கல்விப்புல முதன்மையர் பேராசிரியர் சிறீவித்யா உட்பட பேராசிரியர்கள், அலுவலர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

Comments