பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டின் மாட்சி!

பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாடு திருநெல்வேலியில் நேற்று ஒரு நாள் முழுவதும் மானமிகு தோழர் சூர்யா சேவியர் அவர்களின் அரிய முயற்சியில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டினைத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள்  தொடங்கி வைக்க, தி.மு.. தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் அவர்கள் நிறைவுரையாற்றினார். மேனாள் தமிழக சட்டப் பேரவைத் தலைவர் திரு. ஆவுடையப்பன் போன்ற பல பெரு மக்களும் பங்கேற்றுக் கருத்துரை வழங்கியுள்ளனர்.

இந்த மாநாடு கூட்டப்பட்டதன் நோக்கம் என்ன? 1919 ஜூலையில் தந்தை பெரியார் காங்கிரசில் சேர்ந்தார்.

“1920-ஆம் வருடம் திருநெல்வேலியில் நடந்த 26-ஆவது ராஜீய மாகாண கான்பிரன்சின் போது பிரதிநிதிகள் சாப்பாட்டு விடுதியில் திரு. .வெ.ராமசாமி நாயக்கருடைய அக்கிராசனத்தின் கீழ் பிராமணரல்லாதார் கூட்டம் ஒன்று கூடி சட்டசபைகள் முதலிய தேர்தல் ஸ்தானங்களுக்கு வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் ஏற்படுத்துவதோடு, அரசாங்க உத்தியோகங்களிலும் வகுப்பு ஜனசங்கைக்குத் தகுந்தபடி வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கொடுக்கவேண்டும் என்று அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டுமென்கிற தீர்மானத்தை காலஞ்சென்ற திரு. சோமசுந்தரம் பிள்ளை, திருவாளர்கள் வி. . சிதம்பரம் பிள்ளை, தண்டபாணிப் பிள்ளை மற்றும் திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம் முதலிய ஸ்தலங்களிலுள்ள சில வக்கீல்களுமாகச் சேர்ந்து உடனே விஷயாலோசனைக் கமிட்டிக்கு அனுப்பிய அத்தீர்மானத்தை திரு. .வெ. ராமசாமி நாயக்கர் பிரேரேபிக்க,திருவாளர்கள் வி.. சிதம்பரம் பிள்ளை, தண்டபாணிப்பிள்ளை முதலியோர்கள் ஆமோதிக்க, காலஞ்சென்ற திரு எஸ். கஸ்தூரி ரெங்கய்யங்கார் எழுந்து வீதாசாரம் (Percentage) என்கிற வார்த்தைக்குப் பதிலாகபோதுமான' என்னும் அர்த்தத்தைக் கொடுக்கத் தகுந்த (Adequately) 'அடிகுவேட்லி' என்கிற பதத்தைப் போட்டுக் கொள்ளும்படி ஒரு திருத்தப் பிரேரேபணை கொண்டு வந்தார்.

இந்த 'அடிகுவேட்லி' என்ற பதத்திற்கு என்ன பொருள் என்று திரு. ராமசாமி நாயக்கர் அம்மாநாட்டுக்கு அக்ராசனாதிபதியாக இருந்த இதே திரு. சீனிவாசய்யங்கார் அவர்களைக் கேட்க, அவர் இரண்டும் ஒரே அர்த்தந்தான்; ஆனால், ‘பர்சன்டேஜ்' என்பதை விடஅடிகுவேட்லி' என்பது நல்ல வார்த்தை யென்று சொல்லி தீர்மானத்தை நிறைவேற்றி விட்டார்.

இது சமயம் திரு. ராஜகோபாலாச்சாரியார் முதலியோர்களும் அக்கூட்டத் தில் ஆஜராகித்தானிருந்தார்கள். அதோடு ராஜாங்கக் கல்வித்துறைகளில் சமஸ்கிருதக் கல்விப் பயிற்சிக்கு உள்ள யோக்கியதையும் செய்முறையும் தமிழ் கல்விக்கும் இருக்க வேண்டுமென்று ஒரு தீர்மானம் திரு. ராமசாமி நாயக்கரால் பிரேரேபிக்கப்பட்டு திரு. வி. . சிதம்பரம் பிள்ளையால் ஆமோதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால், விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டம் முடிந்ததும் வெளியில் வந்து திரு. . வெ. ராமசாமி நாயக்கர் சில ஆங்கிலம் படித்தவர்களைக் கண்டு 'அடிகு வேட்லி' என்பதற்கும்பர்சென்டேஜ்' என்பதற்கும் என்ன வித்தியாசம்? என்று கேட்டபோது அவர்கள், 'அடிகுவேட்லி' என்பது இருபொருள் கொண்டதென்றும், அதாவது யோக்கியதைக்குத் தகுந்த என்கிற பொருள் கூட கொள்ளலா மென்றும், ‘பர்சன்டேஜ்' என்கிற வார்த்தைதான் மிகத் தெளிவானது என்றும் சொன்னார்கள்.

பிறகு மாநாட்டில் இத்தீர்மானம் வரும்போதுபர்சன்டேஜ்' என்கிற வார்த்தையையே போட்டுக்கொள்ள வேண்டும் என்று திரு. நாயக்கரும், திரு. தண்டபாணி பிள்ளையும் அக்ராசனர் திரு. சீனிவாசய்யங்காரிடம் சொன்னார்கள்! அவரும் அப்படியே ஆகட்டுமென்று ஒப்புக்கொண்டார்.

கடைசியாக மாநாட்டில் இது தவிர மற்ற தீர்மானங்கள் முடிந்தவுடன் அக்ராசனாதிபதி எழுந்து திடீரென்று தமது முடிவுரையை ஆரம்பித்து விட்டார். திரு. தண்டபாணிப் பிள்ளை தன்னுடைய வகுப்புவாரிப் பிரதிநிதித்துவ தீர்மானம் என்ன ஆயிற்றென்று அக்ராசனரை கூட்டத்தில் கேட்டார்.

அக்ராசனர் திரு. சீனிவாசய்யங்கார். அது பொது நன்மைக்கு விரோதமான தீர்மானமானதால் அவற்றை ஒழுங்குத் தவறானதென்று தீர்மானித்து விட்டதாகச் சொல்லிவிட்டார். உடனே திரு. தண்டபாணிப்பிள்ளை எழுந்து, விஷயாலோசனைக் கமிட்டியில் நிறைவேற்றப் பட்டதன் தீர்மானம் இங்கு எப்படி ஒழுங்குத் தவறு என்று கேட்டார். அப்போது, அங்கிருந்த பிராமணர்கள் திரு. பின்ளையை உட்காரும்படி கூச்சல் போட்டு அடக்கி விட்டார்கள்.” (‘வகுப்புரிமை வரலாறு', கி.வீரமணி, பக் 51-53)

திருநெல்வேலியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமை தீர்மானத்தை தந்தை பெரியார் முன்மொழிந்த அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்ச்சியின் நூற்றாண்டு விழாதான் நேற்று நெல்லையில் நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமை தீர்மானத்தைக் கொண்டு போவதும், ஏதோ ஒரு  காரணத்தைக் காட்டி பார்ப்பனர்கள் அதனை நிறைவேறாமல் செய்து வந்ததும் ஒரு வாடிக்கை யாகவே ஆகிவிட்டது.

கடைசியில் 1925 நவம்பரில் திரு.வி. கல்யாணசுந்தரனார் தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலும் அந்தத் தீர்மானத்தை தந்தை பெரியார் முன்மொழிந்தார். மாநாட்டுத் தலைவர் திரு.வி.. தலைவர் என்ற முறையில் அனுமதி மறுக்க, தந்தை பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினார் என்பது வரலாறு.

அதே காங்கிரசை அதன் ஆட்சியில் வகுப்புரிமைக்காக முதல் சட்டத் திருத்தத்தை 1951இல் மேற்கொள்ளச் செய்ததில்  தந்தை பெரியார் வெற்றி பெற்ற வரலாறு காலந்தோறும் காலந்தோறும் போற்றிப் புகழ்ந்து பேசப்பட்டுக் கொண்டு தானிருக்கும்.

நெல்லை மாநாட்டினை காணொலி மூலம் துவக்கி வைத்து உரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் இந்த வரலாறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி 69 விழுக்காடு இடஒதுக்கீடு இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் 76ஆம் அரசியல் சட்டத் திருத்தத்துடன் அரசமைப்புச் சட்டம் 9ஆவது அட்டவணைப் பாது காப்பின் நிலைநிறுத்தப்பட்ட வரலாற்றை விவரித்து இன்றைக்குச் சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள சவால்களையும் கூறி அதனை எதிர் கொண்டு முறியடிப்போம் என்று கூறினார்.

மாநாட்டு நிறைவுரையை வழங்கிய தி.மு.. தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் அவர்கள் முத்தாய்ப்பாக சொன்ன கருத்து முக்கியமானது.

தமிழர்களாகிய பலர் -

கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்கள் -

இலட்சக்கணக்கான ஏழை மக்கள் - வாழ்வு பெற வேண்டும் என்பதற்காகத் தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைய வேண்டும் என்று நாம் நினைக்கிறோம். சமூகநீதியில் அக்கறை கொண்ட அனைவரும் நினைக்கிறார்கள்.

இந்த அரசைத்தான் ஆதிக்க வர்க்கத்தினர் எதிர்க்கிறார்கள்.

'எல்லார்க்கும் எல்லாம்என்று சொல்பவர்கள் நாம்!

'எல்லாம் எங்களுக்கு மட்டுமே' என்று சொல்பவர்களுக்கு இது பிடிக்கவில்லை!

எதிர்வரும் தேர்தல் என்பது -

`எல்லாம் எங்களுக்கு மட்டுமேஎன்று சொல்பவர்களுக்கும் -

`எல்லார்க்கும் எல்லாம்என்று சொல்பவர்களுக்குமான போராட்டம் ஆகும்!

`எல்லார்க்கும் எல்லாம்என்று சொல்பவர்கள் வென்றால் மட்டும் தான்எல்லார்க்கும் எல்லாம்' கிடைக்கும் என்று தி.மு.. தலைவர் குறிப்பிட்டார்.

திராவிடம்' என்றால் அனைவருக்கும் அனைத்தும் - 'ஆரியம்' என்றால் இதற்கு எதிரானது என்று திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் சொல்லி வருவதும், தி.மு.. தலைவர் நெல்லையில் கூறுயதும் இந்த இரண்டும் இரட்டைக் குழல் துப்பாக்கி என்பதற்கான எடுத்துக்காட்டே!

நெல்லையில் பெரியார் சமூகநீதி நூற்றாண்டு மாநாட்டை நடத்தியவர் களுக்கு மனமார்ந்த பாராட்டுகள்.

Comments