‘பெரியார்' விருதினை பெற்ற தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கும் ‘சமூகநீதிக்கான கி.வீரமணி விருது' பெற்ற எழுச்சித்தமிழர் தொல்.திருமாவளவனுக்கும் இரா.முத்தரசன் வாழ்த்து

அன்புடையீர், வணக்கம்.

மதிப்பிற்குரிய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம்.

அறிவாசான் அய்யா, பெரியார் .வெ.ரா. அவர்களின் 47ஆவது நினைவு நாளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா. பாண்டியன் அவர்கள் பெரியார் விருது பெறுவதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவ னத் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள்சமூக நீதிக்கான கி.வீரமணி விருதுபெறுவதும் மிகுந்த மகிழ்ச்சி  அளிக்கிறது.

தோழர். தா. பாண்டியன் கற்றோர் நிறைந்த குடும்பத்தில் இருந்து, அதிலும் கற்பிக்கும் ஆசிரியர்கள் நிறைந்த குடும் பத்திலிருந்து பொது வாழ்வுக்கு வந்தவர். இவரது சிறு வய தில் சமூகத்தில் நிலவி  வந்தகுற்றப்பரம்பரைஎன ஒரு குறிப்பிட்ட சமூகத்தை  ஒதுக்கி வைத்தும், அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு வந்ததையும் நேரில் கண்டவர். தற்போது 88 வயதை நிறைவு செய்து 89ஆம் அகவையில் பயணித்துக் கொண்டிருப்பவர். அவரது உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டிருப்பினும் சமூகப் பணியை தடையின்றி தொடர்ந்து வருபவர்.

காரைக்குடி அழகப்பா கல்லூரியில் விரிவுரையாளராக பணிபுரிந்த காலத்தில் சுயமரியா தைச் சுடராகவும், பொதுவுடைமைப் போராளியாகவும், தொன்மை தமிழ் மொழி, இலக் கியம், பண்பாடு என எல்லாத் தளங்களிலும் ஆழங்கால் பட்ட, பேராசான் .ஜீவானந்தம் அவர்களின் அழைப்பை ஏற்று, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் முதல் பொதுச் செயலாளர் பொறுப்பை ஏற்று திறம்பட செயல்பட்டவர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக பணியேற்று, கட்சியின் மாநிலச் செயலாளர்,  தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர் என பல நிலைகளில் சிறப்பாக செயல்பட்டு முத்திரை பதித்தவர்.

தோழர் தா. பாண்டியனின் பேச்சும், எழுத்தும் கேட்போரையும், படிப்போரையும் எளிதில் வசப்படுத்தும். எல்லா நிலைகளிலும் பகுத்தறிவுக் கருத்துகளையும், அறிவியல் கண்ணோட்டங்களையும் தொன்மை இலக்கிய சான்றுகளுடன் எடுத்துக் கூறுவதை ஒரு போதும் மறந்ததில்லை என்பது இவரது தனிச்சிறப்பு. எதிர் கருத்துக்களோடு மோதும் போது தீப்பொறி பறக்கும். பெரியார் விருது பெறும் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு இரா.முத்தரசன் குறிப்பிட்டுள்ளார்.

அன்புடையீர், வணக்கம்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தோழர் தொல். திருமாவளவன் அவர்கள் சமூக நீதிக் கான ஆசிரியர் கி. வீரமணி விருது பெறுவது எல்லையில்லா மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாடு அரசின் தடயவியல் துறையில்  ஆய்வு அறிவியல் உதவியா ளராக பணிபுரிந்த போது சமூகத்தில் நிலவி வரும்  தீண்டாமை, ஒடுக்கு முறை, அடக்குமுறையால் பாதிக்கப் படும்  மக்களை திரட்டி சமூக நீதிப் போராட்டத்தை தீவிரமாக முன் னெடுத்தவர். தலித் சிறுத்தைகள் இயக்கத்தின் முன்னோடி திரு. மலைச்சாமியோடு அமைப்பில் இணைந்து செயல்படத் தொடங்கியவர். தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அமைப்பை நிறுவி இயக்கத்தை வழிநடத்தத் தொடங்கி, அரசியல் களத்தில் நிராகரிக்க முடியாத இடத்தை பெற்றிருப்பவர். இவரது உரையும், எழுத்தும் மொத்த சமூகத்திற்கும் அவசியமானது.

பெரியார் திடலில் பயின்ற மாணவர். பகுத்தறிவு சிந்தனை விதை களை விதைத்து வருபவர். மனுஸ்மிருதியின் சமூக சதிவலையை அறுத்தெறியும் பணியை தொடர்பவர். சனாதன  கருத்துகளை எதிர்த்தப் போராட்டத்தை முன்னெடுத்து வரும் தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு ஒட்டு மொத்த தமிழகமும் ஆதரவுக் கரம் கொடுக்க வேண்டும். அவரது சமூக நீதிப் போராட்டத்தை ஊக்கப்படுத்தி வரும் திராவிடர் கழகம் அவருக்கு சமூக நீதி காக்க ஆசிரியர் கி. வீரமணி விருது அளிப்பது மிக மிகப் பொருத்தமானது. பெருமைக்குரியது.

விருது பெறும் தோழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு தோழமை கலந்த  வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு இந்தியக் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத் தரசன் குறிப்பிட்டுள்ளார்.

Comments