பகையைத் தீர்த்துக் கொள்கிறார்களா?
நடப்பாண்டில் ஆந்திரத்தில் புதிய ரயில் பாதை அமைக்க ஒதுக்கப்பட்ட தொகை ரூ.437 கோடி; தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட தொகை ரூ.27 கோடி மட்டுமே!
ஊருக்கு இளைத்தது தமிழ்நாடுதானா? பா.ஜ.க. - சங் பரிவார்கள் எப்படியாவது தமிழ்நாட்டின்மீது தங்கள் ஆத்திரத்தைத் தீர்த்துக் கொள்ளவேண்டும் அல்லவா!
சதித் திட்டம் உருவாகிறது!
நடக்கவிருக்கும் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவரே முதலமைச்சராக வருவார்: - முருகன் தமிழக பா.ஜ.க. தலைவர்
அ.தி.மு.க. தலைவர்கள் இதனை எதிர்த்தாலும், பி.ஜே.பி. தலைவர் திரும்பத் திரும்ப இப்படியே சொல்லிக் கொண்டுள்ளார். ஏதோ - இவர்களுக்குள் ஒரு சதித் திட்டம் உருவாகியுள்ளது என்பது மட்டும் உறுதியாகிறது.
இவர்கள் அத்தனைப் பேரும் ஏமாறும் வகையில் தமிழ்நாட்டு மக்கள் தீர்ப்பு அளிப்பார்கள் என்பது மட்டும் உறுதியோ, உறுதி!
வெட்கம் கெட்டதுகள்!
முற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு: - தமிழ்நாடு ‘பிராமணர்' சங்கம் தீர்மானம்..
அதுது£ன் பொருளாதாரத்தில் நலிந்தோருக்கு (EWS) 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்ட விரோதமாக வழங்கப்பட்டுள்ளதே. அதற்கு மேலும் 10 சதவிகித இட ஒதுக்கீடா? இட ஒதுக்கீட்டால் தகுதி - திறமை நாசமாய்ப் போகும் என்று கூச்சல் போட்டவர்கள், இப்பொழுது கூச்சநாச்சமின்றி இப்படியொரு கோரிக்கையை வைப்பவர்களுக்கு வெட்கமில்லையா!
ஏன் சந்தேகமோ!
பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி நீடிக்கிறது: - பா.ஜ.க. தேர்தல் இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி தகவல்.
இடை இடையே இப்படி ஏன் சொல்லவேண்டும், ஏன் சந்தேகமோ!
எதிர்ப்பது நியாயமா?
திரிணாமுல் காங்கிரசிலிருந்து பா.ஜ.க.வுக்குக் கட்சி தாவிய எம்.பி.யைச் சூழ்ந்துகொண்டு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்ப்பு முழக்கம்.
ஒரு கட்சியில் நின்று வெற்றி பெற்று, மற்றொரு கட்சிக்குத் தாவுவோரை எதிர்த்து மக்கள் புரட்சி ஏற்படுவது அவசியம்தான். ஆனாலும், வன்முறை தேவையில்லை.
ஆர்.எஸ்.எஸின்
சோதனைச் சாலை
கட்டாய மத மாற்றத் தடை சட்டத்தால், உத்தரப்பிரதேசத்தில் இருந்து தப்பித்துச் செல்லும் வேற்று மதக்காரர்கள்..
உத்தரப்பிரதேசம்தான் ஆர்.எஸ்.எஸின் மாதிரி சோதனைச் சாலை ஆனது தெரியாதா?
மதத்தைக் கடந்தது மனிதநேயம்!
திருப்பதி மலை வழிப்பாதையில் மயங்கி விழுந்த 60 வயது பெண்ணை
6 கி.மீ. தூரம் தோளில் சுமந்து சென்று மருத்துவமனையில் சேர்த்த ஒரு முஸ்லிம்.
இதற்கு ஏதாவது தேசிய தடைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. மனிதாபிமானம் மதத்தைக் கடந்தது என்ற நல்ல புத்தி வருமா ஹிந்துத்துவா வெறியர்களுக்கு?
பாடம் பெறத் தயாராகட்டும்!
திருவள்ளுவருக்குக் காவி உடை: - கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பு
திருக்குறளும், மனுதர்மமும் ஒன்றே என்று சொன்ன கும்பல், அடுத்த கட்டத்திற்கு தாவியிருக்கிறது. வட்டியும் முதலுமாக வரும் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் பாடம் போதிப்பார்கள்.
அண்ணா பெயரில் இப்படியா?
தி.மு.க.வுக்கு சனிப் பெயர்ச்சியாம்: -சொல்லுகிறார் அமைச்சர் ஜெயக்குமார்.
இந்தக் கழிசடைகளை எல்லாம் அண்ணா எதிர்த்து எழுதினார் - பேசினார்.
அவர் பெயரால் கட்சி நடத்துவோருக்குப் பிடித்து ஆட்டுவது மூடநம்பிக்கை.
கட்சிக்காரர்களை விசிறி ஆக்கிவிட்டார்களே!
அ.தி.மு.க. பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுக்கு ஜெயலலிதா உருவம் பொறித்த விசிறிகள் வழங்கப்பட்டன.
கட்சித் தொண்டர்களை விசிறி ஆக்கிவிட்டார்களே!