எழுச்சித் தமிழருக்கு தாய் வீட்டுச் சீதனம்!

* நமது சிறப்பு செய்தியாளர்

 தந்தை பெரியார் 47ஆம் ஆண்டு நினைவு நாளான நேற்று திராவிடர் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் நினைவைப் போற்றும் நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன. (24.12.2020) நேற்றைய விடுதலையில் காண்க)

சோம.இளங்கோவன் வரவேற்பு

பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பில் விடுதலைச் சிறுத்தைக் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களுக்கு சமூக நீதிக்கான வீரமணி விருது வழங்கும் நிகழ்ச்சிசென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத் தில் தந்தை பெரியாரின் நினைவு நாளான நேற்று முற்பகல் (24.12.2020) 10.30 மணிக்குத் தொடங்கியது.

பெரியார் பன்னாட்டமைப்பின் தலைவர் டாக்டர் சோம. இளங்கோவன் அமெரிக்காவிலிருந்து காணொலி மூலம் வரவேற்புரையாற்றினார்.

எளிமையையும், உழைப்பையும் வரித்துக் கொண்ட எழுச்சித் தமிழர் மானமிகு தொல். திருமா வளவன் அவர்கள் இந்த அளவுக்கு உச்சத்திற்கு உயர்ந்துள்ளார். பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்டம் உலக முழுவதும் உருவாகி அவர்களின் கருத்துகள் பரப்பப் பட்டு வருகின்றன.

சமூகநீதி, சுயமரியாதை, ஜாதி ஒழிப்பு, பெண்ண டிமை ஒழிப்புக் கொள்கைகளைப் பரப்பிய தந்தை பெரியார் நினைவு நாளில் உறுதி ஏற்போம்.

குறிப்பாக இந்தியா எங்கும் இவர்களின் கொள் கைகள் ஒலிக்கப்பட வேண்டும். இந்த வகையில் எழுச்சித் தமிழர் பணி சிறக்கும் என்பதில் அய்ய மில்லை. அவருக்குப் பெரியார் விருது வழங்குவதில் பெரியார் பன்னாட்டு அமைப்புப் பெருமை கொள் கிறது என்றார்.  வீரமணி சமூகவிருது வழங்கும் அமைப்பின் தலைவர் பேராசிரியர் இலக்குவன் தமிழ் காணொலி மூலம் விருதும், ஒரு லட்ச ரூபாய் நிதியும் வழங்கும் உரையினை நிகழ்த்தினார்.

(இலக்குவன் தமிழ் உரையை தனியே காண்க)

பெரியார் பன்னாட்டு நிறுவனம் சார்பாக டாக்டர் மீனாம்பாள் விருதினையும் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினார். தொடக்கத்தில் திருமாவளவனுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்தார்.

ஒலி ஒளி காட்சிகள்

தொல். திருமாவளவன் வாழ்க்கை நிகழ்ச்சிகள் சிலவற்றை ஒலி ஒளி காட்சிகளாகத் திரையிடப் பட்டன.

தமிழர் தலைவர் பாராட்டுரை - வாழ்த்துரை

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தனது உரையில் முக்கியமாகக் குறிப்பிட்ட தாவது:

காலில் செருப்பு அணிய முடியாமலும் முழக்காலுக் கும் கீழே வேட்டி கட்ட முடியாமலும் இருந்த சமுதாயத்தில், அந்த உரிமைகளை வாங்கிக் கொடுத்த - தன்மான உணர்வூட்டிய தந்தை பெரியார் அவர் களின் நினைவு நாள் இந்நாள்.  தோளில் துண்டுபோடும் உரிமையை வாங்கிக் கொடுத்தவர் அவரே!

சுயமரியாதை உணர்வூட்டிய ஞானசூரியனின் 47ஆம் ஆண்டு நினைவு நாள் இந்நாள்.

தந்தை பெரியார் மறைந்திருக்கலாம்; ஆனால் அவர் ஊட்டிச் சென்ற இனவுணர்வை, சுயமரியாதை உணர்வினை எந்தக் கொம்பனாலும் அசைக்கவே முடியாது.

திராவிடர் கழகமும் விடுதலைச் சிறுத்தைக் கட்சி யும் வேறு வேறானவையல்ல.

இரு கண்கள் - இரு கால்கள் போன்றவை இவை.

இன்றைக்கு சகோதரர் திருமாவளவனுக்கு அளிக் கப்பட்டுள்ள சமூகநீதி விருதினை முதன் முதலாக பெற்றவர் மண்டல் குழுப் பரிந்துரையைச் செயல் படுத்திய சமூகநீதிக் காவலர் வி.பி. சிங் அவர்கள்.

இதே மேடையில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களுக்கு வழங்கப்பட்டதுண்டு.

அந்த வகையில் நமது அருமைச் சகோதரர் திருமாவளவனுக்கு இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது. அதற்காக அவரைப் பாராட்டுகிறேன் - வாழ்த்துகி றேன்.

மனுதர்மத்தைப் பற்றி அவர் கூறிய கருத்துக்காக அவரை நோக்கித் தாக்குதலைத் தொடுத்தனர். அந்த நேரத்தில் சற்றும் தளர்ந்து போய் விடாமல் பாறை போல் உறுதியாக நின்று எதிர் கொண்டார். திராவிடர் கழகமும் விடுதலையும் அவர் பக்கம் நின்றது.

சகோதரர் திருமாவளவன் பெரியார் திடலில் வளர்ந்தவர். இங்கு உருவான நாற்று இப்பொழுது  விடுதலைச் சிறுத்தைகள் என்ற அரசியலில் நடப்பட்டு இன்று செழிப்பாக வளர்ந்துள்ளது கண்டு நாங்கள் பூரிக்கிறோம். இந்த விருது என்பது தாய்வீட்டுச் சீதனம் என்று திராவிடர் கழகத் தலைவர் சொன்ன போது மண்டபமே அதிரும் அளவுக்குப் பலத்த கரஒலி! சனாதன எதிர்ப்பு மாநாட்டை எழுச்சியுடன் நடத்திக் காட்டினார் - வெற்றி பெற்றார்.

இன்று அரசியலில் மரக் குதிரைகளைக் (Trozen Horses) கொண்டு வந்து காட்டுகிறார்கள். அதன் மூலம் அதிகாரத்தைப் பிடிக்கலாம் என்று திட்டமிடு கிறார்கள்.

தி.மு.. தலைமையில் உள்ள மதச்சார்பற்ற முற் போக்குக் கூட்டணி அவற்றையெல்லாம் முறியடிக்கும் திமுக ஆட்சி அமைக்கும் - திராவிடம் வெல்லும்.

சமூகநீதிக்கு பல சவால்கள் தோன்றியுள்ளன. அவற்றை முறியடிப்போம்.

இளைஞர்கள் தந்தை பெரியார் அண்ணல் அம் பேத்கர் கொள்கை வழி பயணிக்க முன்வர வேண் டும். எழுச்சித் தமிழர் போல உருவாக வேண்டும்.

எழுச்சித் தமிழர் சகோதரர் நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ வேண்டும் - மேலும் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும் என்று பாராட்டினார், சீராட்டினார் தமிழர் தலைவர்.

எழுச்சித் தமிழர் ஏற்புரை

விருதினைப் பெற்றுக் கொண்ட எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்கள்சட்டக் கல்லூரியில் நான் படித்துக் கொண்டிருந்த போது - வாய்ப்புக் கிடைக்கும் பொழுதெல்லாம் பெரியார் திடலுக்கு வருவேன், கூட்டங்களைக் கேட்பேன்; பெரியார் நூலக வாசகர் வட்டக் கூட்டங்களைக் கேட்பேன். திராவிடர் கழகம் நடத்திய இந்தி எதிர்ப்புப் போராட் டம், ஈழத் தமிழருக்கான போராட்டங்களில் எல்லாம் கலந்து கொண்டு இருக்கின்றேன், ‘இது எனக்குத் தாய்வீடு‘. ஆசிரியர்,  இது  தாய் வீட்டுச் சீதனம்' என்று சொன்னார். தமிழர் தலைவர் வடிவமைத்துத் தரும் திட்டங்க ளைச் செயல்படுத்த விடுதலைச் சிறுத்தைகள் என் றைக்கும் தயார்!

இந்த விருதுக்கு நெஞ்சம் நிறைந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விருது எனக்குத் தனிப்பட்ட முறையில் அளித்ததல்ல. இந்த இயக்கத் திற்கு -  இயக்கத் தோழர்களுக்கு அளிக்கப்பட்ட விருது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” (உரை முதல் பக்கம் காண்க).

பேராசிரியர் டாக்டர் ரவிசங்கர் கண்ணபிரான் நன்றி கூறிட நிகழ்ச்சி மதியம் 12 மணியளவில் நிறை வுற்றது.

Comments