செய்தியும், சிந்தனையும்....!

சுய ஜாதி மரியாதை

கேள்வி: மரியாதை, சுய மரியாதை என்ன வித்தியாசம்?

பதில்: மற்றவர்களை நாம் மதித்து அவர்கள் நம்மைப் பெருமைப்படுத்துவது - மரியாதை. மற்றவர்களை அவமதித்து, நம்மை நாமே பெருமைப்படுத்திக் கொள்வது - பெரியாரிய அகராதியில் சுயமரியாதை.

('துக்ளக்', 6.1.2021, பக்கம் 9)

சங்கர மடத்தில் சங்கராச்சாரியார் - சுப்பிரமணிய சாமி, அசோக் சிங்கால் என்றால் பக்கத்தில் நாற்காலி போட்டு சமமாக உட்கார வைப்பதும், அதேநேரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் அமைச்சர் என்றாலும், .பி.ஜே.அப்துல் கலாமானாலும் தரையில் உட்கார வைப்பதுதான் அவாள் போற்றும் ஒரு குலத்துக்கொரு நீதி காட்டும் சுயஜாதி மரியாதையும், பிறரைச் சூத்திரர் (வேசி மக்கள்) என்று கூறும் பூணூல் திமிர்தண்ட மரியாதையும் ஆகும்!

'சூத்திரன் என்றால் ஆத்திரம் கொண்டடி' என்பது சுயமரியாதைக்காரர்களின் சூடு, சுரணைக்கான குரல்; குருமூர்த்திகள் ஆவணி அவிட்டத்தில் ஆண்டுதோறும் பூணூல் புதுப்பிக்கும் வேலை என்பது - அவாள் துவிஜாதி (இரு பிறப்பாளர்) என்ற ஆணவத்தை இன்றளவும் புதுப்பிக்கும் புத்தி - புரிந்துகொள்வீர்!

பிராமணனைக் கொளுத்துகிறார்களா?

கேள்வி: ராவணனைக் தி..வினர் கொண்டாடக் காரணம் என்ன?

பதில்: அறியாமையால். ராவணன் நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் பயின்ற பிராமணன் என்று அவர்களுக்குத் தெரியாது.

(‘துக்ளக்', 6.1.2021, பக்கம் 9)

அப்படியா சேதி? அந்த பிராமணன் எப்படி ராட்சதன், அரக்கன் ஆனான்? நான்கு வேதங்களையும், ஆறு சாஸ்திரங்களையும் கற்ற பிராமணனைத்தான் ஆண்டுதோறும் ராம்லீலா மைதானத்தில் கொளுத்துகிறார்களோ, பலே, பலே!

குடியுங்கள் குடிமக்களே!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளுடன் இணைந்த டாஸ்மாக் பார்கள் இன்றுமுதல் திறப்பு.

குடி'மக்கள் சிறக்க குடி செய்வார் ஆட்சியோ!

ததிங்கனத்தோம் போடும் ஆட்சி!

பழுதடைந்த நிலையில் 163 துணை சுகாதார நிலையங்களில் தங்கிப் பணியாற்ற செவிலியர்கள் அச்சம்!

இவற்றை எல்லாம் பழுது பார்க்க அரசின் கஜானாவில் பணம் ஏது? ரேசன் அட்டைதாரர்களுக்குத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தலா ரூ.2500 கொடுப்பதற்கே ததிங்கனத்தோம் போடும் நிலையில், இதை எல்லாம் கவனிக்க முடியுமா, என்ன?

சுத்தப் புரூடா!

காஞ்சி, செங்கை மாவட்டங்களில் சிவன் கோவில்களில் ஆரூத்ரா தரிசன சுவாமி புறப்பாடு ரத்து.

அக்கிரமம், அக்கிரமம் - சிவனை அவமதிக்கும் செயல்! ‘சிவாய நம' என்பவர்களுக்கு அபாயமில்லை என்பது எல்லாம் சுத்தப் புரூடாதானா?

நல்லதுக்கு ஒரு சூடு!

தமிழ்நாட்டில் கூட்டணி அமைச்சரவையை மக்கள் ஏற்கமாட்டார்கள்: - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

இதற்கு மேலும் பா...வுக்கு உறைக்காவிட்டால் யார்தான் என்ன செய்ய முடியும்?

என்ன ஆச்சரியம் சொல் மனமே!

தந்தையே பெண் குழந்தையை விற்ற கொடுமை! ரூ.4 லட்சத்துக்கு அடுத்தடுத்து விற்ற 5 பேர் கைது.

பெண்ணை இழி பிறவி எனும் மனுதர்மத்துக்கு இந்தக் காலத்திலும் வக்காலத்து வாங்கும் நாட்டில், இதில் என்ன ஆச்சரியம்?

Comments