திருச்சி,
டிச. 29- திருச்சி மாவட்ட கழக முன்னாள்
செயலாளர் ச.கணேசனின் தந்தையும்,
மாவட்ட மகளிர் பாசறை தலைவி
அம்பிகாவின் மாமானருமான சண்முகம் உடல் நலக்குறைவால் கடந்த
நவம்பர் 28 அன்று மறைவுற்றார்.
அவரின்
படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி டிச.27 அன்று காலை
11 மணியளவில், திருச்சி விமானம் நிலையம் பகுதியிலுள்ள பாரதி நகரில் நடை
பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு
மாவட்ட கழக தலைவர் ஞா.ஆரோக்கியாராஜ் தலைமை வகித்து மறைந்த
சண்முகம் படத்தினை திறந்து வைத்து நினைவுரை யாற்றினார்.
மேலும் பெல்.ம.ஆறுமுகம்,
மண்டல செயலாளர் ப.ஆல்பர்ட், மணி
மாறன், லால்குடி மகளிர் பாசறை தலை
வர் பி.என்.ஆர்.அரங்கநாயகி ஆகியோர் நினைவுரையாற்றினார். நிறைவாக
மண் டல மகளிரணி தலைவர்
கிரேசி, தலை மைக்கழக பேச்சாளர்
வழக்குரைஞர் பூவை.புலிகேசி உரையாற்றினர்.
இறுதியாக
அம்பிகா கணேசன் நன்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியில்
கணே சனின் தாயார் கோவிந்தம்மாள்,
பெரியார் பிஞ்சு யாழினி, கணேசனின்
சகோதரர் குமார், அவரது வாழ்விணையர் வைதேகி,
லால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர்,
திருச்சி மாவட்ட செயலாளர் மோகன்தாஸ்,
மாநகர தலைவர் துரைசாமி, காட்டூர்
சங்கிலிமுத்து, கனகராஜ், ராஜேந்திரன், கல்பாக்கம் ராமச்சந்திரன், சிறீரங்கம் நகரத் தலைவர் கண்ணண்,
பெரியார் பெருந்தொண்டர் மாவடியான், முபாரக், மகாமணி, ராஜ சேகரன், ஆதி,
சசிகாந்த், திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் இரா.தமிழ்ச்சுடர், ஆண்டிராஜ், மாவட்ட மகளிரணி செயலாளர்
சாந்தி, அம்மணி அம்மாள், சங்கீதா,
அமுதா, விடுதலை கிருஷ்ணன், குணசேகரன், மதிவாணன், வேலாயுதம், தமிழழகன், வீரா, விஜயகுமார், கவியர
சன், பெரியார் பிஞ்சு யாழினி, வி.சி.வில் வம்,
புனிதா, மா.செந்தமிழினியன் ஆகி
யோர் கலந்து கொண்டனர்.