கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு ‘பெரியார் விருது!'

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு ‘பெரியார் விருதி'னை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வழங்கி, பாராட்டுகளைத் தெரிவித்தார். உடன்  ஜஸ்டிஸ் அரிபரந்தாமன் (ஓய்வு), கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பொருளாளர் வீ.குமரேசன், துணைப் பொதுச்செயலாளர் ச.இன்பக்கனி உள்ளனர். தமிழர் தலைவர் தொகுத்த ‘‘பெரியார் வாழ்வின் வெளிச்சங்கள்'' என்ற புத்தகத்திற்கு தமிழ்நாடு அரசின் விருது வழங்கப்பட்டது - விருதுடன் ரூ.10 ஆயிரம் காசோலையும் வழங்கப்பட்டிருந்தது. அந்தத் தொகையினை இயக்க வளர்ச்சிக்காக கழகப் பொருளாளர் வீ.குமரேசனிடம் வழங்கினார் தமிழர் தலைவர் (சென்னை, 24.12.2020).


Comments