இணையவழியில் ஏழாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு

புதுச்சேரி முதல்வர் தொடக்கி வைக்கிறார்

 புதுச்சேரி, டிச. 28- ஏழாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு 28, 29, 30 ஆகிய மூன்று நாள்கள் காணொலி மூலம் நடைபெறுகிறது. மாநாட்டை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தொடக்கி வைக்கிறார்.

இது தொடர்பாக சென்னை வளர்ச் சிக் குழுமத் தலைவர் வி.ஆர்.எஸ். சம்பத் வெளியிட்ட செய்திக்குறிப்பு வருமாறு,

2020-ஆம் ஆண்டுக்கான உலகத் தமிழர் பொருளாதார இணைய வழி உச்சி மாநாடு மற்றும் ஏழாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு, இன்று (டிச.28) மாலை 4.30 மணி முதல் டிச.30ஆம் தேதி வரை இணைய வழியில் நடைபெறவுள்ளது. இதனை புதுச்சேரி முதல்வர் வி.நாராயணசாமி தொடக்கி வைக்கிறார். உலகத் தமிழர் பொருளா தார அறக்கட்டளை அமைப்பின் நிறு வனர் வி.ஆர்.எஸ். சம்பத் வரவேற்கிறார்.

கயானாவுக்கான முன்னாள் இந்தியத் தூதர் வி.மகாலிங்கம் தலைமை வகிக் கிறார். கயானா முன்னாள் பிரதமர் மோசஸ் வீராசாமி, மொரீசியஸ் முன்னாள் அதிபர் பரமசிவம் பிள்ளை வையாபுரி, விஅய்டி பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன், நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் சிறப்புரை ஆற்றுகின்றனர்.

தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.விமலா, முன் னாள் டிஜிபி ஆர்.நடராஜ், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவன முதன் மைச் செயல் அதிகாரி நீரஜ் மிட்டல், அய்எப்எஸ் அதிகாரி சிறீதரன் மதுசூத னன், கத்தார் தோஹா வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஆர்.சீதாராமன், தேசிய மகளிர் மேம்பாடு அமைப்பின் முன்னாள் தலைவர் லலிதா குமாரமங்க லம், சிறீபிரியா வரதீஸ்வரன் உள்ளிட் டோர் கலந்து கொண்டு முக்கிய தலைப் புகளின் கீழ் கருத்துரைகளை எடுத்து ரைக்கின்றனர். நாளை (டிச.29) நடை பெறும் நிகழ்ச்சிக்கு மலேசிய முன்னாள் அமைச்சர் டி.மாரிமுத்து தலைமை வகிக்கிறார். நிகழ்வில், துணைத் தூதர் பி.எஸ்.கார்த்திகேயன், வெளிநாட்டு மனித வள மேம்பாட்டுக் கழகத் தலைவர் தர்மேந்திர பிரதாப் யாதவ், தமிழக முன் னாள் அமைச்சர் துரைமுருகன், புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் வி.பி.சிவக் கொழுந்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துகளை எடுத்து ரைக்கவுள் ளனர். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Comments