அறிவாற்றல் மிக்கவர்களை அவமானப்படுத்தும் மத்திய பாஜக அரசு அமர்த்தியா சென் சட்டவிரோத குடியேறியா?

பல்கலைக்கழக வேந்தருக்கு முதலமைச்சர் மம்தா கண்டனம்

கொல்கத்தா, டிச. 30 அமர்த்தியா சென் சட்டவிரோத குடியேறியா? என்று பல்கலைக்கழக வேந்தருக்கு கண் டனம் தெரிவித்துள்ளார் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா.

மேற்கு வங்க மாநில சாந்தி நிகேதனில் அமைந்துள்ள மத்திய பல்கலைக்கழகமான விசுவ-பாரதி பல்கலைக்கழக வளாகத்தில் சட்ட விரோதமாகக் குடியிருப்பவர்கள் பட்டியலில் பொருளாதார அறிஞர் அமர்த்தியா சென் பெயர் இடம் பெற்றுள்ளது.

இதனைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வர் மம்தா அமர்த்தியா சென் னுக்குக் கடிதம் ஒன்றை எழுதினார். அதில், ”பல்கலைக்கழகத்துக்குள் புதி தாய் முளைத்த படையெடுப்பாளர்கள் அமர்த்தியா சென்னின் குடும்பத்தைப் பற்றி கேள்வி எழுப்புவது முறை யற்றது'' என்று தெரிவித்தார்.

சாந்திநிகேதன் இந்தியாவின், மேற்கு வங்க மாநிலத்தின் பிர்பூம் மாவட்டத்தில், போல்பூர் எனுமிடத் தில்  அமைந்துள்ளது. இவ்விடத்தில் இரவீந்திரநாத் தாகூர் 1862ஆம் ஆண்டில் புகழ்பெற்ற விஸ்வபாரதி பல்கலைக் கழக நகரை நிறுவினார்.

சாந்திநிகேதன்அமர்த்தியா சென்

1908 ஆம் ஆண்டில் வங்கக் கவிஞர் இரவீந்திரநாத் தாகூர், அமர்த்தியா சென்னின் தாய்வழி தாத்தாவும், சமஸ்கிருத அறிஞருமான  க்ஷிதிமோகன் சென் அவர்களை சாந் திநிகேதனுக்கு  அழைத்திருந்தார். மேலும், விசுவ-பாரதி பல்கலைக்கழ கத்தை நிறுவியதில் க்ஷிதிமோகன் சென் முக்கிய பங்கு வகித்தார்.

நவம்பர் 3, 1933 ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்த வங் காள மாகாணத்திலிருக்கும் சாந்தி நிகேதனில் பிறந்த அமர்த்தியா சென்னுக்கு பெயரிட்டவர் கவிஞர் தாகூர் ஆவார்.

தாகூரின் காலத்திலிருந்து, வளா கத்தில் உள்ள சில இடங்கள், பல ருக்கும் 99 ஆண்டு குத்தகைக்கு விடப்பட்டன. அமர்த்தியா சென் சாந்திநிகேதனில் தனது தந்தையால் கட்டப்பட்ட பிரதிச்சியில் வளர்ந் தார். மே 1951 இல்,  விஸ்வ பாரதி ஒரு மத்திய பல்கலைக்கழகமாகவும், நாடாளுமன்றச் சட்டத்தின் மூலம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த உயர்க்கல்வி நிறுவனமாகவும் அறி விக்கப்பட்டது.

2020, டிசம்பர் 9 அன்று பல் கலைக்கழக ஆசிரியர்- உறுப்பினர் உடனான சந்திப்பின் போது, பல் கலைக்கழக துணைவேந்தர் பித்யுத் சக்ரவர்த்தி, அமர்த்தியா சென் உடனான தொலைபேசி உரையாட லைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறினார். உரையாடலில் ,”பாரத் ரத்னா  என்று தன்னை அறிமுகப் படுத்திய  அமர்த்தியா சென், சாந்தி நிகேதனில் தனது வீட்டைச் சுற்றி யுள்ள நடைபாதை வியாபாரிகளை வெளியேற்ற வேண்டாம்'' என்று  கேட்டுக் கொண்டதாக துணை வேந்தர் தெரிவித்தார். மேலும், தனது வீட்டிற்கு அவ்வப்போது வருகைத் தரும் தனது மகளின் சவுகரியத்திற்காக பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள தனது இடத்திற்குள் நடைபாதை வியாபாரிகளை அனுமதிக்க வேண் டும் என்று அமர்த்தியா சென் பரிந் துரைத்ததாகவும் துணைவேந்தர் கூறினார்

மெய்நிகர் கூட்டத்தில் துணை வேந்தர் கூறிய இந்தக் கருத்தின் உண்மை தன்மைகளைக் கண்டறிய பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் சுதீப்தா பட்டாச்சார்யா, அமர்த்தியா செனுக்கு உடனடியாக  மின்னஞ்சல் ஒன்றை அனுப்பினார்.

மின்னஞ்சலுக்குப் பதிலளித்த சென், துணைவேந்தர்  தொலை பேசியில் அழைத்ததாகக் கூறியதை முற்றிலும் மறுத்தார். மேலும், “விசுவ-பாரதியின் துணைவேந்தர் ஆன் லைன் ஆசிரியர்- -உறுப்பினர் கூட் டத்தில் வெளிப்படையாக இவ்வாறு கூறுவதை அறிந்து மிகவும் ஆச்சரி யப்படுகிறேன். அவருடன் இது போன்ற உரையாடலை செய்த தில்லை. நான் ஒருபோதும் என்னைபாரத் ரத்னாஎன்று குறிப்பிட்ட தில்லை.  காய்கறி வியாபாரிகளை தடையின்றி அனுமதிக்க, எனது மகள் சவுரிகரியம் மட்டும் முக்கிய காரணம் என்றும் நான் நினைக்க வில்லை. என் குடும்பத்தினர் காய்கறிகளை எங்கே வாங்குகிறார்கள் என்று கூட எனக்குத் தெரியாது.    இறுதியாக, சாந்திநிகேதனில் உள்ள எனது வீட்டிற்கு  வெளியே காய்கறி வியாபாரிகள் இல்லை என்பதையும் இன்கு நான் தெரிவித்துக் கொள் கிறேன்'' என்று தெரிவித்தார்.

தொடரும் சர்ச்சை

ஆசிரியர்  சங்கத் தலைவர் சுதீப்தா பட்டாச்சார்யா உள்நோக்கத்துடன் ஊடகங்களை அணுகியதாகவும்,    பல்கலைக்கழக நடத்தை விதிகளை மீறியதாகவும் துணை வேந்தர் பித்யுத் சக்ரவர்த்தி குற்றம் சாட்டினார். பல்கலைக்கழக அதிகாரிகள், டிசம்பர் 19 ஆம் தேதி வெளியிட்ட தாக்கீதில், பல்கலைக்கழக அதிகாரிகளின் ஒப் புதல் பெறமால் சுதீப்தா ஊடகங் களுக்கு தகவல்களை பகிர்ந்து கொண்டார் என்று குற்றம் சாட்டப் பட்டிருந்தது. டிச.24 இல், மேற்கு வங்க அரசுக்கு பல்கலைக்கழக அதி காரிகள் எழுதிய கடிதத்தில்,  வளா கத்துக்குச் சொந்தமான பல இடங் கள் தவறான முறையில் பதிவு செய் யப்பட்டிருப்பதாக தெரிவித்தனர். மேலும், வளாகத்துக்குள்  அங்கீகாரம் பெறாமல் குடியிருப்பவர்களின் பட் டியலையும் கடிதத்தில் சுட்டிக் காட்டினர். அப்பட்டியலில், பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென் பெயரும் இடம் பெற்றிருந்தது.

குத்தகைக்கு விடப்பட்ட  1250 .அடி மனையைத் தாண்டி, கூடுத லாக 130 .அடி இடத்தினை அமர்த்தியா சென் ஆக்கிரமித்து இருப்பதாக விஸ்வ-பாரதி வளாக எஸ்டேட் அலுவலகம் தெரிவித்தது.

வெள்ளிக்கிழமை, மேற்கு வங்க முதல்வர் மம்தா அமர்த்தியா சென் னுக்கு எழுதிய கடிதத்தில், ”ஒரு சகோதரியாக நான் என்றுமே உங்கள் பின் நிற்பேன்'' என்று ஆறுதல் கூறினார். “பாஜகவின் சித்தாந்தத்திற்கு செவி சாய்க்கவில்லை  என்பதால் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் அவர் எதிர்கொண்டு வருவதாகவும்''  அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டார்.

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் தாமஸ் டபிள்யூ. லாமண்ட் பல் கலைக்கழக பேராசிரியராக பணி யாற்றி வரும் அமர்த்தியா சென், 1998 இல் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசையும், 1999 இல் இந்திய அரசின் மிகப்பெரியபாரத ரத்னா' விருதையும்  பெற்றார். பாஜக தலை மையிலான தேசிய ஜனநாயக கூட் டணியின் சில கொள்கைகளை மிகக் கடுமையாக விமர்சித்து வருபவர்.

தி டெலிகிராப்' என்ற ஆங்கில நாளிதழிடம் பேசிய அமர்த்தியா சென், “சாந்திநிகேதன் கலாச்சாரத்திற் கும், விசுவ பாரதி பல்கலைக்கழக துணைவேந்தருக்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதாக கூறினார். “சாந்திநிகேதனில் நான் பிறந்து வளர்ந்ததால், சாந்திநிகேதன் கலாச்சாரத்திற்கும், துணைவேந் தருக்கும் இடையிலான பெரிய கலாச்சார இடைவெளியைப் பற்றி என்னால் கருத்து தெரிவிக்க முடியும். மேற்கு வங்க மாநிலத்தின்மீதான கட் டுப்பாட்டை அதிகரிக்கும் பொருட்டு டில்லி மத்திய அரசாங்கத்தால் அதிக அதிகாரம் பெற்றுள்ளவராகத் தன்னை அவர் கருதிக் கொண்டுள் ளார்'' என்றும் தெரிவித்தார்.

Comments