நன்கொடை

திருச்சி .விடுதலை செல்வத்தின் தந்தை ஜி.ஆராமுதன் 17ஆம் ஆண்டு நினைவு நாளை யொட்டி (30.12.2020 ) விடுதலை வளர்ச்சிக்கு ரூ.100/-  நன்கொடை வழங்கியுள்ளார். நன்றி!

- - - - -

திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமை யில், இணை ஏற்பு விழா கண்ட, விருதுநகர் மாவட்ட கழக இளைஞரணித் தலைவர் .சுந்தரமூர்த்தி - பா.சீனியம்மாள் இணை யரது மகள், தமிழர் தலைவர் அவர்களால் "மணியம்மை" என பெயர் சூட்டப்பட்ட பெரியார் பிஞ்சுவின் இரண்டாமாண்டு பிறந்தநாள் விழா 25.12.2020 வெள்ளி மாலை 6 மணிக்கு சிவகாசி வடபட்டி யில் நடைபெற்றது. நிகழ்வில் மாவட்ட கழக செயலாளர் விடுதலை தி.ஆதவன், பொதுக்குழு உறுப்பினர் வானவில் .மணி, மாநில .. துணைத் தலைவர் கா.நல்லதம்பி, திருத்தங்கல் கழக அமைப்பாளர் மா.நல்லவன், சிவகாசி நகர கழக தலைவர் மா.முருகன், மண்டல கழக இளைஞரணிச் செயலாளர் இரா.அழகர், மாவட்ட கழக இளைஞரணிச் செயலாளர் .ஆசைத் தம்பி, அவர் தம் இணையர், வானவில் .கதிரவன், முத்துக்குமார் மற்றும் தோழர்கள், உற்றார், உறவினர், நண்பர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

விழா மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.2000, விடுதலை வளர்ச்சி நிதி ரூ.2000, விடுதலை ஆண்டுச் சந்தா ரூ.1800 நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள். நன்றி!

- - - - -

அருப்புக்கோட்டை நகர கழக தோழர் பொகணேசன் - சுந்த ரானந்தஜோதி இணையரின் மகள் .வளர்மதி - கு.கோபால கிருஷ்ணன் இணையருக்கு (11.12.2020) ஆண் குழந்தை பிறந்துள்ளது. பேரன் பிறந்ததன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல நிதி ரூ.500-ம், அருப்புக்கோட்டை தந்தை பெரியார் படிப்பக நிதி ரூ.100-ம் நன்கொடை வழங்கினர். வாழ்த்துகள். நன்றி!

- - - - -

மதுரை மாநகர் பெரியார் தொண்டர்கள் வீ.இராமசாமி-இராசேசுவரி ஆகியோரின் பெயர்த்தியும், கத்தாரில் வசிக்கும் மருத்துவர் கே.கே.முருகன் கார்கியின் மகளுமான ஜான்சியின் (30.12.2020) 13ஆம் ஆண்டு பிறந்த நாள் மகிழ்வாக, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கப்பட்டது. நன்றி! வாழ்த்துகள்!Comments