புரட்சியாளர் பெரியார்!

ஒரு நூற்றாண்டின் தவிர்க்கப்பட முடியாத போராளி. மனித சமூகத்தின் உண்மையான விடுதலை என்பது எளிய, ஒடுக்கப்பட்ட மக்களின் விடு தலையில் தான் உள்ளது என்பதை ஆணித்தரமாக உணர்ந்து தனது தொண்ணூற்றைந்தாவது வயதிலும் அதற்கான போராட்ட முன்னெ டுப்பை, எக்காலத்திலும் எந்த சூழ் நிலையிலும் எதன் பொருட்டும் சமரச மற்ற  போராட்ட வடிவத்தையே தன்னுடைய இறு திக்காலம் வரையிலும் கொள் கைப் பிடிப்புடன் போராட்ட வாழ்க்கை வாழ்ந் தவர் பெரியார்.

சுயமரியாதை, ஜாதி ஒழிப்பு, சமத்துவம், சம தர்மம், பெண் கல்வி, பெண் விடுதலை, பெண் களுக்கு சொத்துரிமை, மனிதநேயம், முற்போக்குக் கருத்துகள், கடவுள் மறுப்பு போன்றவை பெரியா ரின் கொள்கைகளாகவும் சிந்தனைகளாகவும் இருந்தன. இத்தகைய சுயமரியாதைக் கொள்கை களை பெரியார் தன் வாழ்நாள் முழுவதும் எழுதியும் பேசியும் மக்களுக்கு சுயமரியாதை எண்ணங்களையும் கருத்துகளையும் கொண்டு சென்றார்.

மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு

சலிப்பும் ஓய்வும் தற்கொலைக்குச் சமம்

என்றார். மனித சமுதாய வரலாற்றில் ஈடு இணையற்ற சமூகப் போராளி தந்தை பெரியார். மனித சமுதாயம் உள்ளவரையில் பெரியாரின் கொள்கைகளும் சிந்தனைகளும் எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும் என்பதில் எவ்வித அய்ய மும் இல்லை. பெரியார் மிகப்பெரிய தீர்க்கத்தரிசி. அவர் சமூக மாற்றத்தின் சின்னமா கவும் சமூக மறுமலர்ச்சியின் குறியீடாகவும் திகழ்கிறார். அவரது சிந்தனையின் தேவை அவர் மறைந்து அரை நூற்றாண்டுகளாகியும் இன்றும் அதே வீச்சுடன் தேவைப்படுகிறது.

பெரியார் என்னும் பகுத்தறிவுப் பகலவன் ஈராயிரம் ஆண்டுகளாய் சூத்திரர்களாகவும், பஞ்சமர்களாகவும் ஒடுக்கப்பட்டு, அடக்கப் பட்டு, மனித உரிமைகள் மறுக்கப்பட்டு அவனு டைய சுதந்திரம் பறிக்கப்பட்டு விலங்கினும் கீழான நிலையில் வாழ்ந்து வந்த மக்களை தன் னுடைய சுயமரியாதைத் தத்துவம் கொண்டு மீட்டவர். ஜாதி ஒழிப்பை கருத்தியலாகக்  கொண்டு செய ல்பட்டவர். ஜாதி, மனிதனைச் சாக்கடையாக்கும்; மதம் மனிதனை முட்டாளாக் கும் எனக்கூறி இந்திய சமூகத்தில் ஜாதி வேரூன்றி நிற்க காரணமான இந்து மதத்தையும் எதிர்த்தார். இதன்  காரணமாக கடவுள் மறுப்பையும் முன்னெடுத்தார்.

பெண் விடுதலை இல்லையேல் சமூக விடு தலை சாத்தியமில்லை என்பதில் உறுதியுடன் இருந்த பெரியார் பெண் விடுதலையை வலியுறுத் தினார். பெண்களுக்குக் கல்வி உரிமையும் சொத்துரிமையும் வழங்கிவிட்டால் சமூகத்தில் காணப்படும் பெண்ணடிமைத் தளையிலிருந்து அவர்களை வெளியேற்றி விடலாம் என்று பெண் விடுதலைக்காகப் பாடுபட்டார். பெண் கல்வி, பெண்களுக்கு சொத்துரிமை, குழந்தைத் திரு மணம் ஒழிப்பு, கைம்பெண் மறுமணம் போன்ற வற்றுக்காக போராட்டத் தளத்தை விரிவுபடுத் தினார். பெண்களுக்கான சுயமரியாதையை வலி யுறுத்தினார்.

இன்றைய தமிழகத்தில் சமூகநிலை ஓரளவு மேம்பட்டிருக்கிறது. அதற்குக் காரணமாகத் தந்தை பெரியார் இருக்கிறார். பெரியாரின் சமர சமற்ற கொள்கைகளாலும் போராட்ட முன்னெ டுப்புகளாலும் இத்தகையதொரு நிலையை எட்டி யுள்ளோம். நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் போன்றவை பல் வேறு தளங் களில் அதற்கான முன்னெடுப்பு களை செய்தது. அதே வேளையில் இன்றும் தமிழகத்தில் - தமிழகக் கிராமங்களில், இந்து சமூக அமைப்பு முறையில் ஜாதி மிகத் தீவிரமாகவும், நுணுக் கமாகவும் செயல்பட்டு வருகிறது. அது இன்றைய நவீன தொழில் நுட்பத்தின் வளர்ச்சியைப் பெற்று நவீன ஜாதியம் வளர்ந்து தன்னைப் புதுப்பித்து வருகி றது. இந்திய சமூகம் ஜாதிய சமூகமாகவும், சக மனிதனை அடிமைப்படுத்தும் சமூகமாகவும் இருந்து வருகிறது. இந்துத்துவத்திற்கு எதிரான  கொள்கைகளை ஏற்றுக்கொண்ட அல்லது அக் கொள்கைகளால் வழிநடத்தப்படுகிற தமிழகத் தில் சுய ஜாதிப்பற்று, ஜாதிய வன் கொடுமைகள் குறையாத வேளையில், வட இந்தியாவில் ஜாதியின் பெயரால் நடக்கும் கொடுமைகளும், வன்கொடு மைகளும், அடக்குமுறை களும் சொல்லி மாளா. மாட்டின் பெயரால் நடத்தும் கொலைகள், சிறுபான்மை யினர்  வெறுப்பு, பழங்குடி மக்கள் தங்கள் வாழ் வாதாரத்தை இழந்து கார்ப்பரேட் உலக மயமாக்கலுக்குப் பலியாகியுள்ள சூழலில், பார்ப்பனிய இந்துத்துவ தீவிரவாதம் அதிகரித்து வருகிற இச்சூழலில் இச்சமூ கத்திற்கு பெரியாரும்   பெரி யாரிய சிந்த னை களும் இன்னும் பலமடங்கு தேவைப்படுகிறது.

1920-1930 காலகட்டத்தில் பெரியார் சமூகத் தின் கேடுகளாக எவற்றையெல்லாம் விமர்சித்து ஒழிக்க பாடுபட்டாரோ அவை எல்லாம் இன்று வேறு வடிவில் மாற்றம் பெற்று அழியாமல் அப்படியே இருக்கின்றன. இது இச்சமூகத்தின் இழிநிலை. இன்றும் கிராமங்கள் ஜாதியை வளர்த்தெடுக்கும் மற்றும் அதன் இருப்பை அழியாமல் காக்கும் இடங்களாகத் திகழ்கின் றன. கிராமங்களில் ஜாதி உயிர்ப்புடன் இருக் கிறது. தீண்டாமை என்பது நவீன வடிவம் பெற்றுள்ளது. இந்நிலை அழித்தொழிக்கப்பட வேண்டும். இது வளர்ச்சியடைந்த சமூகத்தின் அடிப்படைத் தேவையாகும். ஜாதி ஒழிப்பு, மூட நம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்ற வற்றை பெரியார் கூறிய காலகட்டத்தில் இருந்த சமூக நிலை இன்று ஓரளவே மாற்றமடைந்து உள்ளது.

பெரியார் எனும் பெரும் ஆளுமை, சமூக விஞ்ஞானி ஈராயிரம் ஆண்டு அடிமைத் தளையை உடைத்தெறிந்தவர். அண்ணல் அம்பேத்கர் மற்றும் தந்தை பெரியார் என்ற இரு பெரும் சமூக விஞ்ஞானிகள், பல்வேறு மூடக் கருத்துகளை அறிவியலுக்கு ஒவ்வாத பழமை வாதக் கருத்துகளைச் சொல்லி ஜாதியின் பெய ரால் ஒரு மனிதன் பிற மனிதனைத் தாழ்த்தும், அடிமைப்படுத்தும் ஜாதிய சமூகத்தை அழித் தொழிக்க அறிவுத்தளத்திலும் சமூகத்தளத் திலும் புரட்சிகரமான செயல்பாடுகளை முன் னெடுத் தனர். அதற்காக தங்கள் வாழ்நாள் முழுவதும் போராடிய போராளிகள் அவர்கள். அந்த இருபெரும் தத்துவங்களே (அம்பேத் கரியம், பெரியாரியம்) மனித மாண்பை மீட் டெடுக்கின்ற செயல்பாடுகளின் அடிப்படை யாக உள்ளன. இந்திய சமூகத்தில் மனித மாண்பை மீட்டெடுப் பதற்கான தேவை அவ சியமானது. அதற்கான போராட்டத்தை பெரியா ரின் தடி கொண்டு முன்னெடுக்க வேண்டும்.

இன்றைய சூழலில் இந்துத்துவ பிற்போக்குக் கொள்கைகள் கல்வி, சமுதாயம், கலாச்சாரம், உணவு, தனியுரிமை, போன்ற பல்வேறு அமைப் புகளில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியுள்ளன. மேலும் பெண்கள் இத்தகைய பிற்போக்குக்  கருத் துகளால் ஒடுக்கப்பட்டு வருகின்றனர். அடிப்படை உரிமைகள், கருத்துரிமைகள் பறிக்கப்படுகின்றன. இத்தகைய மனிதத்திற்கு (மனித நேயத்திற்கு) எதிரான செயல்களை அழிக்க, அடக்குமுறைக்கு எதிராகப் போராட பெரியாரும் பெரியாரின் சிந்த னைகளும் காலத் தின் கட்டாயத் தேவையாகிறது.

இதன் மூலம் பெரியார் (பெரியாரியம்) என் னும் கருத்தியல் அவர்  காலத்திற்கு மட்டு மல்லா மல் மனிதச் சமுதாயம் முழுமைக்கும் தேவைப்படு கிறது. எங்கெல்லாம் மனிதன் ஒடுக்கப்படுகி றானோ, அங்கெல்லாம் பெரியார் தேவைப்படு வார். சமூக ஏற்றத்தாழ்வுகள் இருக் கும் வரையில் அவற்றை அழிக்க பெரியார் என்றும் உயிர்ப்புடன் இருப்பார். பெரியார் கண்ட சமத்துவ, சமதர்ம, சமூக நீதி சமுதாயம் படைக்கத் தேவையான செயல்பாடுகளையும் முன்னெடுப்போம். பெரியா ரின் கருத்துகளை யும் சிந்தனைகளையும் எளிய மக்களிடம் கொண்டு செல்வோம். பெரியார் என் னும் பேரன்புக்காரருக்கு என்றும் மரணமில்லை. அவர் என்றும் தனது சிந்தனைகள் மற்றும் சமூக நீதிக் கருத்துகளின் மூலமாக நம்மிடத்தில் புத்து யிர்ப்புடன் இருப்பார்.                                                                                    

- .கார்த்திக்                

Comments