லால்குடியில் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் விழா

திருச்சி, டிச. 30- திராவிடர் கழகத் தலைவரும், தமிழர் தலைவர் ஆசிரியருமான கி.வீரமணி அவர்களின் 88 ஆவது பிறந்த நாள்  விழா டிசம்பர் 2 நாடெங்கும் கழகத் தோழர்களால் மிகச்சிறப்போடும், எழுச்சியோடும் கொண்டாடப்பட்டது.

அதன் ஒரு பகுதியாக லால்குடி மாவட்டத் தில்  டிச.20 மாலை 5 மணியளவில் லால்குடி பெரியார் திருமண மாளிகையில், வெகு சிறப் புடன் பிறந்த நாள் விழா கொண்டாட்டப்பட்டது. இவ்விழாவிற்கு லால்குடி மாவட்டத் தலைவர் தே.வால்டேர் தலைமை ஏற்று தமிழர் தலை வரின் சிறப்புகளையும், இயக்கப்பணியையும் தொண்டையும் எடுத்துக் கூறி உரையாற்றினார். ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு லால்குடி பகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, சுயமரியாதை வீரர்களுக்கு நிதியுதவி மற்றும் அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள் வழங்கப் பட்டு வருவது வழக்கம். அது தொடர்ந்து செய் யப்படும். 

முன்னதாக அனைவரும் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் வா.குழந்தைதெரசா வரவேற் புரையாற்றினார். மாவட்டத் தலைவர் ஞா. ஆரோக்கியராஜ், மாவட்டச் செயலாளர் மோகன்தாஸ், மண்டலச் செயலாளர் .ஆல் பர்ட், லால்குடி மாவட்ட செயலாளர் அங்க முத்து, பொதுக்குழு உறுப்பினர் செம்பரை தர்மராஜ், லால்குடி மாவட்ட மகளிர் அணி தலைவர் பி.என்.ஆர். அரங்கநாயகி, மாவட்ட .. துணைத் தலைவர் சுப்ரமணியன், மாவட்ட .. துணை செயலாளர் எஸ்.டி.ஜி. இளஞ்சேட் சென்னி, மாவட்ட இளைஞரணித் தலைவர் .ஆசைதம்பி, மண்டல மாணவர் கழக செயலா ளர் தினேஷ்பாபு,   மண்டல இளைஞரணி தலைவர் வீ.அன்புராஜா, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் .அம்பிகா, மாவட்ட .. செயலாளர் கோ.பாலசுப்ரமணியன், மாவட்ட .. ஆசிரியர் அணித் தலைவர் .சண்முகம், மாவட்ட அமைப்பாளர் முசிறி ரத்தினம், மாவட்ட மாணவர் கழக தலைவர் சு.முரளிதரன், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் சி.வீரமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பா ளர் .வான்முடிவள்ளல், மாவட்ட இளைஞ ரணி செயலாளர் பனிமலர் செல்வன், மாவட்ட இளைஞரணித் துணைத் தலைவர் செந்தில் குமார், மாவட்ட . ஆசிரியரணி செயலாளர் பிரபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சட்டஎரிப்பு போராட்ட வீரர்களுக்கு சிறப்பு

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் பெரியார் பிஞ்சு திருச்சி செல்வி .. யாழினியின் பகுத்தறிவு கலைநிகழ்ச்சி நடைபெற்றது. சட்ட எரிப்பு போராட்ட வீரர்கள் கீழவாளாடி .கணேசன், அங்கமுத்து, கோவிந்தன், மைக்கேல், பிலவேந் திரன், கரிகாலன், பழனி, வெங்கடாசலம், மாவடியான், மருதை, சேட்டு, மேகநாதன் ஆகியோருக்கு சால்வை அணிவித்து தலா ரூ.1000மும், கருப்புச்சட்டை, கைலி, பெரியார் நாள்காட்டி வழங்கி சிறப்பு செய்யப்பட்டது. மாவட்டத்திலுள்ள 40 கழக இளைஞர்களை ஊக்கப்படுத்தும் விதத்தில்  சால்வை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. மேலும் இவ்விழாவில் இளைஞர்கள்  10 பேர் தானாக முன்வந்து கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். அவர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.

கழக பேச்சாளர் வழக்குரைஞர் பூவை.புலி கேசி தொடக்கவுரையாற்றினார். நிறைவாக திராவிட பாசறை அமைப்பாளர் செ.மெ.மதிவதனி சிறப்புரையாற்றினார்.  அவர் பேசும் போது, 10 வயதிலேயே எந்த தலைவரை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிந்து அறிந்து தந்தை பெரியாரை ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தான். அவரது குடும்பம் தி.மு.. குடும்பமாக இருந்தாலும், ஆசிரியரை பல்வேறு அரசியல் கட்சிகள் வருமாறு வாய்ப்புகள் வந்த காலத்தில் அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு பெரியாரை தலைவராக ஏற்றுக் கொண்டாரோ, அந்த தலைவரை கடைசி வரை பின்பற்றி செயலாற்று பவர்தான் ஆசிரியர் வீரமணி. அவரது பிறந்த நாளில் நாம் அனைவரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய  உறுதி மொழி என்னவென்றால் மதவாத, ஜாதியவாத சக்திகளை தமிழகத்தில் கால் ஊன்றாதபடி பணியாற்ற வேண்டுமென்று உறுதி ஏற்போம். பி.ஜே.பி. ஆர்.எஸ்.எஸ். போன்ற அமைப்புகள் தமிழக மண்ணில் எப் படியாவது கால் ஊன்றி விடலாம் என முயற் சித்து  வருகின்றனர். அவர்களை இந்த மண்ணி லிருந்து விரட்ட வேண்டுமென்றால் வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.. கூட்டணிக்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட்டால் தான் தி.மு..வை வெற்றி பெற செய்தால்தான். இது திராவிட மண் பெரியார் மண் என்பதை மதவாத சக்திகளுக்கு காட்ட முடியும் எனவே நாம் அனைவரும் மதவாத சக்திகளை விரட்டி அடிப்போம் என உறுதி ஏற்போம் என்று பேசினார். நிறைவாக லால்குடி ஒன்றிய செய லாளர் பிச்சைமணி நன்றி கூறினார்.

இவ்விழாவில் 300க்கும் மேற்பட்டோருக்குமயக்க பிஸ்கெட்டுகள்” - ஓர் எச்சரிக்கை புத்த கம் வழங்கப்பட்டது. இவ்விழாவில் கழகத்தினர் குடும்பம் குடும்பமாக பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டது.

Comments