ஜீவாதாரப் போராட்டம்

என்ன தைரியம்? எங்கள் நாட்டில் பார்ப்பானுக்குச் சமமாக வாழ எங்களுக் குத் தகுதி இல்லை, திறமையில்லை என் கிறார்கள்! படிக்கவும் வசதி தர மாட்டேன் என்கிறார்கள். பெரிய படிப்பு படிக்க வசதியில்லை - விட மாட்டேன் என் கிறார்கள். கொஞ்சம் மனிதனாகலாம் என்றாலும் அதற்கும் விடாமல் - கல்வித் திட்டம் என்ற பேரால் அவனவன் ஜாதித் தொழிலுக்குப் போங்கள் என்று அதற் கும் வெடி வைக்கிறார்கள். அடக்குவது என்றால் இப்படியா? எதிரி என்றால் வாழவே கூடாது என்றா நினைப்பது? இதுதான் பெரிய பண்பு என்பதா? உள்ளபடி இந்தக் கல்வித் திட்ட எதிர்ப்பு என்பதை ஓர் அரசியல் போராட்டமாகக் கருதி இதை நாங்கள் எதிர்க்கவில்லை. இதைச் சமு தாயப் போராட்டமாக, இன வாழ்வுப் போராட்டமாகக் கருதியே எதிர்க்கிறோம். எங்கள் இனத்துக்கு திராவிட இனத்துக்கு இந்த இனத்தையே தீர்த்துக் கட்டுவதற்காக வைக்கப்படும் பெருத்த வெடிகுண்டு என்று கருதியே இக்கல்வித் திட்டத்தை எதிர்க்கிறோம்.

இந்த எதிர்ப்பை, போராட்டத்தை நாங்கள் எங்களுடைய ஜீவாதாரமான, உயிர் நிலைப் போராட்டமாகக் கருதுகி றோம். உள்ளபடி ஆச்சாரியாருக் குச் சொல்ல விரும்புகிறேன்; அவர் இந்தத் திட்டத்தை (குலக் கல்வி) மாற்றவில்லை யானால் நிச்சயமாக (அவர் பதவியை விட்டுப் போகிறாரோ, இல்லையோ அது வேறு விஷயம்) இது அவருடைய இனத் தின் அழிவுக்கே ஒரு காரணமாய் இருக் கப் போகிறது. சும்மா நான் டூப் விட வில்லை. இதை நன்றாக உணர்ந்து கொள்ளட்டும். திராவிட மக்கள் இன்னும் இந்தக் கொடுமைகளையும் அக்கிரமத் தையும் நிச்சயமாகச் சகித்துக் கொண்டி ருக்க மாட்டார்கள். இனியும் அவர்களை அடக்கி வைத்திருப்பதும் தவறான காரி யம்; தற்கொலைக்கு ஒப்பான காரியம் என்றே சொல்லுவேன்.

- தந்தை பெரியார், (31.01.1954)

Comments