டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்
· உ.பியில் பாஜக
நடத்தும் அனைத்து நிகழ்ச்சிகளின் விளம்பரங்களிலும் பிரதமர் மோடி படம் தவிர வேறு எவர் படங் களும் இருக்கக்கூடாது என பாஜக எம்பிக்களுக்கு
தலைமை உத்தர விட்டுள்ளது. உபி முதல்வர் அடுத்த பிரதமராவார் என்ற செய்திகள் அடிபடும் நிலையில் இந்த அறிவிப்பு எனக் கருதப்படுகிறது என பத்திரிக்கை யாளர்
அனிதா கத்யால் குறிப்பிட்டுள்ளார்.
· மதம் மாறி காதல் திருமணம் செய்வதை தடுக்கும் சட்டத்தினை இயற்ற மத்தியப் பிரதேச பாஜக அரசின் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
· ஹிந்து தேசபக்தர் உருவாக்கம் என்று காந்தியைப் பற்றிய நூலை ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் வெளியிட உள்ளார்.
· ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற மோடியின் முழக்கத்தை நாடு முழுவதும் இணைய காணொலி மூலம் பாஜக பிரச்சாரம் மேற் கொள்கிறது.
இந்தியன்
எக்ஸ்பிரஸ்:
· நாட்டின் வேலையின்மை அதிகரித்துள்ளது. மோடி அரசின் தவறான கொள்கையினால் 13 கோடி பேர் வேலை இழந்துள்ளனர். சில பணிகள் நிரந்தரமாகவே காணாமல் போய்விட்டது என காங்கிரஸ் தலைவர்
ப.சிதம்பரம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
· வரும் கல்வி ஆண்டு முதல் அனைத்து மத்திய பல்கலைக்கழகங் களுக்கும் ஒரே தேர்வினை நடத்திட மத்திய கல்வி அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.
· அருணாச்சல பிரதேசத்தில் கூட்டணிக் கட்சியான அய்க்கிய ஜனதா தள சட்டமன்ற உறுப்பினர்கள்
ஆறு பேர் பாஜகவில் இணைந்ததை அடுத்து தற்போது பீகாரில் முதல்வர் நிதிஷ்குமார் வகிக்கும் உள்துறையை தங்களுக்கு தர வேண்டும் என
பாஜக தலைவர் சஞ்சய் பஸ்வான் கூறியுள்ளார்.
· மக்கள் மீது அவமதிப்பு செய்திடுபவர்கள் மிகவும் சக்திவாய்ந்த அரசியல் தலைவர்கள் என்றாலும் தப்பிக்க முடியாது என்பதை விவசாயிகள் பிரதமர் மோடிக்கு உணர்த்தியுள்ளனர். பிரதமர் தனது தனித்த அறையிலிருந்து உண்மையான உலகத்திற்கு வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் என எழுத்தாளர் தல்வீன்
சிங் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
- குடந்தை
கருணா
27.12.2020