தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க தனி நீதிமன்றங்கள்

தி.மு.. தலைவர் தளபதி மு..ஸ்டாலின் உறுதி

சென்னை,டிச.29, திமுக ஆட்சிக்கு வந்தால் பெண் குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க மாவட்ட அளவில் தனி நீதிமன்றங்களும், ரகசியமாக புகார் அளிக்க தனிப் பிரிவும் அமைக்கப்படும் என்று திமுக தலைவர்  தளபதி மு..ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் 27.12.2020  வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

சென்னை வண்ணப் பகுதியில் 13 வயது பெண் குழந்தையின் பிஞ்சுப் பருவம், உறவினர்கள் துணையுடன் சூறையாடப்பட்ட செய்திதி இந்துஆங்கில நாளிதழில் வெளியாகி யுள்ளது. பெண் குழந்தைகள் பாது காப்பு சட்டங்களும், குறிப்பாக 'போக்சோ' சட்டமும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய சமூகமும் படுதோல்வி அடைந்து நிற் பதை இந்தச் செய்தியின் ஒவ்வொரு வரியும் எடுத்துக் காட்டியிருக்கிறது.

இந்த வழக்கில் இதுவரை 20 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர் களில் ஒருவர் அரசியல் கட்சியை (பா...) சேர்ந்தவர். இன்னொருவர் காவல்துறை ஆய்வாளர் என்ற தகவல் ரத்தத்தை உறைய வைக்கிறது. வேலியே பயிரை மேய்வதுபோல, ஒரு காவல்துறை ஆய்வாளரே இந்த குற்றத்தில் ஈடுபட்டது அதிர்ச்சி அளிக்கிறது.

நிராயுதபாணியாக சில கயவர் களிடம் மாட்டிக்கொண்ட சிறு மியின் உறவினர்களோ, காவல் துறையோ, சமூகமோ பாதுகாப்பு அரணாக நிற்கவில்லை என்பது நம்மை வெட்கித் தலைகுனிய வைக் கிறது. சென்னையில் பெண் குழந் தைக்கு நேர்ந்துள்ள இந்த விபரீதம் புதிதல்ல. ஏற்கெனவே 2018-இல் சென்னை அயனாவரத்தில் 11 வயது காது கேளாத சிறுமி 17 மனித மிருகங்களால் பாலியல் வன்கொ டுமைக்கு உள்ளாக்கப்பட்டு, அந்த வழக்கில் 15 பேருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்பிறகும்கூட சிறுமிகளின் பாதுகாப்பில் சென்னை மாநகர காவல்துறையும் பாடம் கற்பிக்க வில்லை. சமூகமும் தட்டிக் கேட்ப தில்லை. பெற்றோரோ, பாதிக்கப்படும் குழந்தைகளோ புகார் அளிப்பதற்கு தயக்கம் காட்டுவது அதிர்ச்சி அளிக்கிறது. பாலியல் தொந்தரவுக்கு உள்ளாகும்போது உடனடியாக புகார் கொடுக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்த முடியா தது மிகுந்த வருத்தத்துக்குரியது.

விழிப்புணர்வு அவசியம்

எனவே, பெண் குழந்தைகளின் பாதுகாப்பில் பெற்றோர்கள் எச் சரிக்கையும், கவனமும் செலுத்த வேண்டும். புகார் அளிப்பதற்கு தயங்கும் மனநிலையை மாற்ற காவல்துறையும், சமூக நலத்துறையும் தீவிரமாக இணைந்து பணியாற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

விரைவில் அமையும் திமுக ஆட்சியில், பெண் குழந்தைகள், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள், பாலியல் வன் கொடுமை உள்ளிட்ட குற்றங்களை விசாரித்து தாமதமின்றி தண்டனை வழங்க மாவட்ட ரீதியாக தனி நீதி மன்றம் அமைக்கப்படும். தைரியமாக புகார் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் மாநில அளவில் ரகசியப் பிரிவு உருவாக்கப்படும்.

இவ்வாறு தளபதி மு.. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Comments