யாரை ஏமாற்றிட?
புதிய
வேளாண் சட்டங்களை ஆராயக் குழு: - மத்திய
அரசு அறிவிப்பு
குழு போடுதல், ஆணையம் அமைத்தல் என்பது
எல்லாம் பெரும்பாலும் அரசு, தான் சொல்லும்
கருத்தை இன்னொன்றின் வாயிலாகச் சொல்ல வைப்பதுதானே!
கடவுளுக்குக்
குளிருதோ?
காஞ்சி
காமாட்சி அம்மனுக்கு வெந்நீரில் சிறப்பு அபிஷேகம்.
ஏன் கடவுளுக்கு ரொம்பவும் குளிர்கிறதோ!
இந்தத்
தைரியம் எங்கிருந்து வந்தது?
தேசிய
ஜனநாயகக் கூட்டணியின் ஒருங்கிணைப்புக் குழு - தேர்தல் அறிவிப்பு
வெளியானதும் தமிழக முதலமைச்சர் வேட்பாளரை
அறிவிக்கும்: - பா.ஜ.க.
தேசிய செயலாளர் ராஜா அறிவிப்பு.
அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் ஜெயலலிதா
இருந்திருந்தால், இப்படியெல்லாம் கூறிட பி.ஜே.பி.,க்குத் தைரியம்
வருமா?
இதெல்லாம்
அங்கு சகஜமப்பா!
ஏசுவைச்
சுட்டவன் கோட்சே: - அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்
கம்ப ராமாயணத்தை எழுதியது சேக்கிழார் என்று கூறும் முதல்வரின்
அமைச்சரவையில் இப்படிப்பட்டவர்கள் இருப்பதில் ஆச்சரியம் என்ன?
அதுதான்
இது!
அருணாசலப்
பிரதேசத்தில் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின்
அய்க்கிய ஜனதா தளத்திலிருந்து மொத்தம்
ஏழு சட்டமன்ற உறுப்பினர்களில் அறுவர் பி.ஜே.பி.யில் இணைந்தனர்.
அந்தோ
பரிதாபம், பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!
தோளில் கையைப் போட்டே ஜேப்படி
செய்வது என்று கேள்விபட்டுள்ளோம் அல்லவா
- அதுதான் இதுவோ!
நிர்வாகம்
இலட்சணம்!
இங்கிலாந்தில்
இருந்து வந்த 405 பயணிகள் எங்கே? தேடும் பணி
தீவிரம்.
தமிழ்நாட்டின்
நிர்வாக இலட்சணத்துக்கு இது ஓர் எடுத்துக்காட்டே!
எச்சரிக்கை
ஆவடி திருமுல்லை வாயிலில் வாளியில் தண்ணீரைப் பிடித்து வைத்து, சூடுபடுத்துவதற்காக ஹீட்டர் கருவியை வைத்து சுவிட்சை ஆன்
செய்தபோது மின்சார தாக்குதல் ஏற்பட்டு - கணவன், மனைவி மரணம்!
இப்படி
சூடு படுத்தும் முறை வழக்கத்தில் உள்ளதுதான்.
இந்த ‘ஷாக்குக்கு' என்ன காரணம்? மின்துறையினர்
அறிவிப்பது அவசியம் - இல்லையெனின், இத்தகு மரணம் பெருகும்.