மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானிமீது மோசடி புகார் கூறிய பெண்மீது வழக்காம்

 கான்பூர்டிச.28 துப்பாக்கிச் சுடும் வீராங்கனை வர்திகா சிங்கை மத்திய மகளிர் ஆணைய உறுப்பினர் பதவி ஆசை காட்டி 1 கோடி கையூட்டு பெற்றதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மீது புகார் கூறிய நிலையில் அந்த வீராங்கனை மீதே வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது

 பாஜகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்மிருதி இரானிஇவர் மத்திய ஜவுளி மற்றும் பெண்கள் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் பதவி வகித்து வருகிறார்.

இந்தநிலையில்ஒலிம்பிக் விளையாட்டு வீரரும் உலக அளவிலான போட்டிகளில் துப்பாக்கிச் சுடும் வீராங்கனை யுமான  வர்திகா சிங்மத்திய மகளிர் ஆணையத்தில் உறுப்பினராவதற்குப் பணம் கோரியதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி மற்றும் மேலும் இருவர் மீது குற்றம் சாட்டி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

மத்திய அமைச்சரின் இரண்டு உதவியாளர்களான விஜய் குப்தா மற்றும் ரஜ்னிஷ் சிங் ஆகியோர்தன்னை மத்திய பெண்கள் ஆணையத்தில் உறுப்பினராக்குவதற்கு முதலில் 1 கோடி ரூபாய் கேட்டதாகவும்பின்னர் அதனைக் குறைத்து, 25 லட்சம் ரூபாய் கேட்டதாகவும்அவர்களில் ஒருவர் தன்னிடம் ஆபாசமாகப் பேசியதாகவும் குற்றம் சாட்டியுள்ள வர்திகா சிங்தன்னை அந்த ஆணையத்தின் உறுப்பினராக நியமித்துப் பொய்யான கடிதம் ஒன்றையும் அவர்கள் அளித்ததாகவும் அந்தப் புகாரில் கூறியுள்ளார்.

 இந்த நிலையில்  குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவ ரான விஜய் குப்தா அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதமாக  வர்திகா சிங் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளைக் கூறுவதாக காவல் துறையிடம் புகார் அளித்தார்அதனைத் தொடர்ந்து வர்திகா சிங் மீது வழக்குப் பதிவு செய்துள்ளதுஅமைச்சர் மீது சான்றுகளோடு குற்றம் சாட்டிய பெண் மீதே வழக்குப் பதிவு செய்யப் பட்டிருப்பது உத்தரப்பிரதேச அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழகத்தின் 38ஆவது மாவட்டமாக உதயமானது மயிலாடுதுறை

முதல்வர் தொடங்கி வைத்தார்

சென்னை,டிச.28, தமிழகத்தில், 32 மாவட்டங்கள் இருந்து வந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நெல்லை மாவட்டத்தை பிரித்து, தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. இதேபோல், விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சியும், வேலூர் மாவட்டத்தில் இருந்து திருப்பத்தூர், ராணிப்பேட்டையும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டும் என மொத்தம் 5 மாவட்டங்கள் புதிதாக உருவாக்கப்பட்டன.

புதிய மாவட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர்களும் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், நாகப்பட்டினம் மாவட்டத்தை பிரித்து, புதிதாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும் என்று கடந்த மார்ச் மாதம் அறிவிக்கப் பட்டது. அதற்கான அரசாணை ஏப்ரல் மாதம் வெளி யிடப்பட்டது.

இந்நிலையில் தமிழகத்தின் 38-ஆவது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

 


Comments