சென்னை, டிச.28 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை யொட்டி அ.இ.அ.தி.மு.க.வின் பிரச்சாரத் தொடக்க விழா பொதுக்கூட்டம் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நேற்று (27.12.2020) நடைபெற்றது.
அதில் பேசிய அ.இ.அ.தி.மு.க. மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி குறிப்பிட்டதாவது:
''50 ஆண்டுகால திராவிட இயக்க ஆட்சியில் தமிழ கத்தைச் சீரழித்து விட்டதாக சில கருங்காலிகள், சில தேசிய கட்சிகள் சில சந்தர்ப்பங்களில் சொல்கின்றனர். பெரியார் காலத்தில் இருந்து இந்த இயக்கத்தை அழிக்கவேண்டும் என்று ஒரு சமூகம் (பார்ப்பனர்கள்), ஒரு கூட்டம் கங்கணம் கட்டிக் கொண்டு இருக்கிறது'' என்று பேசினார் அ.இ.அ.தி.மு.க. மாநில துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி.