மும்பை சாயிபாபா கோவிலில் தீவிபத்து மூன்று பக்தர்கள் பலி

மும்பை, டிச.28 மும்பை காந்திவிலி யில் கோவிலில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று இளைஞர்கள் கருகி உயிரிழந்தனர்.

மும்பை காந்திவிலி பந்தர் பாகடி என்ற பகுதியில்  சாய்பாபா கோவில் உள்ளது. இந்த கோவி லில் நேற்று அதிகாலை 4.15 மணிக்கு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தக வல் தெரிவித்தனர். தீயணைப்பு படையினர் விரைந்து சென்று சுமார் 30 நிமிடம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தின் போது கோவில் பூட்டப்பட்டு இருந்தது. கோவிலுக்குள் மூன்று இளை ஞர்கள் படுத்துறங்கி உள்ளனர். பூட்டப்பட்ட கோவிலில் இருந்து அவர்களால் வெளியே வர முடி யாததால், மூன்று பேரும் தீயில் சிக்கி உடல் கருகினர். படுகாயங் களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர்கள் உடனடி யாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

ஆனால், செல்லும் வழியி லேயே 2 பேர் உயிரிழந்தனர். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Comments