சிங்கப்பூர் டாக்டர் தேவேந்திரன் மறைந்தாரே!

தமிழர் தலைவர் இரங்கல்

சிங்கப்பூரின் பிரபல சமூக நலத் தொண்டறச் செம்மலும், சிங்கப்பூர்  இந்தியர் வர்த்தக, தொழில் சபை, தமிழர் பேரவை போன்ற அமைப் புகளின் சீர்மிகு தலைவராக இருந்து அருந்தொண்டாற்றிய மனித நேயரும், ‘எம்டிஅய்எஸ்எனும் சிங்கப்பூர் நிர்வாக மேம்பாட்டு கல்விக் கழகத்தின் பொதுச்     செயலாளருமான  பெருமைக்குரிய டாக்டர் ஆர்.தேவேந்திரன்  (வயது 76) அவர்கள் டிசம்பர் 29 அன்று காலமானார் என்ற செய்தி அறிந்து மிகவும் வருந்துகிறோம்.

அவர் சிறந்த பண்பாளர் - சிங்கப்பூர் தமிழர்களில் ஒரு பொது மனிதராகவே  மதிக்கப்பட்டவர். சிங்கப்பூர் கல்வி அமைப்பு ஒன்றின் தலைவராக இருந்தபோது நமது பெரியார் - மணியம்மை  நிகர்நிலை   பல்கலைக் கழகத்துடன் புரிந் துணர்வு ஒப்பந்தம் ஏற்படுவதற்குக் காரணமாக இருந்தவர்.

அவரது பிரிவால் வாடும் சிங்கப்பூர் தமிழர் அமைப்பு களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் நமது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

 கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்  

சென்னை 

29.12.2020

Comments