இணையதள வழியில் தமிழில் கற்றல் திட்டங்கள்

சென்னை, டிச. 29- உலகின் மிகப்பெரிய கணிதம் - அறிவியல் துறைக் கான கல்விகற்றல் நிறுவனமான எட்டெக், இந்தியாவில் மிகப்பெரிய தனிப் பயனாக்கப்பட்ட BYJU’s இப்போது அதன் ஆன்லைன் கற்றல் திட்டங் களை தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது 4 முதல் 10ஆம் வகுப்புகளில் உள்ள மாணவர்களின் கணிதம், அறிவியல் பாடங் களைத் திறம்பட கற்க உதவுவதிலும், தமிழ்நாட்டின் சொந்த மொழியில் கற்க விரும்பும் மாணவர் களுக்குக் கற்றலைத் தடையற்றதாக உருவாக்குவதிலும், மேலும் தமிழில் ஆப்-அய் அறிமுகப்படுத்துவதன் மூலம் மாநிலத்தின் உள்ளார்ந்த பகுதி களில் இன்னும் பல மாணவர்களுக்குப் பயன் உண்டாக்கும் என இக்கல்வி நிறுவன தலைமை இயக்க அதிகாரி மிருணாள் மோகித் தெரிவித்துள்ளார்.

புத்தாக்க தொழில்நுட்பத்தில் கைக் கடிகாரங்கள்

கோயம்புத்தூர், டிச. 29- இந்தியாவில் மின்னனு சாதனங்கள், அலைபேசி கள் தயாரிப்பில் சிறந்த நிறுவனமாக செயல்பட்டு வரும் ரியல்மீ (realme), தனது புத்தாக்க தயாரிப்பாக ரியல்மீ வாட்ச் எஸ் தொடரை ரியல்மீ பட்ஸ் ஏர் புரோ மாஸ்டர் பதிப்போடு கைக்கடி காரங்களை அறிமுகப்படுத்தி யுள்ளது. இது உடலுக்குள் பதிக்கப்பட்ட 420 எம்ஏஎச் பெரிய பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. பேட்டரி ஆயுள் 14 நாட்கள் வரை நீடிக்கும். இரட்டை செயற்கைக்கோள் இருப்பிடத்தையும் ஆதரிக்கிறது. மற்றும் உயர்நிலை திரவ சிலிகான், நீடித்த, ஒளியுடன் விற் பனைக்கு வந்துள்ளது.

Comments