மும்பை,
டிச. 29- தந்தை பெரியார் அவர்களின்
47ஆவது ஆண்டு நினைவு நாள்
நிகழ்ச்சி மும்பை
திராவிடர் கழகத்தின் சார்பில் 24-12-2020 மாலை 7:30 மணிக்கு தாராவி பெரியார் சதுக்கத்தில்
நடைபெற்றது.
மும்பை
திராவிடர் கழகச்செய லாளர் இ.அந்தோணி
கடவுள் மறுப்புக்கூறி அனைவரையும் வரவேற்றார் மும்பை திராவிடர் கழகத்
தலைவர் பெ.கணேசன் தலைமை
வகித்தார் தந்தை பெரியார் படத்திற்கு
ஜெய்பீம் அறக்கட்டளை தலைவர் ஆர்.சுரேசு
குமார் மாலை அணிவித்து மரியாதை
செய்தார். தொடர்ந்து தோழர்கள் பெரியார் பாலாஜி, மும்பை கழக பொருளாளர்
அ.கண் ணன், ஜெய்பீம்
அறக்கட்டளை தோழர் இராஜாகுட்டி, விழித்
தெழு இயக்கத்தின் தலைவர் உ.பன்னீர்செல்வம்,
இந்திய கம் யூனிஸ்ட் கட்சியின்
தாராவி கிளைச் செயலாளர் ஞான.அய்யாப்பிள்ளை உரைக்கும் பின் மும்பை பகுத்தறிவாளர்
கழகத்தின் தலைவர் அ.இரவிச்சந்திரன்
இறுதி யாக உரையாற்றினார் இந்த
நிகழ்ச்சியில் மகிழ்ச்சி மகளிர் பேரவை தோழர்
சு.வெண்ணிலா, கழக ஆதரவாளர் கு.செல்வரத்தி னம் உட்பட பலர்
கலந்து கொண் டனர் முடிவில்
கழகத்தோழர் அய்.செல்வராஜ் நன்றி
கூறினார்.
குறிப்பு: தந்தை பெரியார் நினைவு
நாளில் மும்பை கழக செயலாளர்
இ.அந்தோணி ,கழக துணைச்செயலாளர் ஜெ.வில்சன் ஆகியோர் சயான் மருத்துவமனை யில்
குருதிக் கொடை வழங்கினர் என்பது
குறிப்பிடத்தக்கது.