நினைவுநாள் சூளுரை ஏற்போம் உறுதி!

தந்தையே      மானம்காக்க               தோன்றிட்டாய்

தலைவனே  மனிதம்தழைக்க      வென்றிட்டாய்

அறிவுலக       அறிஞனே      ஆரியத்தை   அடக்கிட்டாய்

அகிலம்            புகழ்ந்திடவே              உச்சத்திற்கு  உயர்ந்திட்டாய்

 

வரலாறு         உன்னை         பதிவிறக்கம் செய்து

வைரக்             கல்வெட்டில்              வடித்துப்         பார்க்குது

வாழும்            தமிழர்              அணி  வகுத்து

திராவிடம்     போற்றிப்         பண்     பாடுது

 

மரணித்தும்  வாழும்            உன்னை         நினைத்து

மனுக்கூட்டம்            மரண ஊளை              விடுகிறது

மதவெறிக்     கூட்டம்           சதிசெய்ய      கூடுகிறது

மதம்   பிடித்து             மமதையில்  ஆடுகிறது

 

உன்     சிலை அவாளை       உலுக்குகிறது

உன்     கைத்தடி         கனவிலும்     வெளுக்கிறது

உன்     தாடிமயிர்       கழுத்தில்        சுருக்கேற்றுகிறது

உன்     பெயரைக்       கேட்டாலே   பதறுகிறது

 

உன்னை         இழிவு               செய்வோரை              இடறிவிடுவோம்

சிலையை      சிதிலம்            செய்வோரை              சிறைப்பிடிப்போம்

களத்தில்         திராவிடம்     வெல்லும்      மிகுதி

நினைவுநாள்              சூளுரை           ஏற்போம்         உறுதி!

 

- முனைவர் அதிரடி .அன்பழகன்,

கிராம பிரச்சார அமைப்பாளர்,

திராவிடர் கழகம்.

 

Comments