ஆண்டு விழாவில் பங்கேற்ற பெரு மக்கள்
சென்னை,
டிச.30 இந்திய - ரஷிய நாட்டு மக்களின்
பண்பாட்டு உறவு களின் 95ஆம்
ஆண்டு விழா நிகழ்ச்சி சென்னை - ரஷிய
அறிவியல் பண் பாட்டு மய்யத்தில்
டிசம்பர் 23ஆம் நாள் மாலையில்
சிறப்பாக நடை பெற்றது.
இந்திய
- ரஷிய நாட்டு மக்களின் மொழி,
பண்பாடு மற்றும் வர்த்தக உறவுகளை பறைசாற்றும் விதமாக போற்றிப் பெருமைப்படும்
விதமாக நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ரஷிய நாட்டு துணைத்
தூதரும், ரஷ்ய அறிவியல் பண்பாட்டு
மய்யத்தின் இயக்குநருமான கென்னடி ரோகேலியா தலைமை வகித்தார். சென்னையில்
உள்ள ரஷிய தூதரக அதிகாரி
செர்னாவ் அன்டன் ஆன்ரீவிச் வரவேற்று,
வாழ்த்துரை வழங்கினார்.
இந்திய
ரஷிய நாடுகளின் நட்புறவு
பற்றி பல தளங்களில், பங்கேற்றுவரும்
பெருமக்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து
கொண்டு சிறப்பித்தனர்.
பிரம்மாஸ்
ஏவுகணையின் திட்ட இயக்குநராக இருந்தவரும்,
இந்திய - ரஷிய
வர்த்தக மற்றும் தொழில் அவையின் துணைத்
தலைவருமான முனைவர் சிவதாணுபிள்ளை, இந்திய பண்பாட்டு உறவு
பேரவையின் மண்டல அதிகாரி முகம்மது
இக்பால் கலேல், இந்திய திரைப்பட
ரசிகர் பேரவையின் பொதுச் செயலாளர் தங்கராஜ்,
இந்திய ஸ்பேஸ்கிட்ஸ் இயக்குநர் டாக்டர் சிறீமதி கேசன், ரஷியாவில் படித்த
மருத்துவப் பட்டதாரிகள் சங்கத்தின் தலைவர் டாக்டர் பாபு
கணேஷ், பிரபோஸ் குழுவின் தலைவர் கோபால கிருஷ்ணன்
இந்திய - ரஷிய திரைப் பட
அவையின் தலைவர் ரூஸ்வெல்ட் ஆகியோர்
உரையாற்றினார்.
பி. தங்கப்பன்
இந்திய
- ரஷிய கலாச்சார நட்புறவுக் கழகம் மற்றும் இந்திய
ரஷிய வர்த்தகம் மற்றும் தொழில் சபையின் பொதுச்
செயலாளர் பி. தங்கப்பன் உரையாற்
றுகையில் இந்திய - ரஷிய பண்பாட்டு உறவில்
திராவிட இயக்கங்களுக்கு உள்ள தொடர்பு, பங்களிப்பு
பற்றி நினைவு கூர்ந்து உரையாற்றினர்.
திராவிடர்
கழகம் பங்கேற்பு
நிகழ்ச்சியில்
பங்கேற்ற திராவிடர் கழகத்தின் பொருளாளர் வீ. குமரேசன் உரையாற்றும்
பொழுது, 1930களின் தொடக்கத்தில் தந்தை
பெரியார் ரஷியாவுக்கு சென்று வந்ததையும், 1980களின்
தொடக்கத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர்
கி. வீரமணிஅவர்கள் ரஷியாவிற்கு சென்று வந்ததையும் நினைவு
கூர்ந்து பேசினார். மேலும் தந்தை பெரியார்
ரஷியா சென்று வந்த பின்பு
தமிழ்நாட்டில் பிறந்த குழந்தைகளுக்கு, ரஷியா,
மாஸ்கோ என்று பெயர் சூட்டி
பண்பாட்டு உறவைப் பேணியதையும் தொடர்ந்து
திராவிடர் கழகம் இன்றளவும் இந்திய
ரஷிய பண்பாட்டு உறவிற்கு பங்களிப்பு ஆற்றி வருவதையும் விரிவாகப்
பேசினார்.
நிகழ்ச்சியை
ஒட்டி இந்திய - ரஷிய பண்பாட்டு உறவில்
கடந்த காலங்களில் சென்னையிலும், ரஷியாவிலும் நடை பெற்ற நிகழ்ச்சிகளின்
ஒளிப்படக் கண் காட்சி ஒன்றும்
அமைந்து திறக்கப் பட்டது.