அயோத்தி, டிச.30 அயோத்தியில் ராமன் கோயில் கட்டுவதற்கு நிதி திரட்டல் என்கிற பெயரால் வகுப்புவாத வன்முறைகள் அரங்கேற்றம் ஒருபக்கம் என்றால், ராமன் கோயில் அறக்கட்டளையியிலிருந்து ரூ.6 லட்சம் பணம் போலி காசோலைமூலம் கொள்ளை போயுள்ள தகவலும் வெளியாகியுள்ளது. மோசடியாக பணத்தை கொள்ளையடித்தவர்களில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள் ளார்.
ராமன்
கோயில் அறக்கட்டளையின் வங்கிக் கணக்கில் இருந்து 6 லட்சம் ரூபாய் திருடப்பட்டுள்ளதாக
காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2.5 லட்சம் மற்றும் 3.5 லட்சம்
என இரண்டு காசோலை நகல்கள்
மூலம் மொத்தம் 6 லட்சம் ரூபாய் கொள்ளை
போயுள்ளது. இந்த காசோலைகளில் அறங்காவலர்களின்
போலி கையெழுத்தும் போடப்பட்டுள்ளதாக அயோத்தி காவல்துறை டிஅய்ஜி தீபக் குமார் தெரிவித்துள்ளார்.
ஊழல் அம்பலமானது
இந்த தொகை மராட்டிய மாநிலத்தில்
உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளைக்கு
அனுப்பப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மூன்றாவது
காசோலை நகலில் 9.86 லட்சம் ரூபாயை திருட
முயற்சித்தபோது லக்னோவில் உள்ள எஸ்பிஅய் வங்கி
கிளையில் ஊழல் அம்பலமானது. இவ்வளவு
பெரிய தொகைக்கான காசோலையில் கையெழுத் திடப்பட்டதா என ராமன் கோயில்
அறக்கட்டளை செயலாளர் சம்பத் ராயிடம் வங்கி
மூத்த அதிகாரி தொடர்புகொண்டு தகவல் கேட்டார். அப்போது,
அவ்வளவு தொகைக்கு கையெழுத்திடவில்லை என சம்பத் ராய்
சொன்னதைத் தொடர்ந்து உடனடியாக பரிமாற்றம் முடக்கப்பட்டது.
நால்வர்
கைது - ஒருவர் தலைமறைவு
இந்த மோசடி தொடர்பாக வழக்கு
பதிவு செய் யப்பட்டு விசாரணை
நடைபெற்று வந்தநிலையில், இவ்வழக்குடன் தொடர்புடைய பிரஷாந்த் மஹாவால் ஷெட்டி, சங்கர் சீத்தாராம் கோபாலே,
சஞ்சய் தேஜ்ராஜ், விமல் லல்லா ஆகியோரை
காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
எனினும்,
மோசடியின் மூளையாக செயல்பட்ட நபர் இன்னும் தேடப்பட்டு
வருகிறார். இவர்கள் அனைவருமே மராட்டிய மாநிலம் தானே மாவட் டத்தை
சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரி
வித்துள்ளனர்.